Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

IV. சுருக்கமான விடையளி

1. புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

விடை:  

புவியின் நான்கு கோளங்கள் :

• புவியில் பாறையாலான திடமான மேற்பரப்பு பாறைக் கோளம் ஆகும்.

• புவியில் நீரினால் சூழப்பட்ட பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராவி சூழ்ந்த நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.

• புவியைச் சூழ்ந்த காற்றால் ஆன அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.

உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.

 

2. புவியின் உள் அடுக்குகள் யாவை?

விடை:  

புவியின் உள் அடுக்குகள் :

• மேலோடு 

• கவசம்

• கருவம்

 

3. புவித்தட்டுகள் - வரையறு

விடை:

புவித்தட்டுகள்

 • பாறைக்கோளத்தின் புவித்தட்டுகள் முதன்மை புவித்தட்டுகள் மற்றும் சிறிய புவித்தட்டுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

• கவசத்தில் காணப்படும் வெப்ப சக்தி புவித்தட்டுகள் நகர்வதற்கு காரணம். புவித்தட்டுகள் மோதுவதால் மலைத்தொடர்கள் மற்றும் ஒழங்கற்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.

 

4. ஆழிப்பேரலைகள் (Tsunami) என்றால் என்ன?

விடை:

• கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு, கடலோர நிலச் சரிவுகள் காரணமாக கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன. இப்பேரலைகள் ஆழிப்பேரலைகள் அல்லது கடற்கோள் எனப்படுகின்றன. (சுனாமி என்பது இவ்வலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல்)

• ஆழிப்பேரலைகளின் சராசரி வேகம் மணிக்கு 500 கி.மீ. நீளம் 600 கி.மீ., உயரம் 15 மீட்டர்.

 

5. எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூறுகள் யாவை?

விடை:

எரிமலை :

• புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படும்.

• மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு லாவா எனப்படும்.

எரிமலைக் கூறுகள் :

• பாறைக்குழம்பு தேக்கம்

• துவாரங்கள்

• எரிமலைக்கூம்புகள்

• எரிமலை வாய்

 

6. புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?

விடை:

புவி அதிர்ச்சி :

• புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.

• புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி புவி அதிர்ச்சி ‘கீழ் மையம்' எனப்படும்.

• புவி அதிர்ச்சி கீழ்மையத்தின் நேர்உயரே புவி மேற்பரப்பில் புவி அதிர்ச்சி ‘மேல் மையம்' அமைந்துள்ளது.

• புவி அதிர்ச்சி கீழ்மையத்திலிருந்து அதன் தாக்கம் புவியின் மேல் மையத்தில் தான் அதிகமாகக் காணப்படும்.

 

7. புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

விடை:

புவி அதிர்வலைகள் :

• புவி அதிர்ச்சி உருவாக்கும் அதிர்வலைகள் புவி அதிர்வலைகள்' எனப்படும். ஊடுருவிச்செல்லும் பாதையைப் பொறுத்து இவ்வதிர்வலைகளின் தன்மை, விசை மற்றும் வேகம் மாறுபடும்.

 வகைகள் :

• முதன்மை அலைகள் (அ) ‘P' அலைகள்

• இரண்டாம் நிலை அலைகள் (அ) 'S' அலைகள்

• மேற்பரப்பு அலைகள் (அ) 'L' அலைகள்

 

8. பசிபிக் நெருப்பு வளையம் பற்றி குறிப்பு எழுதுக.

விடை:

• பசிபிக் நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு வில் ஆகும். அங்கு பல எரிமலைகள் மற்றும் பூகம்பங்கள் உருவாகின்றன.

• இப்பகுதி பசிபிக் ரிம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பசிபிக் சுற்றியுள்ள நாடுகளின் கடலோர பகுதிகளை குறிக்கிறது.

• உலகின் செயலற்ற எரிமலைகள் மற்றும் செயலில் எரிமலைகளில் முக்கால்வாசி இங்கு உள்ளன.

Tags : Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes : Answer in brief Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்