முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath
பாடச்சுருக்கம்
• முதலாளித்துவ நாடுகளின் வளர்ந்துகொண்டேயிருந்த,
கச்சாப்பொருட்களுக்கும்
சந்தைக்குமானத் தேவைகள் எவ்வாறு காலனியாதிக்கப் போட்டிக்கு இட்டுச்சென்றதென்பதும்
அதன் விளைவாக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட மோதல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.
•
ஆசியாவில்
ஜப்பான் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்றது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
•
ஐரோப்பா
இரு போர்முகாம்களாகப் பிரிந்ததும் அதன் விளைவாக ஏற்பட்ட அணி சேர்க்கைகளும்,
எதிரணி
சேர்க்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
•
முதல்
உலகப்போர் வெடிப்பதற்குக் காரணங்களான வன்முறை வடிவங்களிலான தேசியம்,
ஜெர்மனியின்
ஆக்கிரமிப்பு மனப்பான்மை, அல்சேஸ்,
லொரைன்
பகுதிகளை இழந்ததனால் பிரான்சுக்கு ஜெர்மனியோடு ஏற்பட்டப் பகைமை,
பால்கன்
பகுதியில் ஏற்பட்ட அதிகார அரசியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
•
நீர்மூழ்கிக்கப்பல்
போரினை ஜெர்மன் தொடுத்ததைத் தொடர்ந்து போரில் அமெரிக்கா பங்கேற்றதும்,
நேசநாடுகள்
பெற்ற இறுதி வெற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
•
பாரிஸ்
அமைதிமாநாடும், வெர்செய்ல்ஸ்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களும்
பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
•
முதல்
உலகப்போரின் பின்விளைவுகள், குறிப்பாக ரஷ்யப்புரட்சி,
அதற்கான
காரணங்கள், போக்கு,
விளைவுகள்
ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
•
உலக
அமைதிக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பான பன்னாட்டுச் சங்கமும் போர்களைத்
தடுப்பதிலும் அமைதியை மேம்படுத்தியதிலும் அது வகித்தப் பங்கும் விமர்சன பூர்வமாக
ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
கலைச்சொற்கள்
முற்றுரிமை : Monopoly exclusive possession or
control
பேரழிவு : Devastating highly destructive or
damage
கண்மூடித்தனமான நாட்டுப்பற்று : Jingoism
blind patriotism, especially in the pursuit
of aggressive foreign policy
அதிதீவிரப்பற்று : Chauvinism extreme patriotism
ஜெர்மானியக் கலாச்சாரத்தை மிக உயர்வாக நினைப்பது Kultur thinking highly of
German civilization and culture
எதிரியை விரட்டி அடித்தல் : Repulse
drive back
மூழ்கடி : Torpedo
attack or sink (a ship) with a torpedo
முதலாளித்துவம் : Bourgeois characteristic of the
middle class, typically with reference to its perceived materialistic values or conventional attitudes
அறிவுஜீவிகள்,
நுண்ணறிவாளர்கள் : Intelligentsia intellectuals or highly
educated people as a group, especially when regarded as possessing culture and
political influence