நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes
VII. விரிவான விடையளி.
1.
புவி
அமைப்பை
விவரி.
விடை:
புவியின் அமைப்பு புவியின் உள்ளமைப்பு
• மேலோடு
• கவசம்
• கருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலோடு: (5 கி.மீ. முதல் 30 கி.மீ. தடிமன்)
• புவியின் மேலடுக்கு புவிமேலோடு ஆகும். திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. இதில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (Ai) அதிகம் காணப்படுவதால் சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.
• புவி மேலோடு, கண்டமேலோடு, கடலடி மேலோடு என இருவகைப்படும். (கடலடியை விட கண்டமேலோடு அதிக தடிமன் கொண்டது)
கவசம்: (2900 கி.மீ. தடிமன்)
• புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும். இதில் சிலிகா (Si) மற்றும் மக்னீசியம் (Mg) அதிகம் காணப்படுவதால், ‘சிமா' (SIMA) என அழைக்கப்படுகிறது.
• மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன. (உருகிய நிலை பாறைக்குழம்பு ‘மாக்மா). கருவம்: (3480 கி.மீ. தடிமன்)
• கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். மிகவும் வெப்பமானது. இதில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால், நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.
• உட்கருவம் திடநிலையிலும், வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது. புவியீர்ப்பு விசை, காந்தப்புலம் உருவாகிறது.
2.
புவியின்
அகச்செயல்
முறைகள்
மற்றும்
புறச்செயல்
முறைகள்
குறித்து
எழுதுக.
விடை:
புவி அகச்செயல் முறைகள்:
• புவியின் உட் பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகள் அகச் செயல் முறைகள் எனப்படும். இவ்விசைகள் புவி நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
• புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவி மேலோட்டின் கீழ் காணப்படும் பொருட்கள் வெளித்தள்ளப்படுகின்றன.
• புவித்தட்டுகள் நகர்வு, புவி அதிர்வு (நிலநடுக்கம்), எரிமலை வெடிப்பு ஆகியவை அகச்செயல் முறைகள் ஆகும்.
புவிபுறச்செயல் முறைகள்:
• புவியில் உள்ள பொருட்களின் மீது ஆழத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருட்கள் மீது மாற்றத்தை உண்டாக்கும் செயல்முறைகள் ‘புவி புறச் செயல்முறைகள்' எனப்படும்.
• ஆறுகள், பனியாறுகள், காற்று, கடலலைகள் போன்ற விசைகள் புவிபுறச் செயல் காரணிகளாகும். புறச் செயல் காரணிகள் அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய செயல்களைச் செய்கின்றன.
3.
எரிமலைகள்
வெடிக்கும்
காலக்கட்டத்தைப்
பொறுத்து
அதன்
வகைகளை
விவரி.
விடை:
எரிமலைகள்:
• புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே 'எரிமலை வெடிப்பு' எனப்படும். செயல்படும் காலத்தின் அடிப்படையில்
i. செயல்படும் எரிமலை
ii. உறங்கும் எரிமலை
iii. தணிந்த எரிமலை என மூவகைப்படும்.
i செயல்படும் எரிமலை:
• நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் ‘செயல்படும் எரிமலைகள்' எனப்படுகின்றன.
எ.கா. செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ii. உறங்கும் எரிமலை
• நீண்டகாலமாக எரிமலைச் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் ‘உறங்கும் எரிமலை' எனப்படும். (திடீரென்று வெடிக்கும், உயிர்ச்சேதம், பெருட்சேதம் ஏற்படலாம்)
எ.கா. ஃபியூஜி எரிமலை - ஜப்பான்
iii. தணிந்த எரிமலை:
• எந்த வித எரிமலைச் செயல்பாடுகளும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் ‘தணிந்த எரிமலைகள்' ஆகும்.
எ.கா. கிளிமஞ்சாரோ எரிமலை - தான்சானியா
4.
எரிமலைகளால்
உண்டாகும்
விளைவுகள்
யாவை?
விடை:
எரிமலையின் விளைவுகள்:
நன்மைகள்:
• எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது. மண்ணை வளமுள்ளதாக்கி வேளாண் தொழிலை மேம்படுகிறது.
• எரிமலைப் பகுதிகள் புவி வெப்ப சக்தியை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
• உறங்கும் மற்றும் செயல்படும் எரிமலைகள் உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
தீமைகள்:
• எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன. பாறைக் குழம்பு பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதம் உண்டாக்குகிறது.
• வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சுத் திணறலையும் உண்டாக்குகிறது.
• சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து இடையூறையும் உண்டாக்குகிறது.