Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath

   Posted On :  24.07.2022 06:07 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

சுருக்கமாக விடையளிக்கவும்.

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. சீனா - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

• சீன - ஜப்பானிய போரில் (1894 - 1895) சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது

• ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக் கொண்டது

• இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்ப்பித்தது.

 

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

• இங்கிலாந்து

• பிரான்ஸ்

• ரஷ்யா

 

3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?

• இங்கிலாந்தின் - ஆரவாரமான நாட்டுப்பற்று

• பிரான்சின் - அதி தீவிரப்பற்று

• ஜெர்மனியின் - வெறிகொண்ட நாட்டுப்பற்று

 

4. பதுங்குக்குழிப் போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

• போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக்குழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின.

• பிரதானப் பதுங்குக்குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும்.

• அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்து சேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.

 

5. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

• துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கியப் பங்கு வகித்தார்.

• கமால் பாட்சா துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்தும் மாற்றியமைத்தார்.

 

6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

• சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை.

• பன்னாட்டுச் சங்கம் முதல் உலகப்போரில் வெற்றிபெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது.

 

Tags : Outbreak of World War I and Its Aftermath | History முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு.
10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Answer briefly Outbreak of World War I and Its Aftermath | History in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : சுருக்கமாக விடையளிக்கவும். - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்