நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes
VI. வேறுபடுத்துக.
1. கருவம் மற்றும் மேலோடு
விடை:
2.
மேல்மையம்
மற்றும்
கீழ்மையம்
விடை:
மேல்மையம்:
1. புவி அதிர்ச்சி கீழ் மையத்தின் நேர் உயரே புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள மையத்திற்கு மேல் மையம் என்று பெயர்.
2. புவி அதிர்ச்சியின் தாக்கம் புவியின் மேல்மையத்தில் தான் அதிகம் காணப் படுகிறது.
கீழ்மையம்:
1 புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி புவி அதிர்ச்சி கீழ்மையம்' எனப்படுகிறது.
2 புவி அதிர்வலைகள் கீழ்மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்கின்றன.
3.
விலகும்
எல்லை
மற்றும்
இணையும்
எல்லை
விடை:
விலகும் எல்லை:
1. புவித்தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகும் போது மேக்மா எனப்படும் பாறைக்குழம்பு புவிக்கவசத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது
2. இது விலகும் எல்லை எனப்படும்.
இணையும் எல்லை:
1. புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது சில நேரங்களில் கீழ் நோக்கு சொருகுதல் நிகழ்வு நடைபெறும். இப்பகுதி புவித்தட்டுகள் அமிழ்தல் மண்டலம் எனப்படுகிறது..
2. இது இணையும் எல்லை எனப்படும்.
4.
முதன்மை
அலைகள்
மற்றும்
இரண்டாம்
நிலை
அலைகள்
.
விடை:
முதன்மை அலைகள்:
1. திட, திரவ, வாயுப் பொருட்கள் வழியாகப் பயணிக்கும்.
2. இதன் சராசரி வேகம் வினாடிக்கு 5.6 கிலோ மீட்டர் முதல் 10.6 கிலோ மீட்டர் வரை வேறுபடும்.
3. முதன்மை அலைகள் மற்ற அலைகளை விட வேகமாகப் பயணித்து புவி ஓட்டினை முதலில் அடைகின்றன.
இரண்டாம் நிலை அலைகள்:
1. திடப்பொருட்கள் வழியாக மட்டுமே பயணிக்கும்.
2. இதன் சராசரி வேகம் வினாடிக்கு 1 கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வரை இருக்கும்.
3. பயணிக்கும் திசைக்குச் செங்குத்தாகப் புவியில் அசைவினை ஏற்படுத்தும் குறுக்கலைகள்.
5.
கவச
எரிமலை
மற்றும்
கும்மட்ட
எரிமலை
கவச
எரிமலை
விடை:
கவச எரிமலை:
1. அதிக பிசு பிசுப்புடன் கூடிய பாறைக் குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் போன்ற வடிவத்தில் மென்சரிவுடன் காணப்படும். இவ்வகை எரிமலை கேடய எரிமலை எனப்படும்.
2. (எ.டு) மௌனலோவா எரிமலை ஹவாய்த் தீவு
கும்மட்ட எரிமலை:
1. சிலிகா அதிகமுள்ள எரிமலைக் குழம்பு அதிகப் பிசுபிசுப்புடன் வெளியேறுவதால் நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும். இது கும்மட்ட எரிமலை. எனப்படும்.
2. (எ.டு) பாரிக்கியூட்டின் எரிமலை – மெக்சிகோ