Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | முப்பரிமாண உருவங்களின் பண்புகள்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - முப்பரிமாண உருவங்களின் பண்புகள் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

முப்பரிமாண உருவங்களின் பண்புகள்

பண்புகள்: கனசதுரம், கனசெவ்வகம், உருளை, கோளம், கூம்பு

முப்பரிமாண உருவங்களின் பண்புகள்.

 

கனசதுரம்

பண்புகள்:

❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

❖ இது ஆறு முகங்களை கொண்டது.

❖ இதன் அனைத்து பக்கங்களும் சமம்

❖ இது 8 முனைகளையும் 12 விளிம்புகளையும் கொண்டது.


எடுத்துக்காட்டுகள்


 

கனசெவ்வகம்

பண்புகள்

❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

❖ இது ஆறு முகங்களைக் கொண்டது

❖ இதன் எதிரெதிர் பக்கங்கள் சமம்.

❖ இது 8 முனைகளையும் 12 விளிம்புகளையும் கொண்டது.


எடுத்துக்காட்டுகள்


 

உருளை

பண்புகள்

❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

❖ இரண்டு சமதளங்களையும் ஒரு வளைதளத்தையும் கொண்டது.

❖ இரண்டு சமதளங்களுக்கு இடையே உள்ள தொலைவு உயரம் ஆகும்.


எடுத்துக்காட்டுகள்



கோளம்

பண்புகள்

❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

❖ இதற்கு ஒரேயொரு வளைதளம் மட்டுமே உண்டு.

❖ வளைதளத்தில் உள்ள அனைத்து புள்ளிகளும் மையப்புள்ளியிலிருந்து சம தொலைவில் இருக்கும்.

❖ இதற்கு முனைகளும் விளிம்புகளும் இல்லை.


எடுத்துக்காட்டுகள்


 

கூம்பு

பண்புகள்

❖ இது ஒரு முப்பரிமாண உருவம் (3D) ஆகும்.

❖ இது ஒரு சமதளமும் ஒரு வளைதளமும் கொண்டது.

❖ இது ஒரு முனையைக் கொண்டது.

❖ கூம்பின் முனையிலிருந்து அடிப்பாகத்தின் நடுப்புள்ளி வரை உள்ள தொலைவு உயரம் ஆகும்.


எடுத்துக்காட்டுகள்


 

செயல்பாடு

நம்மை சுற்றியுள்ள முப்பரிமாண (3D) பொருள்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக


பின்வரும் முப்பரிமாண உருவங்களை உற்றுநோக்கி மனிதரின் பார்வையில்  தெரியும் வடிவத்தை (✔) குறியிடவும்.



Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Draw 3-D shapes from 2-D Shapes Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : முப்பரிமாண உருவங்களின் பண்புகள் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்