உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography: Biosphere

   Posted On :  08.09.2023 01:20 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

வேறுபடுத்துக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : வேறுபடுத்துக

VI. வேறுபடுத்துக.


1. உற்பத்தியாளர் - சிதைப்பவர்

விடை:

உற்பத்தியாளர்:

1. தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய

உயிரினங்கள்

2. தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

(.கா). பாசி, பாக்டீரியா, தாவரங்கள்

சிதைப்பவர்:

1 தமக்கு தேவையான உணவை தாமே தயாரிக்க இயலாதவை. இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை

2 சாறுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

(.கா). பூஞ்சைகள், காளான்கள்

 

2. நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி - நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

விடை:

நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி

1 நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி என்பது ஒரு

குழுவாக வாழும் உயிரினங்கள் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டு அவை வாழும் நிலச் சூழலுக்கு ஏற்ப வாழ்வதாகும்.

2. வெப்ப மண்டலக் காடுகள், வெப்ப மண்டல சவானா, பாலைவனம், மித வெப்ப மண்டலப் புல்வெளி, தூந்திரப் பகுதி என ஐந்து வகைப்படும்

நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

1 நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியில் காணப்படும் உயிரினங்கள் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும், சக்தி மூலங்களுக்கும் மற்றும் இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன

2. நன்னீர் வாழ் பல்லுயிர்த் தொகுதி , கடல் நீர் வாழ் பல்லுயிர்த் தொகுதி என இருவகைப்படும்.

 

3. வெப்பமண்டலத் தாவரங்கள் - பாலைவனத் தாவரங்கள்

விடை:

வெப்ப மண்டலத் தாவரங்கள்

1. நிலநடுக் கோட்டிலிருந்து 10° வடக்கு அட்சத்திலிருந்து 10° தென் அட்சம் வரைப் பரவியுள்ளது ஆண்டு முழுவதும் அதிகமான மழையும். அதிக வெப்பநிலையும் காணப்படுகிறது.

2. இரப்பர், மூங்கில், எபோனி மரங்கள் காணப்படுகின்றன. வௌவால்கள்,

பகட்டுக்கோழி, சிறுத்தைகள், யானைகள், குரங்குகள் காணப்படுகின்றன.

3. உணவு சேகரித்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல், இடமாற்று விவசாயம் இங்கு நடைபெறுகின்றன.

பாலைவனத் தாவரங்கள்

1. 20° முதல் 30° வட தென் அட்சங்களுக்கிடையே காணப்படுகின்றன. ஆண்டு சராசரி. மழைப்பொழிவு 25 செ.மீட்டருக்குக் குறைவாகக் காணப்படுகிறது.

2. முட்புதர்கள், குறுங்காடுகள் மற்றும் பனை காணப்படுகின்றன. பாம்புகள், பல்லிகள், தேள்கள் காணப்படுகின்றன.

3. உணவு சேகரித்தல், வேட்டையாடுதல் தொழில் இங்கு நடைபெறுகின்றன.

 

4. சவானா - தூந்திரா

விடை:

சவானா

1.வெப்ப மண்டலப் புல்வெளிகள்

2. சேஹல், கிழக்கு ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதி, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

3. வெப்பமாகவும், வறண்டும், மிதமான மழைப்பொழிவுகள் காணப்படுகிறது.

4. புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன.

5. பழங்குடியின நாடோடி மக்கள்.

6. கால்நடை மேய்த்தல் முக்கியத் தொழில்

7. சிங்கம், சிறுத்தை , புலி, மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.

8. புல்லுருவி, ரெட் ஓட்ஸ்புல், லெமன் கிராஸ் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.

தூந்திரா

1. பரந்த, உறைந்த, தாழ்நிலப்பகுதி

2. ஆசியா, கனடா, ஐரோப்பா இவற்றின் வடபகுதி, | கிரீஸ்லாந்து, ஆர்டிக், அண்டார்டிகா ஆகிய பகுதிகள்.

3. குளிர்காலம் நீண்ட கடுங்குளிர், கோடை காலம்  மிதமான குளிர் கொண்டது.

4. குறுகியகால பருவத் தாவரங்கள் மட்டும்.

5. நாடோடி மக்கள்

6. வேட்டையாடுதல், மீன்பிடித்தல் முக்கிய தொழில்கள்

7. துருவக் கரடிகள், ஓநாய்கள், துருவ மான்கள் மற்றும் கழுகுகள் காணப்படுகின்றன.

8. ஆர்டிக் பகுதிகளில் பாசி குளித் தாவரங்கள் வளர்கின்றன.

Tags : Biosphere | Geography | Social Science உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Biosphere : Distinguish between the following Biosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : வேறுபடுத்துக - உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்