Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சூழ்நிலை மண்ட லம் (Ecosystem)

உயிர்க்கோளம் | புவியியல் - சூழ்நிலை மண்ட லம் (Ecosystem) | 9th Social Science : Geography: Biosphere

   Posted On :  08.09.2023 12:48 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

சூழ்நிலை மண்ட லம் (Ecosystem)

சூழ்நிலை மண்டலம் என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும். இச்சூழ்நிலை மண்டல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம், மண், காற்று நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன

சூழ்நிலை மண்ட லம் (Ecosystem)

சூழ்நிலை மண்டலம் என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும். இச்சூழ்நிலை மண்டல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம், மண், காற்று நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன சுழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (.கா. மரப்பட்டை ) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் அல்லது சூழல் கோளம் Ecosphere) வரை (.காட்ட விவசாயநிலம், குளச்சூழ்நிலை மண்டலம், வனக்குழல் அமைப்பு இன்னும் பிற) வேறுபட்டுக் காணப்படுகிறது. இங்கு உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சுழல் காணப்படுகிறது. பல்லுயிர் வாழ்விடம் புவியில் உள்ள அனைத்து சூழ்நிலை மண்டலங்களையும், உயிரினங்களையும் அதாவது மனித இனத்தையும் உள்ளடக்கியதாகும்.


செயல்பாடு

வனச்சுழல் அமைப்பை உன் சொந்த நடையில் விவரிக்கவும்.

உங்களுக்குத் தெரியுமா?

சூழ்நிலை  மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு சூழலியல்(Ecology) எனப்படுகிறது.

சூழலியல் பற்றிப் படிப்பவர் சூழ்லியளாரர் (Ecologist) எனப்படுகிறார்.


1. சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள் (Components of Ecosystem)

சூழ்நிலை மண்டலம் மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை

) உயிரற்ற கூறுகள்

) உயிருள்ள கூறுகள் மற்றும்

 ) ஆற்றல் கூறுகள்

 

) உயிரற்ற கூறுகள் (Abiotic Components)

உயிரற்ற கூறுகள் சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும். உதாரணமாக, நிலம், காற்று, நீர், சுண்ணம்பு, இரும்பு போன்றவை

 

) உயிருள்ள கூறுகள் (Biotic Components)

 உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும். இவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உற்பத்தியாளர்கள் (Producers)சுழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும்.

இவை தற்சார்பு ஊட்ட உயிரி (Autarshs) என்று அழைக்கப்படுகின்றன. இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. (.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்றவை.

நுகர்வோர்கள் (Consumers) - நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் நுகர்வோர்கள் எனப்படும். எனவே அவை பிறச்சார்பு ஊட்ட உயிரி (Heterotrophs) என்றழைக்கப்படுகின்றன.

 

நுகர்வோரின் பொதுவான பிரிவுகள்

முதல்நிலை நுகர்வோர் (Primary Consumers) - உணவிற்காக உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் இவைகளைத் தாவர உண்ணிகள் என்கிறோம். (.கா.) வரிக்குதிரை, ஆடு போன்றவை

இரண்டாம் நிலை நுகர்வோர் (Secondary Consumers) - இவ்வகை நுகர்வோரை ஊன் உண்ணிகள் என்கிறோம். இவை தாவர உண்ணிக்களை உணவாகக் உட்கொள்ளும். (உம்.) சிங்கம், பாம்பு போன்றவை

 மூன்றாம் நிலை நுகர்வோர் (Tertiary Consumers) - ஊன்உண்ணிகளில் உயர்நிலையில் உள்ளவையாகும். அவை தாவர உண்ணிகளையும். ஊன்உண்ணிகளையும் உணவாகக் கொள்ளக் கூடியவை ஆகும். (. கா) ஆந்தை, முதலை ஆகியவை.

சிதைப்போர்கள் (Dacomposers) இவ்வுயிரினங்கள்  தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும். அவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை ஆகும். எனவே, அவை சாறுண்ணிகள் (Sapotopts) என்று அழைக்கப்படுகின்றன.  (உம்.) பூஞ்சைகள், காளான்கள் போன்றவை

 

) ஆற்றல் கூறுகள் (Energy Components)

உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், என் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டத்தில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

செயல்பாடு

அகரதியைப் (Dictionary) பயன்படுத்தி Herbivores, Carnivores, Omnivoeres LODE Scanvengers ஆகியவற்றிற்குப் பொருள், விளக்கம் கண்டுபிடி.


2. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் (Functions of an Ecosystem)



அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஆற்றல் மட்டம், உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையினை உருவாக்குகின்றன. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன இந்த ஆற்றல் ஓட்டம் சூழ்நிலை மண்டலத்திலுள்ள கரிமமற்ற மற்றும் கரிமப் பொருட்களின்பரவலுக்கும், மூற்சிக்கும் உதவி செய்கிறது. ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைவறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம். உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food Web) எனப்படுகிறது.

Tags : Components, Functions | Biosphere | Geography உயிர்க்கோளம் | புவியியல்.
9th Social Science : Geography: Biosphere : Ecosystem Components, Functions | Biosphere | Geography in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : சூழ்நிலை மண்ட லம் (Ecosystem) - உயிர்க்கோளம் | புவியியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்