Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | கோணங்களின் அறிமுகம்

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கோணங்களின் அறிமுகம் | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  16.10.2023 10:32 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

கோணங்களின் அறிமுகம்

பாலங்கள், கட்டடங்கள், செல்லிடை பேசியின் கோபுரங்கள், விமானத்தின் இறக்கைகள், மிதிவண்டிகள், சன்னல்கள், கதவுகள் என நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்திலும் கோணங்கள் உள்ளன.

கோணங்களின் அறிமுகம்

 

1. அன்றாட வாழ்வில் கோணங்கள்.

பாலங்கள், கட்டடங்கள், செல்லிடை பேசியின் கோபுரங்கள், விமானத்தின் இறக்கைகள், மிதிவண்டிகள், சன்னல்கள், கதவுகள் என நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்திலும் கோணங்கள் உள்ளன.


 

கோணம்

இரு கோடுகள் அல்லது கதிர்கள் ஒரு பொதுப் புள்ளியிலிருந்து விலகும் போது கிடைக்கும் வடிவத்தை கோணம் என்கிறோம்.

ஆசிரியர் : இந்த படம் எதைக் காட்டுகிறது?


இராமு : இந்த படம் கோணத்தை காட்டுகிறது. ஐயா ! கோணத்திற்கு பெயர் இருக்கிறதா?

ஆசிரியர் : ஆமாம், கோணங்களுக்கு பெயர் உண்டு. இந்தப் படத்தில் இரண்டு கோட்டுத்துண்டுகளை உங்களால் பார்க்க முடிகிறதா? அதனுடைய பெயர் என்ன?

இராமு : ஐயா, இரண்டு கோட்டுத்துண்டுகளுக்கு இடையில் கோணம் உள்ளது. அவை BA மற்றும் BC.

ஆசிரியர் : இரண்டு கோட்டுத்துண்டுகளுக்கும் பொதுப்புள்ளி எது?

இராமு : B ஆனது பொதுப்புள்ளியாகும்.

ஆசிரியர் : இந்த ரெண்டு கோட்டுத்துண்டுகளும் ஒரு கோணத்தை உருவாக்குகிறது. பொதுப்புள்ளி B என்பது முனையாகும். BA யும் BC யும் கோணத்தின் புயங்கள் ஆகும்.

இராமு : இந்த படத்தில் உள்ள கோணத்தை நாம் எப்படி அழைக்க முடியும்?

ஆசிரியர் : ஒரு கோணத்தை மூன்று எழுத்துக்களை கொண்டு குறிப்பிடலாம். மையத்தில் உள்ள எழுத்தானது கோணத்தின் முனையாகும்.

இராமு : ABC என்பது கோணத்தின் பெயராகும். ஐயா, நான் சொன்னது சரியா?

ஆசிரியர் : ஆமாம் கோணத்தை நாம் கோணம் ABC என குறிப்பிடலாம்.

இராமு : ஐயா, கோணம் ABC யை கோணம் CBA என நாம் எழுத முடியுமா?

ஆசிரியர் : முடியும், கோணம் ABC மற்றும் கோணம் CBA யும் சமம். கோணத்தை என்ற குறியில் குறிக்கலாம்.

ஆகவே ABC என்ற கோணத்தை நாம் ABC என எழுதலாம்.




கண்டுபிடி:

இப்படத்தில் உள்ளேயும், வெளியேயும் உருவாகும் கோணங்களை வண்ணப் பென்சில்கள் கொண்டு குறிக்கவும்.


செயல்பாடு

உனது முழங்கையில் உருவாகும் கோணத்தை கவனிக்கவும் அவற்றை குச்சிப்படமாக வரையவும். ஆசிரியரிடமும் உங்கள் நண்பர்களுடனும் அவற்றை கலந்துரையாடுக.

செயல்திட்டம்:

உனக்குப் பிடித்த படங்களை சேகரித்து, ஒரு அட்டையில் ஒட்டுக. அவற்றில் உள்ள கோணங்களை வரைந்து ஆசிரியரிடம் காட்டுக.


உங்களுக்குத் தெரியுமா?

'Angilos' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து கோணம் என்ற வார்த்தை உருவானது. நேராக இல்லாமல் வளைவானது என்பது இதன் பொருளாகும். முழங்கால் மற்றும் கால் பாதம் இணையும் இடத்தை கணுக்கால் (Ankle) என்கிறோம்.



2. கோணங்களின் வகைகள்

இரு மரக்கட்டைகளை இணைத்து பல்வேறு கோணங்களை உருவாக்கலாம். கீழே இரு மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெவ்வேறு கோண வகைகளை உற்றுநோக்குக.


 

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் அமைந்துள்ள கோணங்களை எழுதுக. (விரிகோணம், குறுங்கோணம், செங்கோணம்)


இவற்றை முயல்க


 

 

3. சுற்றுச்சூழலில் உள்ள செங்கோணங்களை அடையாளம் காணுதல்

ராம் ஒரு மரக்கட்டையிலிருந்து செவ்வக வடிவத்துண்டு ஒன்றை வெட்ட முயற்சிக்கிறார். ராம் செவ்வகத்தின் மறுபக்கத்தில் செங்குத்துக்காக வெட்ட ஒரு கருவியைப் பயன்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம். நாம் அந்த கருவியை மூலை மட்டம் என்கிறோம். நம்முடைய வடிவியல் கருவிப் பெட்டியில் இரண்டு மூலைமட்டங்கள் இருப்பதைக் காணலாம். இரு மூலைமட்டங்களும் 90° கோண அளவு கொண்டுள்ளதை நாம் காணலாம்.


செங்கோணங்களுக்கான எடுத்துக்காட்டுகள்


 

இவற்றை முயல்க

செங்கோணங்களை உருவாக்கும் 5 பொருள்களை வரையவும்.


 

செயல்பாடு

1. குறுங்கோணம், விரிகோணம் மற்றும் செங்கோணம் என வகைப்படுத்தி எழுதுக.


 

2. கீழ்க்காணும் கோணங்களை குறுங்கோணம், விரிகோணம் மற்றும் செங்கோணம் என வகைப்படுத்தவும்.

30°, 45°, 60°, 90°, 120°, 130°, 170°, 75°

விடை :

குறுங்கோணம்30°, 45°, 60°, 75°

செங்கோணம் : 90°

விரிகோணம் : 120°, 130°, 170°

 

3. பின்வரும் படங்களை உற்றுநோக்கி கோணங்களின் பெயர்களை, கட்டங்களில் எழுதுக.


 

4. புள்ளிகளை இணைத்து செங்கோணம், குறுங்கோணம் மற்றும் விரிகோணங்களை வரைக.


 

செயல்திட்டம் (கலை மற்றும் கைவினைப் பொருள்கள்)

1 தாளை மடித்து அல்லது வெட்டி குறுங்கோணம், விரிகோணம் மற்றும் செங்கோணங்களை உருவாக்கி அட்டையில் ஒட்டுக.

2. கீழ்க்காணும் பூ, விலங்கு மற்றும் பறவையின் பெயர்களை பெரிய ஆங்கில எழுத்துக்களில் எழுதுக. அவ்வெழுத்துகளில் உருவாகும் கோணத்தின் வகைகளை கண்டறிக.


Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Introduction of Angles Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : கோணங்களின் அறிமுகம் - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்