தாவரவியல் - பாரம்பரிய மரபியல் : பாடச்சுருக்கம் | 12th Botany : Chapter 2 : Classical Genetics
பாடச்சுருக்கம்
தோட்டப் பட்டாணித் தாவரத்தில் கிரஹர் ஜோஹன்
மெண்டல் மேற்கொண்ட ஆய்வுகள் "மரபியலின் தந்தை எனப் போற்றுமளவிற்கு அவரை உயர்த்தியது.
அவரின் ஆய்வுகள் "மெண்டலிய விதிகள் என அறியப்பட்டது. மேலும் அவரது அனுபவ மற்றும்
பகுப்பாய்வு முடிவுகள் பல மரபணுவியலாளர்களுக்கு "வேறுபாடுகள்" குறித்து இன்றும்
பகுத்தறியப் பெரும் உதவியாக உள்ளது. இவரின் ஒரு பண்புக் கலப்புச் சோதனை பாரம்பரியமாதலில்
துகள் கொள்கை என்ற கொள்கையை நிரூபிக்க உதவியது இச்சோதனையின் இரண்டாம் மகவுச்சந்ததியில்
மாறுபட்ட பண்புக்கூறுகளில் 3 ஓங்குத்தன்மையுடனும், 1 ஒடுங்குத்தன்மையுடனும் வெளிப்பட்டன.
இதன்மூலம் கிடைத்த 3:1 என்ற விகிதம் மெண்டலின் விகிதமாகக் கருதப்படுகிறது. வேறுபட்ட
பண்புக்கூறுகள் பெற்றோரிடமிருந்து சந்ததிகளுக்குக் கடத்த உதவும் கூறுகளுக்கு காரணிகள்
எனப் பெயரிட்டார். தனது சோதனைகளை நிரூபிக்க அவர் செய்த சோதனைக் கலப்பு அதிகச் சக்தி
வாய்ந்த செயல்முறையாகத் திகழ்கிறது. உயிரினத்தின் மரபணுவாக்கத்தில் பங்கெடுக்கும் இரு
மரபணுக்களையும் சோதனைக் கலப்பு மூலம் தீர்மானித்தார். மெண்டலின் இருபண்புக் கலப்பு
சோதனையில் இரு இணைக்காரணிகள் சுயமாகப் பாரம்பரியமாகிறது. இச்சோதனை மூலம் மெண்டலின்
தனித்திப் பிரிதல் விதியின் முடிவுகள் 9 : 3 : 3 : 1 என்ற விகிதாச்சாரத்தில் இரு புதிய
மரபுக் கூட்டிணைவுகள் சந்ததிகளில் தோன்றின. எனவே உருண்டை , பச்சை பட்டாணிகள் / சுருங்கிய,
மஞ்சள் பட்டாணிகள் தோன்றின. ஒருபண்பு, இருபண்புக் கலப்பு சோதனைகள் இவருக்குப் பின்னர்
மூலக்கூறு அடிப்படையில் விளக்கப்பட்டன.
மரபணுக்களுக்குள் நிகழும் இடைச்செயல் விளைவுகளை
விளக்க எடுத்தாக்காட்டாக "மெண்டலிய விரிவாக்கக் கருத்துக்கள்" இன்றும் இடம்
பெற்றுள்ள கலத்தலற்ற பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாகும். புறத்தோற்ற மாறுபட்ட பண்பிணைவு
ஒத்த பண்பிணைவுக்கு இடைப்பட்ட நிலையில் இது காணப்படுகிறது. புரதங்கள், பிளோவனாய்ட்கள்
மின்னாற்படுத்தல் மற்றும் நிறப்பிரிகை சோதனைகளைக் கொண்டு பிரித்தறிதல் மூலம் தாரவங்களில்
நிகழும் முழுமைபெறா ஓங்கு தன்மையை விளக்கலாம். கொல்லி மரபணுக்கள் தக்க எடுத்துக்காட்டுகளுடன்
விளக்கப்பட்டுள்ளது. ஒரு மரபணு பல பண்புகளைத் தீர்மானிக்கும் பல்கூட்டுப் பாரம்பரியம்
என்ற கொள்கை பட்டாணித் தாவரத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ஓங்கு
மறைக் காரணிகளால் பூசணித் தாவரத்தில் பெறப்பட்ட 12 : 3 : 1 என்ற விகிதம் விவாதிக்கப்பட்டுள்ளது.
பல்காரணிய பாரம்பரியம், பண்புகளின் தொடர் பாரம்பரியத்தை விளக்க ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இப்பாரம்பரிய நிகழ்வு மெண்டலிய விதிகளுக்கு ஒத்துப்போகக் கூடியதாக உள்ளது. உட்கருவழிப்
பாரம்பரியத்திற்கு மாறாக நிகழும் மைட்டோகாண்ட்ரிய, பசுங்கணிக் மரபணுக்களின் பாரம்பரியம்
தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.