விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தொலைவு – காலம் வரைபடங்கள் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion
தொலைவு – காலம் வரைபடங்கள்
O என்ற புள்ளியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் மகிழுந்து ஒன்று கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநாடி நேரத்திலும் அது கடக்கும் தொலைவானது அளக்கப்படுகிறது. அதன் தொலைவு மற்றும் காலம் பதிவு செய்யப்பட்டு அதற்கான வரைபடமானது வரையப்படுகிறது. இந்நிகழ்வில் காணப்படும் நான்கு சாத்தியக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வு சுழி மதிப்பினைப் பெற்றுள்ளது. அதாவது, ஒவ்வொரு விநாடியிலும் தொலைவானது மாறாமல் உள்ளது எனவே, மகிழுந்து ஓய்வு நிலையில் உள்ளது.
(ஆ) மகிழுந்து 10 மீ/வி என்ற சீரான வேகத்தில் செல்லுதல்
இந்த வரைபடத்தில் சாய்வின் மதிப்பு மாறாமல் உள்ளது. இதில் தொலைவானது ஒவ்வொரு விநாடியிலும் 10 மீட்டர் அதிகரிக்கிறது. எனவே, மகிழுந்து சீரான வேகத்தில் செல்கிறது.
(இ) மகிழுந்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்லுதல்
இந்த வரைபடத்தில் சாய்வின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, மகிழுந்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
(ஈ) மகிழுந்தின் வேகம் குறைந்து கொண்டே செல்லுதல்
இந்த வரைப்படத்தில் சாய்வின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனவே, மகிழுந்தின் வேகம் குறைந்துகொண்டே செல்கிறது.