Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | வலைகளைக்கொண்டு முப்பரிமாண உருவங்களை உருவாக்குதல்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - வலைகளைக்கொண்டு முப்பரிமாண உருவங்களை உருவாக்குதல் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  21.09.2023 06:36 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

வலைகளைக்கொண்டு முப்பரிமாண உருவங்களை உருவாக்குதல்

வலையமைப்பு என்பது மடிப்பதன் மூலம் முப்பரிமாண உருவத்தை உருவாக்க கூடிய இரு பரிமாண வடிவமாகும்.

வலைகளைக்கொண்டு முப்பரிமாண உருவங்களை உருவாக்குதல்


கனசெவ்வத்தின் வலை


ஒரு சிறிய அட்டைப்பெட்டியை திறந்து அதன் வலையமைப்பை ஒரு வெள்ளைத்தாளில் வைத்து நகலெடு. மேலும் அட்டைப்பெட்டியின் அடிப்பாகங்களை வரைக.

ஆசிரியர் : அட்டைப்பெட்டியில் எத்தனை பக்கங்கள் உள்ளன?

மாணவர் : அட்டைப்பெட்டியில் 6 பக்கங்கள் உள்ளன. ஐயா

ஆசிரியர் : மிகச் சரியாக சொன்னாய்! உன்னால் அதை மீண்டும் உருவாக்க முடியுமல்லவா?

மாணவர் : ஆமாம். ஐயா

ஆசிரியர் : நன்று

வலையமைப்பு என்பது மடிப்பதன் மூலம் முப்பரிமாண உருவத்தை உருவாக்க கூடிய இரு பரிமாண வடிவமாகும்.

 

இவற்றை முயல்க

கொடுக்கப்பட்ட வடிவங்களில் விடுபட்ட புள்ளிகளைக் கொண்டு (Dotted line) பக்கங்களை மடித்தால் கனசெவ்வக பெட்டியாக உருவாகக்கூடிய வடிவத்திற்கு () குறியீடு செய்யவும்.


 

கனசதுரத்தின் வலை


விடுபட்ட புள்ளிகள் கொண்ட கோடுகளை (Dotted line) சதுர வடிவ பக்கங்களின் மீது மடித்து, ஆறு சமமான சதுரங்களை கொண்ட வலையிலிருந்து கனசதுரத்தை உருவாக்கலாம்.

 

உருளையின் வலை


ஒரு செவ்வகத்தையும் இரண்டு சமமான வட்டங்களையும் உற்றுநோக்குக. இந்த வலையானது உருளையை உருவாக்குகிறது. செவ்வகத்தின் அகலவாக்கில் இரண்டு விளிம்புகளையும் இணைத்து நீளத்தின் எல்லையில் ஒரு வட்டத்தை மேற்பாகத்திலும் மற்றொரு வட்டத்தை அடிப்பாகத்திலும் படத்தில் காட்டியது போல் இணைக்க நமக்கு உருளை வடிவம் கிடைக்கிறது.

செவ்வகத்தின் நீளமானது வட்டத்தின் சுற்றளவினை அமைக்கிறது. எனவே செவ்வகத்தின் நீளமும் வட்டத்தின் சுற்றளவும் சமம்.

 

கூம்பின் வலை:


படத்தை உற்று நோக்குக. வட்ட வடிவ பகுதியின் பக்கங்களையும், அதே போன்று வட்ட கோண பகுதியின் வில்லையும் அடிப்பகுதியில் இணைக்கும் போது நமக்கு கூம்பு வடிவம் கிடைக்கும்.

வட்டவில்லின் நீளமானது வட்டத்தின் சுற்றளவினை அமைக்கிறது. எனவே, வட்ட வில்லின் நீளமும் வட்டத்தின் சுற்றளவும் சமம்.

 

செயல்பாடு

வலையமைப்பையும் அதை மடித்தால் கிடைக்கக்கூடிய உருவத்தையும் பொருத்துக.


Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : make the shapes of cubes, cylinders and cones using nets Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : வலைகளைக்கொண்டு முப்பரிமாண உருவங்களை உருவாக்குதல் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்