இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 14 : Classes and objects
C++ பொருள் நோக்கு நிரலாக்க
மொழி
இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
மதிப்பீடு
பகுதி – அ
சரியான விடையை தேர்வு செய்யவும்.
1. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும்
மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
அ. தரவு செயற்கூறுகள்
ஆ. inline செயற்கூறுகள்
இ. உறுப்பு
செயற்கூறுகள்
ஈ. பண்புக்
கூறுகள்
[விடை: இ. உறுப்பு செயற்கூறுகள்]
2. பின்வரும் உறுப்புச் செயற்கூறினைப்
பற்றிய கூற்றுகளில் எது சரி அல்லது தவறு? (i) புள்ளி
செயற்குறி மூலம் ஒரு உறுப்புச் செயற்கூறு, இன்னொரு உறுப்புச் செயற்கூறினை நேரடியாக அழைக்கலாம்.
(ii) இனக்குழுவின்
private தரவுகளை உறுப்புச் செயற்கூறு அணுக முடியும்.
அ. i - சரி,
ii - சரி
ஆ. i- தவறு,
ii - சரி
இ. 1 - தவறு,
ii - சரி
ஈ. i- தவறு,
ii - தவறு
[விடை: ஆ. i - தவறு, ii - சரி]
3. ஒரு உறுப்பு செயற்கூறு,
இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப்
பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம்.
அ. துணை செயற்கூறு
ஆ. துணை உறுப்பு
இ. பின்னலான
உறுப்பு செயற்கூறு
ஈ. துணை உறுப்பு
செயற்கூறு
[விடை: இ. பின்னலான உறுப்பு செயற்கூறு]
4. இனக்குழுவுக்குள் வரையறுக்கப்படும்
செயற்கூறுகள் எந்த செயற்கூறுகளைப் போல் இயங்குகின்றன?
அ. inline செயற்கூறுகள்
ஆ. inline அல்லாத
செயற்கூறுகள்
இ. Outline செயற்கூறுகள்
ஈ. தரவு செயற்கூறு
[விடை: அ. inline செயற்கூறுகள்]
5. பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி
தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?
அ. Private
ஆ. Protected
இ. Public
ஈ. முழுதளாவிய
[விடை: அ. Private]
6. கீழ்கண்ட நிரலில் எத்தனை பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
class x
{
int y;
public:
x (int z) {y=z;}
} x1 [4];
int main()
{x x2(10);
return 0;}
அ. 10
ஆ. 14
இ. 5.
ஈ. 2
[விடை: ஆ. 14]
7. ஆக்கி செயற்கூறு பற்றிய பின்வரும்
கூற்றுகள் சரியா, தவறா
எனக் கூறு.
(i) ஆக்கிகள்
private பகுதியில் அறிவிக்கப்பட வேண்டும்.
(ii) பொருள்கள் உருவாக்கப்படும் போது,
ஆக்கி தானாகவே இயக்கப்படும்.
அ. சரி,
சரி
ஆ. சரி,
தவறு
இ. தவறு,
சரி
ஈ. தவறு,
தவறு
[விடை: இ. தவறு, சரி]
8. பின்வரும் முன்வடிவுக்கு கீழ்கண்டவற்றுள்
எந்த ஆக்கி இயக்கப்படும்? add display (add &);
//add என்பது இனக்குழுவின் பெயர்
அ. தானமைவு
ஆக்கி
ஆ. அளபுருக்களுடன்
கூடிய ஆக்கி
இ. நகல்
ஆக்கி
ஈ. அளபுருக்கள்
இல்லாத ஆக்கி
[விடை: இ. நகல் ஆக்கி]
9. ஒரு நிரலில்,
இனக்குழு அளபுருக்களுடன் கூடிய ஆக்கியை பெற்று,
ஆனால் தானமைவு ஆக்கி இல்லாத போது அளபுருக்கள் இல்லாத
ஆக்கியைக் கொண்ட பொருளை உருவாக்கினால் என்னவாகும்?
அ. நிரல்
பெயர்ப்பி - நேரப்பிழை
ஆ. களப்பிழை
இ. நிகழ் நேரப்பிழை
ஈ. நிகழ்நேர
விதிவிலக்கு
[விடை: அ. நிரல் பெயர்ப்பி - நேரப்பிழை]
10. பின்வருவனவற்றுள் எது தற்காலிக சான்றுருவை உருவாக்கும்?
அ. ஆக்கியின்
உள்ளார்ந்த அழைப்பு
ஆ. ஆக்கியை
வெளிப்படையாக அழைத்தல்
இ. அழிப்பியின்
உள்ளார்ந்த அழைப்பு
ஈ. அழிப்பியை
வெளிப்படையாக அழைத்தல்
[விடை: ஆ. ஆக்கியை வெளிப்படையாக அழைத்தல்]