Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு பத்தியில் விடையளி

உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு பத்தியில் விடையளி | 9th Social Science : Civics: Local Self Government

   Posted On :  10.09.2023 11:57 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்

ஒரு பத்தியில் விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக. : ஒரு பத்தியில் விடையளி

VI. ஒரு பத்தியில் விடையளி.

1. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

விடை:

ஊராட்சி மற்றும் நகராட்சியின் 'உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்களாகச் செயல்படும்.

குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.

கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.

நேரடித் தேர்தல் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

அனைத்து நிலைகளிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

பெண்களுக்கு 1/3 பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கும் 1/3 பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துதல், ஆட்சிகலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

2. உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?

விடை:

உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை .

நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கிய பங்காற்றுகின்றன.

மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.

 

VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. உன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்ற விவரங்களை சேகரி.


இணையச்செயல்பாடு

உள்ளாட்சி அமைப்புகள்

தமிழக அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்வதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் பற்றிய அரசாணைகள், திட்டங்கள், தரவுத்தள வரைபடங்கள் மற்றும் அதன் நிர்வாகத்தைப் பற்றி அறிந்து கொள்ள!


செயல்முறை

படி -1 LRL அல்லது CR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க

படி - 2 மெனுவில் வரைபடத்தை ( Map) தேர்ந்தெடுத்தவுடன் கீழ்த் தோன்றும் மெனுவில் 'Blocks" என்பதைத் சொடுக்கவும்

படி -3 தோன்றும் பக்கத்தில் உங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்ந்தெடுத்து சொடுக்கியின் அம்மாவட்டத்தின் பஞ்சாயத்து ஒன்றியங்களின் எண்ணிக்கையை தரவுத்தள வரைபடம் மூலம் அறிந்து கொள்ளலாம் (ex. Tiruchirappalli)

உரலி: https://www.tnrd.gov.in/index.html

Tags : Local Self Government | Civics | Social Science உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Local Self Government : Answer in detail Local Self Government | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள் : ஒரு பத்தியில் விடையளி - உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்