Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | சமச்சீர் தன்மை

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - சமச்சீர் தன்மை | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  16.10.2023 10:30 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

சமச்சீர் தன்மை

சமச்சீர் தன்மை என்பது மிக முக்கியமான வடிவியல் கருத்தாகும் இயற்கையாகவே நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் சமச்சீர் தன்மை பயன்படுகிறது.

சமச்சீர் தன்மை.

நாம் ஒரு ஆப்பிளை இரண்டு சரி பாதிகளாக வெட்டினால், நாம் இரண்டு பாகங்களிலும் சமச்சீர் தன்மை இருப்பதை உற்றுநோக்கி அறியலாம்.


சமச்சீர் தன்மை என்பது மிக முக்கியமான வடிவியல் கருத்தாகும் இயற்கையாகவே நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் சமச்சீர் தன்மை பயன்படுகிறது.

ஓவியர்கள்,தயாரிப்பாளர்கள், வடிவியல் நிபுணர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் எனப் பலரும் சமச்சீர் தன்மையை பயன்படுத்துகின்றனர்.

சமச்சீர்தன்மை என்பது ஒரு பொருளின் வடிவமும் அளவும் இரண்டு பாதிகளுக்கு இடையே சரியாக பொருந்துவது ஆகும்.

ஒரு படத்தினை இரண்டு பகுதிகளாக மடிக்க அவ்விரு பகுதிகளும் மடிக்கப்பட்ட கோட்டின் அடிப்படையில் மிகச் சரியாகப் பொருந்தினால் அது சமச்சீர் தன்மை உடையது எனலாம்.


 

சமச்சீர் கோடு

ஒரு படத்தை ஒரு கோடு இரண்டு சரிபாதியாக பிரித்தால் அக்கோடு அப்படத்தின் சமச்சீர் கோடாகும். இக்கோடானது சமச்சீர் அச்சு என்று அழைக்கப்படுகிறது.


எடுத்துக்காட்டு

4 சமச்சீர் கோடுகள்: ஒரு சதுரத்தை 4 வழிகளில் நாம் சமச்சீராக பிரிக்க முடியும்.


2 சமச்சீர் கோடுகள்: ஒரு செவ்வகத்தை 2 வழிகளில் நம்மால் சமச்சீராக பிரிக்க முடியும்.


 

செயல்பாடு

1. உனக்குத் தெரிந்த இரண்டு சமச்சீரான பொருள்களை பட்டியலிடுக.

விடை : தக்காளி, சூரியகாந்தி மலர்

 

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில், சமச்சீர்தன்மை உள்ளனவற்றை () செய்க.


 

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை சமச்சீர் தன்மை கொண்டுள்ளவையாக மாற்ற அவற்றின் மறுபாதியை வரைக.


 

4. கீழ்க்காணும் படங்களுக்கு சமச்சீர் கோடுகள் வரைந்து அக்கோடுகளின் எண்ணிகையை எழுதுக.


 

சிந்திக்க

1. ஒழுங்கற்ற திட வடிவத்தை சமச்சீராகப் பிரிக்க முடியுமா? உனது விடைக்கான சரியான காரணம் தருக.

விடை : ஒழுங்கற்ற திட வடிவத்தை சமச்சீராகப் பிரிக்க முடியாது ஏனென்றால் நாம் ஒரு கோடு வரைந்து பொருளை  சமமாக பிரிக்கும் போது அதன் இரு பக்கமும் ஒன்றோடு ஒன்று பொருந்தாது. எனவே அது சமச்சீர் அல்ல.

 

2. சமச்சீராக பிரிக்க முடியாத ஆங்கில எழுத்துக்களை எழுதுக.

விடை F G J L N P Q R S T Y Z

 

3. சமத்சீர்தன்மை கொண்ட ஆங்கில எழுத்துக்களை எழுதுக? அவற்றின் சமச்சீர்தன்மை கிடைமட்டமானதா? செங்குத்தானதா? என கண்டறிக.

விடை :  A B C D E H I K M O U V W X

HIOX - கிடைமட்ட மற்றும் செங்குத்து சமச்சீர்தன்மை உடையது .

AMUV  செங்குத்தானது

BCDEK  கிடைமட்டமானது

 

4. வட்டமானது பல சமச்சீர் கோடுகளை கொண்டது. இது உண்மையா? ஏன்?

விடை : ஆம் உண்மை, ஒரு வட்டத்திற்கு பல சமச்சீர் கோடுகளை நாம் வரையலாம். ஒவ்வொரு கோடும் வட்டத்திற்கு ஒரு சமச்சீர் நிலையை கொடுக்கும்.

 

5. 1 க்கும் 9 க்கும் இடைப்பட்ட சமச்சீர் தன்மையுடைய எண்களை காண்க.

விடை : 1, 3, 


6. 0 க்கும் 9 க்கும் இடைப்பட்ட இரு சமச்சீர் கோடுகளை கொண்ட இரண்டு எண்களை கண்டறிக.

விடை : 8

8 (1,2,3,4,5,6,7 மற்றும் 9 ஆகிய எண்கள் சமச்சீர் எண்கள் அல்ல. 3 கிடைமட்ட சமச்சீர் கொண்டது. 8 என்ற எண் இரு சமச்சீர் கோடுகளை கொண்டது.

 

உங்களுக்குத் தெரியுமா?

ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் ஒரு சமச்சீரான நினைவுச் சின்னமாகும்.


 

செயல்திட்டம்

ஒரு அட்டையில் 26 ஆங்கில எழுத்துக்களையும் எழுதுக. சமச்சீர் கோடு வரைய இயலும் எழுத்திற்கு சமச்சீர் கோட்டினை வரைக. சமச்சீர் கோட்டினை வரைய இயலாத எழுத்துக்களை வட்டமிடுக.

Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Symmetry in familiar 3-D shapes Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : சமச்சீர் தன்மை - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்