உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography: Biosphere

   Posted On :  08.09.2023 01:23 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VII. விரிவான விடையளி


1. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.

விடை:

சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்.

உயிரற்ற கூறுகள் , உயிருள்ள கூறுகள் , ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்

உயிரற்ற கூறுகள்.

சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.

(.கா.) நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.

உயிருள்ள கூறுகள்

தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.

உற்பத்தியாளர்கள் : இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள்.

முதல் நிலை நுகர்வோர் - தாவர உண்ணிகள்

இரண்டாம் நிலை நுகர்வோர் - ஊன் உண்ணிகள்

சிதைப்போர்கள் - சாறுண்ணிகள் எனப்படும். இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்சுடியவை.

ஆற்றல் கூறுகள் (Energy Components)

உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது சூரியன் ஆகும்.

அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும் ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது.

 

2. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.

விடை:


சூழ்நிலை மண்ட லத்தின் செயல்பாடுகள் (Functions of an ecosystem): சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு > ஆற்றல் மட்டம் > உணவுச் சங்கிலி > உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.

ஆற்றல் மட்டம்:

ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.

உணவுச் சங்கிலி:.

உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.

உணவு வலை:

உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food web) எனப்படுகிறது. (ஆற்றல் மட்டம்உணவுச் சங்கிலிஉணவு வலை)

 

3. புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.

விடை:

நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன

நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணகளின் தாக்கம் காணப்படுகிறது.

நன்னீர்வாழ் பல்லுயிர்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகை உண்டு.

நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இத்தொகுதி உயிரினங்கள் - தாவரங்கள் - அல்லி - தாமரை - பாசியினத் தாவரங்கள் - விலங்குகள் . ஆமை . முதலை . மீன் இனங்கள்.

கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த்தொகுதியாகும்.

இரண்டாம் வகை கடல்நீர்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன.

மனிதர்கள் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல் மட்டம் உயர்தல்.

Tags : Biosphere | Geography | Social Science உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Biosphere : Answer the following in a paragraph Biosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : விரிவான விடையளி - உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்