விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - முடுக்கம் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion
முடுக்கம்
திசைவேகம் மாறுபடும் வீதம் முடுக்கம் எனப்படும். வேறு வகையில் கூறுவதானால், ஒரு பொருளின் வேகத்திலோ அல்லது திசையிலோ மாற்றம் ஏற்பட்டால் அப்பொருள் முடுக்கமடைகிறது எனக் கருதப்படுகிறது.
முடுக்கம் = திசைவேக மாறுபாடு / காலம்
= இறுதித் திசைவேகம் (v) - ஆரம்பத் திசைவேகம் (u) / காலம் (t)
A = (v-u) / t
முடுக்கத்தின் SI அலகு மீ / வி2
ஓய்வுநிலையில் உள்ள ஒரு மகிழுந்தானது, நேர்கோட்டில் இயங்கத் தொடங்குகிறது எனக் கொள்வோம். அது 4 விநாடிகளில் 12 மீ / வி வேகத்தினை அடைகிறது எனில் அதன் முடுக்கத்தினைக் கணக்கிடுக (மகிழுந்து சீரான முடுக்கத்தில் உள்ளது எனக் கொள்க).
ஆரம்பத் திசைவேகம் (u) = 0 மீ / வி
இறுதி திசைவேகம் (v) = 12 மீ / வி
எடுத்துக்கொண்ட நேரம் (t) = 4 வி
முடுக்கம் (a) = (v-u) / t
= (12-0) / 4
= 3 மீ/வி2
நேர் முடுக்கம்
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் நேர் முடுக்கம் எனப்படும்.
நான் எவ்வளவு வேகமானவன் பாருங்கள்!
என் பெயர் சிறுத்தை. நான் மிகவேகமாக ஓடக்கூடிய விலங்கு. எனது வேகம் என்ன தெரியுமா? அது, 25 மீ / வி முதல் 30 மீ / வி வரை ஆகும். என்னால் இரண்டு விநாடியில் எனது வேகத்தினை 0 விலிருந்து 20 மீ/வி ஆக மாற்றிக் கொள்ளமுடியும். எனது முடுக்கம் வியப்பாக உள்ளது அல்லவா ! அதை நீங்கள் கணக்கிட முடியுமா?
எதிர் முடுக்கம்
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர்முடுக்கம் எனப்படும்.
ஒரு நேர்கோட்டுப் பாதையில் 8 மீ/வி என்ற திசைவேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பந்தானது 10 விநாடியில் 2 மீ/வி என்ற திசைவேகத்தினை அடைகிறது. அப்பொருள் பெறும் எதிர்முடுக்கம் யாது? (அது சீரான எதிர்முடுக்கத்தைக் கொண்டுள்ளதாகக் கொள்க).
ஆரம்பத் திசைவேகம் (u) = 8 மீ/வி
இறுதித் திசைவேகம் (v) = 2 மீ/வி
எடுத்துக்கொண்ட நேரம் (t) = 10 வி
முடுக்கம் (a) = (v - u) / t
= (2-8) / 10
= - 0.6 மீ/வி2
சீரான முடுக்கம்
ஒரு பொருளின் திசை வேகத்தில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
ஒரு பேருந்தின் சீரான முடுக்கம் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு பொருளின் திசைவேகமானது 20 மீ/வி என்ற வீதத்தில் மாற்றம் அடைவதால் (அதிகரித்தல் அல்லது குறைதல்) அதன் முடுக்கம் 20 மீ/வி2 ஆகும். அப்பொருளின் திசைவேகம் 20 மீ/வி என்ற வீதத்தில் குறைந்தால், அதன் எதிர்முடுக்கம் 20 மீ/வி2 ஆகும்.
சீரற்ற முடுக்கம்
ஒவ்வொரு அலகு நேரத்திலும் ஒரு பொருளின் திசைவேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கமானது சீரற்ற முடுக்கம் எனப்படும்.
இங்கு ஒவ்வொரு விநாடியிலும் திசைவேக மாற்றம் மாறுபடுவதைக் காணலாம். எனவே, இம்முடுக்கம் சீரற்ற முடுக்கம் எனப்படும்.
ஒரு தொடர்வண்டி நேர்கோட்டில் பயணம் செய்யும் பாதையை கீழே உள்ள படமானது காட்டுகிறது. படத்தினைப் பார்த்து அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.
விடை :
ஆய்வு
தொடர்வண்டி A முதல் B மற்றும் B முதல் C வரையிலான தூரத்தை கடக்கும் போது அது வேகமாக இயங்கும்
இது CD தூரத்தை கடக்கும் போது முடுக்கம்(i.e) சீரான வேகம் இல்லை
அது D இலிருந்து E முதல் F வரையிலான தூரத்தை கடக்கும் போது அது எதிர்மறை முடுக்கம் அல்லது குறைதல்
அல்லது பின்னடைவாக உள்ளது. (அதாவது) அதன் வேகம் பொறுத்து குறைகிறது