Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | இருபரிமாண (2D) வடிவங்களின் சுழற்சிகளை, உள்ளுணர்வால் ஆராய்தல்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இருபரிமாண (2D) வடிவங்களின் சுழற்சிகளை, உள்ளுணர்வால் ஆராய்தல் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  21.09.2023 05:54 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

இருபரிமாண (2D) வடிவங்களின் சுழற்சிகளை, உள்ளுணர்வால் ஆராய்தல்

இருபரிமாண (2D) வடிவங்களின் சுழற்சிகளை, உள்ளுணர்வால் ஆராய்தல்

இருபரிமாண (2D) வடிவங்களின் சுழற்சிகளை, உள்ளுணர்வால் ஆராய்தல்

ஒரு வரைபட அட்டையில் ஒரு வட்டம் வரைக பிறகு வட்டத்தை அந்த அட்டையிலிருந்து வெட்டி எடுக்கவும். அந்த வட்டத்தை நான்கு பாகங்களாக மடித்து திரும்ப திறந்திடுக. படத்தில் உள்ளவாறு வட்டத்தின் விளிம்புகளில் படங்களை வரைந்து ஒட்டுக...


ஒரு வெள்ளைத்தாளில் காகித மடிப்பு முறையில் இரண்டு செங்குத்து கோடுகளை வரைக. அதன் மையப்புள்ளியில் குண்டுசியினை பொருத்தி அதன் மேல் சுழல் அட்டையினை வைக்கவும். சுழல் அட்டையின் கோடுகளும் கீழே உள்ள வெள்ளைத்தாளின் கோடுகளும் பொருந்துமாறு அமைத்துக் கொள்ளவும். இப்பொழுது மேலே உள்ள சுழல் அட்டையினை சுழற்ற ஒவ்வொரு கால்பகுதியிலும் உள்ள படங்கள் இடம் நகர்வதைக் காணலாம்.

ஒரு நிலையான மையப் புள்ளியினைப் பொறுத்து சுழல்வதை சுழற்சி என்கிறோம். குண்டுசி பொருத்தப்பட்டுள்ள "O" என்பது சுழற்சி மையம் ஆகும். இதனை ஒப்பிட்டு ஒவ்வொரு நகர்விலும் படங்கள் சுழற்சி அடைந்துள்ளதை காணலாம். ஒரு முழுமையான சுழற்சிக்கு பிறகு மீண்டும் தொடங்கிய நிலையினை அடைகிறது.

இதிலிருந்து நாம் அறிவது

நாம் அட்டையை மையப்புள்ளியைப் பொறுத்து சுழற்றும் போது அதற்கேற்ப படங்களும் சுழல்கிறது. அந்தப் புள்ளியானது "சுழற்சியின் மையப்புள்ளி" என அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு

சதுரத்தின் சுழற்சியை உற்றுநோக்குக.


 

சிந்திக்க

புகைபோக்கி காற்றாடியில் கால்சுழற்சிக்கும் (1/4) மற்றும் அரைச்சுழற்சிக்கும் (1/2), காற்றாடியின் இறக்கைகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா?


Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Able to explore rotations of familiar 2-D Shapes intuitively Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : இருபரிமாண (2D) வடிவங்களின் சுழற்சிகளை, உள்ளுணர்வால் ஆராய்தல் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்