பாறைகள் (Rocks)
புவிமேலோடு பாறைகளின் உறைவிடமாகும். தாதுக்களின் கலவையே பாறையாகும். பாறைகள் கிரானைட் போன்று திடமாகவோ, களிமண் போன்று மென்மையாகவோ, மணல் போன்று துகள்களகவோ காணப்படுகிண்றன.
பாறைகள் உருவாகும் விதத்தின் அடிப்படையில் அவற்றைப் பின்வருமாறு பிரிக்கலாம்.
● தீப்பாறைகள் (Igneous
Rocks)
● படிவுப் பாறைகள் (Sedmentary
Rock)
● உருமாறிய பாறைகள் (Matanaphic
Rocks)
உங்களுக்குத் தெரியுமா?
2011 வரை உலகிலேயே மிக ஆழமான பகுதி இரஸ்யாவின் மர்மான்ஸ்க்
(Mumansk)இல் உள்ள கோலா சூப்பர் ஹோல் Kola Super Hole) (12,262
மீ ஆழம்)
ஆகும்.
2012ல் Z-44 சாவ்யோ கிணறு
(இரஷ்யா ) (12,376 மீ ஆழம்)
மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது.
இது துபாயில் உள்ள புருஜ் காலிஃபாவை விட 15 மடங்குப் பெரியது.
புவியின் உட்புறத்தை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
தகவல் பேழை
ஜோர்டானில் உள்ளமிகப்பழமையான நகரமான பெட்ரா நகரம் முழுவதும் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டிடக் கலைச்சான்றுகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், கர்நாடகாவில் உள்ள ஐஹோல் பதாமி கோவில்கள், ஒடிசாவில் உள்ள கோனார்க் கோவில், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கோவில் இதற்குச் சான்றுகளாகும்.
தீப்பாறைகள் (Igneous
Rocks)
'இக்னிஸ்(Ignis)
என்ற இலத்தீன் சொல்லிற்கு நெருப்பு என்பது பொருளகும். புவியின் உள் ஆழத்தில் பாறைகள் உருகிய நிலையில் காணப்படுவதே பாறைக்குழம்பு (Magma).
எனப்படும். பாரைக் குழம்பானது புவியின் மேவேட்டில் வெளிப்படுவதே ‘லாவா’ எனப்படுகிறது. பாறைக் குழம்பு வெப்பம் தணிவதால் குளிர்ந்து பாறையாகிறது. குளிர்ந்த இப்பாறைகள் தீப்பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன. தக்காண பீடபூமி தீப்பாறைகளால் உருவானதாகும். (உதாரணம்) கருங்கல் பாசல்ட் தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்றும் தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் மற்ற பாறைகள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்பாறைகளிலிருந்தே உருவாகின்றன.
படிவுப்பாறைகள் (Sadmartary
Rock)
“செடிமென்ட்” (sediment) என்ற இலத்தீன் சொல்லிற்கு படிதல் என்பது பொருளாகும்பாறைகள் சிதைவுற்று துகள்களகி ஆறுகள்,
பனியாறுகள், காற்று போன்றவற்றால் கடத்தப்பட்ட படிவுகள் அடுக்கடுக்காகப் படியவைக்கப்படுகின்றன. இவ்வாறு படியவைக்கப்பட்ட படிவுகள் பல மில்லியன் வருடங்களுக்கு பிறகு படிவுப் பாறைகளாக உருவாகின்றன.
இப்படிவுகளில் தாவரங்கள், விலங்கினங்கள் படிந்து தொல்லுயிர் எச்சப் படிமங்களாக (Fossils) மாறுகின்றன. படிவுப்பாறைகளுக்கான உதாரணம்:- மணற்பாறை,
சுண்ணாம்புப்பாறை, கண்ண ம்பு ஜிப்சம், நிலக்கரி மற்றும் கூட்டுப்பாறைகள் (Carglamsate).
உருமாறிய/ மாற்றுருவப்பாறைகள் (Metamorphic
Rocks)
'மெட்டமார்பிக்' என்ற சொல் 'மெட்டமார்பிசஸ்' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் உருமாறுதல் என்பதாகும். தீப்பாறைகளும், படிவுப்பாறைகளும் அதிக வெப்பத்திற்கும்,
அழுத்தத்திற்கும் உட்படும் போது அதனுடைய அமைப்பும்,
குணாதிசயங்களும் மாற்றம் அடைகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைகளே உருமாறியப்பாறைகள் எனப்படுகின்றன. கிரானைட்,
நீஸ் ஆகவும், பசால்ட், சிஸ்ட் ஆகவும், சுண்ண ம்புப் பாறை சலவைக் கல்லாகவும் மணற்பாறை, குவார்ட்சைட் பாறையாகவும் உருமாறுகிறது.
பாறை சுழற்சியானது ஒரு தொடர் நிகழ்வாகும். இச்சுழற்சியினால் தீப்பாறை படிவுப்பாறை,
உருமாறியப்பாறைகள் ஒரு அமைப்பிலிருந்து,
மற்றொன்றாக உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன
செயல்பாடு
கொடுக்கப்பட்டுள்ள பாறைச் சுழற்சி வரை படத்தை உற்று நோக்கி அதன் செயல்பாடுகளை உன் சொந்த வாக்கியத்தில் விவரி