பாரம்பரிய மரபியல் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Botany : Chapter 2 : Classical Genetics
தாவரவியல் : பாரம்பரிய மரபியல்
பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்
23. மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக. பட்டாணியின் ஏழு பண்புகள் : -
பண்பு / மரபணு / ஓங்கு பண்புக்கூறு / ஒடுங்கு பண்புக்கூறு
தாவர உயரம் Le நெட்டை குட்டை
விதை வடிவம் R உருண்டை சுருங்கிய
விதையுறை நிறம் மஞ்சள் பச்சை
மலர் நிறம் A ஊதா வெள்ளை
கனி நிறம் GP பச்சை மஞ்சள்
கனி V வீங்கிய/ உப்பிய இறுக்கமுற்ற
மலர் அமைவிடம் Fa கோணம் நுனியிலமைந்த
24. உண்மை பெருக்கம் அல்லது தூயகால் வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?
* தொடர்ந்து தற்கலப்பு செய்யும் போது (அல்லது) தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது, தொடர்ந்து ஒரே புறதோற்ற பண்புள்ள தாவரங் களை உருவாக்குவதற்கு உண்மைப் பெருக்கம் (அல்லது) தூயகால்வழிப் பெருக்கம் என்று பெயர்.
* இவை பெற்றோர் பண்பைக் கொண்டிருப்பதால் (ஹோமோசைகஸ்) எனப்படும்.
* இதனால் ஒத்த புற, ஜீனாக்கம் கொண்ட தாவரங்களை உருவாக்குவதால், இதற்கு தூய கால்வழிப் பெருக்கம் என்று பெயர்.
25. மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
* 1990 இல் ஹியூகோ-டி-விரிஸ் காரன்ஸ் & எரிவான் ஷெர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறுஆய்வு செய்தனர்.
* மெண்டலின் ஆய்வுகள் 1965 இல் கண்டறியப் பட்டாலும் அது உலகம் அறிய 35 ஆண்டுகள் ஆயிற்று.
26. பிற்கலப்பு என்றால் என்ன?
* முதல் மகவுச்சந்ததியை இரு பெற்றோர்களில் ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பு செய்தல்.
* முதலாவது - ஓங்கு பெற்றோருடன் கலப்பு செய்யும் போது F2 சந்ததியில் தோன்றும்.
* மாறாக - ஒடுங்கு தன்மை கொண்ட பெற்றோ ருடன் கலப்பு செய்யும் போது இரண்டு புறத் தோற்றப் பண்புகளும் 1:1 வீதத்தில் தோன்றுகிறது. இதற்குச் சோதனைக்கலப்பு என்று பெயர்.
* ஒடுங்கு தன்மை பிற்கலப்பு, கலப்புயிரியின் மாறுபட்ட பண்பிணைவு தன்மையை அறிய உதவுகிறது.
27. மரபியல் வரையறு.
பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு - மரபியல் எனப்படும். இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.
28. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன? -
* அல்லீல்கள் - மரபணுக்களின் மாற்று வடிவம் ஒரு குறிப்பிட்ட பண்பின் வேறுபட்ட புறத்தோற்ற வெளிப்பாட்டிற்குக் காரணமானவை.
* ஒரு மரபணுவிற்கு ஒரே அமைவிடத்தில் மேற் பட்ட அல்லீல்கள் காணப்படுவது பல் கூட்டு அல்லீல்கள் எனப்படும். எ.கா : மனிதனில் காணப்படும் ABO இரத்த வகைகள் (3 அல்லீல்கள் - கட்டுப்படுத்துகிறது. பல்கூட்டு அல்லீல்கள்வழி நடைபெறும் பாரம்பரியம் எனப்படும்.
29. மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?
* கணித மற்றும் புள்ளியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
* கையாண்ட முறைகளில் துல்லியமான புள்ளியல் நிகழ்வுகள் –
* சோதனைகள் – கவனமாக திட்டமிடப்பட்டு அதிக மாதிரிகளும் பயன்படுத்தப்பட்ட விதம்
* பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் - தனிப்பட்ட குரோமோ சோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருப்பது.
* பெற்றோர்களை தூயகால்வழி பெற்றோர்கள் - தேர்ந்தெடுத்த பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டது
* அனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது - அதன் சாதகமான பண்புகள்
* ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
* ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை.
* இயல்பான தற்கருவுறுதல்
* பெரிய மலர்களாதலால், ஆண் மலடாக்கம், மகரந்தச்சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.
30. ஒரு பண்புக்கலப்பு அடிப்படையில் ஓங்குத்தன்மை
விதியை விளக்குக. ஓங்குத் தன்மை விதி : பண்புகள் - காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. எதிரிடைப் பண்பு களுக்கான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்கு தன்மையுடனும் மற்றொன்று ஒடுங்கு தன்மை யுடனும் காணப்படும். இதனை மெண்டலின் ஒருவகைப்பண்பு கலப்பு மூலம் விளக்கலாம்.
ஒரு பண்பு கலப்பு
பெற்றோர் புறத்தோற்றம் - உயரம் X குட்டை
* F1 - ஐப் பொருத்தவரை வெளிப்படாத ஒடுங்கு பண்பு மறைவாயிலிருந்து F2 -வில் மீண்டும் வெளியிட்டது.
* எதிரிடைப் பண்புகளைக் கொண்ட தூயகால் வழிப் பெற்றோர் தாவரங்களிடையே இனக் கலப்பு செய்தபோது F1 இல் ஒரு பண்பு வெளிப் பட்டது. இரண்டாம் மகவுச் சந்ததி (F)வில்) இரு பெற்றோர் பண்புகளும் வெளிப்பட்டது.
31. முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மை வேறுபடுத்துக.
முழுமைபெறா ஒங்குத்தன்மை
1. ஓங்கு அல்லீல் பிறிதொரு ஓங்கு அல்லீலைக் கட்டுப்படுத்தவில்லை - இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறம் தோன்றியுள்ளது.
2. அல்லீல்கள் கலப்புற்றதாக வெளிப்பட்டது
3. ஹைபிரிட் - இரு அல்லீல்களுக்கும் இடைப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருந்தது.
4. புதிய புறத்தோற்றப் பண்பு உருவானது.
5. புதிய ஸ்நேப்டிராகன் மலரின் நிறம் (சிவப்பு X வெள்ளை)
இணை ஓங்குத்தன்மை
1. ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப் படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர்.
2. அல்லீல்கள் கலப்புற வில்லை
3. ஒவ்வொரு அல்லீல்களும் தனித்தனியாக வெளிப் படுத்திக் கொண்டன.
4. புதிய புறத்தோற்றப் பண்பு உருவாகவில்லை
5. மனித இரத்த வகை (ABO)
* கமீலியாவின் சிவப்பு மற்றும் வெள்ளை மலர்கள்
* கதிர் அரிவாள் வடிவ ஹீமோகுளோபின்
32. சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன ?
* DNA தவிர்த்த சைட்டோபிளாச உறுப்புக்களான பசுங்கணிகங்கள், மைட்டோகாண்டிரியங்கள் பாரம்பரியத்தின் தாங்கிக் கடத்திகளாக செயல் படுவது சைட்டோபிளாசம் சார்ந்த பாரம்பரியம் எனப்படும்.
* பசுங்கணிக, மைட்டோகாண்டிரியங்களில் உள்ள DNA பல மரபணுக்களைக் கொண்டுள்ளன.
* இவை செல்பிரிதலின் போது சைட்டோபிளாசம் மூலம் கடத்தப்படுகின்றன.
* இந்தச் சைட்டோபிளாச நுண்உள்ளுறுப்புகளி லுள்ள பிளாஸ்மோஜீன்களே (plasmogenes) இப் பாரம்பரியம் நடைபெற காரணமாக உள்ளது.
* உட்கரு சம்பந்தப்படாததால் இது உட்கரு சாரா பாரம்பரியம் எனவும் கருதப்படுகிறது.
* எ.கா 4 மணித்தாவரத்தின் இலைகளில் காணப் படும் இரு வகை வேறுபட்ட நிறங்கள் அடர் பச்சை & வெளிர் பச்சை.
33. ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி. வரையறை :
* ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல் களுடன் இடைச்செல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம் பரியம் என்று பெயர்.
* மறைக்கும் மரபணு ஓங்கு தன்மையுடையதாய் இருப்பதால் இது ஓங்கு தன்மை மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர்.
* ஓங்கிய மரபணு ஒடுக்கும் மரபணு எனவும் மற்றது மறைக்கப்பட்ட மரபணு எனவும் வழங்கப் படுகிறது.
எ.கா பூசணிகளின் நிறம் :
W - அல்லீல் - வெள்ளை நிறம் W - அல்லீல் - பச்சை நிறம்
G - அல்லீல் - மஞ்சள் நிறம் g - அல்லீல் - பச்சை நிறம்.
34. பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
வரையறை :
* ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் எனப்படும்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம் பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
* H - நில்சன் ஹுல் (1909) கோதுமையின் விதை யுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம் பரியத்தை விளக்கினார்.
* சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்கு பண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்
* அடர் சிவப்பு R1R2R2R2 X வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
* 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் - 1
* 3 - R மரபணுக்கள் மிதமான அடர்சிவப்பு நிறம் -4
* 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம் - 6
* 1 - R மரபணுக்கள் வெளிர் அடர்சிவப்பு நிறம் - 4
* R ஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் - 1
* இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் - கிடைத்தது
* பிற எடுத்துக்காட்டுகள் - மனிதனின் உயரம் & தோல் நிறம்
இரண்டாம் மகவுச்சந்ததியில் கோதுமை விதையுறையின் நிறம் அடர் சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறத்திற்கு மாறும் விகிதம் மணி வடிவ வளைவை உருவாக்குகிறது.
முடிவுகள் :
நில்சன் - ஷூல் ஆய்வு முடிவுகள் :
* பிணைதல் இல்லை.
* விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
* மூன்று தனித்த இணை அல்லீல்கள் - இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
* நில்சன் - ஷீல் F2 சந்ததி விகிதம் 63:1
* இதன்படி கோதுமை விதையுறையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
* F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது. (மரபணுக்களின் தனித்தொதுங்குதல் மற்றும் மறுசேர்க்கை நடைபெறுதல் நடைபெற்றது)
* இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
* மரபணுக்களில் கலப்பு இல்லை .
* பல மரபணு இணைகளின் ஒட்டு மொத்த விளைவால் - பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
* நில்சன் - ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தை தோற்றுவித்தன.
35. தொடர்ச்சியற்ற வேறுபாடுகளைத் தொடர்ச்சியான வேறுபாடுகளுடன் வேறுபடுத்துக.
வேறுபாடுகள் :
* ஒரு சிற்றினத்திற்குள் காணப்படும் தனித்தாவரங்களில் காணப்படும் வேறுபாடுகளாகும்.
* இது பாரம்பரியமாகக் கடத்தப்படுவதாகவோ (அ) சூழ்நிலை காரணிகளைச் சார்ந்தோ ஏற்படுகிறது. இரு வகைப்படும் தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் தொடர்ச்சியான வேறுபாடுகள்
தொடர்ச்சியற்ற வேறுபாடுகள்
1. பண்புசார் பாரம்பரியமாதல் எனப்படும்.
2. இதில் பண்புகள் ஒன்று (அ) இரண்டு முக்கியமான மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
3. திசை தீர்மானிக்க இயலாது
4. இம்மரபணுக்கள் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அல்லீல்களைக் கொண்டிருக்கும்.
5. இடைநிலை தோற்றப்பண்புகள் கிடையாது
6. திடீர் மாற்றத்தினால் ஏற்படுவதால் எப்போதாவது மாற்றங்கள் ஏற்படும்.
7. மரபணுத்தொகை அமைப்பை மாற்றுகிறது. எ.கா. பிரைமுலா
தொடர்ச்சியான வேறுபாடுகள்
1. எண்ணிக்கை சார் பாரம்பரியமாதல் எனப்படும்.
2. பண்புகள் சூழ்நிலை & மரபுக்காரணிகளின் கூட்டு விளைவுகளால் தீர்மானிக்கப்படுகிறது.
3. திசை தீர்மானிக்க இயலும்.
4. பண்புகள் தரம் பிரிக்கப்பட்டு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலை வரை எவ்வித தடையும் இன்றி வெளிப்படுத்தப்படுகிறது.
5. இடைநிலை தோற்றப்பண்புகள் உள்ளன.
6. சாதாரணமாக குரோமோசோம் பிரிதல் குறுக்கேற்றம், கருவுறுதல் போது ஏற்படுகிறது.
7. மரபணுத்தொகை பொதுவாக அமைப்பை மாற்றுவதில்லை. எ.கா. மனிதனின் உயரம் மற்றும் தோலின் நிறம்.
36. ஒரு உயிரினத்தில் ஒரு தனி மரபணு பலபண்புக் கூறுகள் எவ்விதம் புறத்தோற்றத்தைப் பாதிக்கிறது?
* தனியொரு மரபணுவானது, பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத் தோற்றப்பண்புகளை தீர்மானிக்கிறது. இது பல்பண்புக்கூறுகள் கொண்ட மரபணு அல்லது Plelotropy என அழைக்கப்படுகிறது. இவ்வகை மரபணு - பல்பண்புக்கூறு - மரபணு எனப் படுகிறது.
* பட்டாணியில் ஊதாமலர்கள், பழுப்பு விதைகள் மற்றும் இலை அச்சுக்களில் அடர் புள்ளிகள் கொண்ட பண்புகளையுடைய தாவரத்தை, வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற இலை அச்சு ஆகிய வற்றைக் கொண்ட பல பட்டாணித் தாவரங்க ளோடு கலப்புறச் செய்தபோது மூன்று பண்புகள் ஒற்றை மரபணுவால் பாரம்பரியமாவதைக் கண்டறிந்தார்.
* பிற எ.கா : கதிர் அரிவாள் இரத்த சோகை பினைல் கீட்டோநியூரியா நோய்.
37. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளி கொணர்க. 4 மணித் தாவரம் (அந்தி மாந்தாரையில்):
* இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
* இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் - (அ) அடர் பச்சை நிற இலையையடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்த போதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப் படுத்தின.
* இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்பகள் வெளிபடக் காரணம் , பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்குக் காரணம்.