Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள்

தாவரவியல்: பாரம்பரிய மரபியல் - மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள் | 12th Botany : Chapter 2 : Classical Genetics

   Posted On :  29.07.2022 10:49 pm

12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல்

மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள்

குரோமோசோம்களின் வெவ்வேறு இலக்குகளில் உள்ள மரபணுக்களின் அல்லீல்களுக்கிடையே இடைச்செயல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள் எனப்படும். இது கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது :

மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள் (Intergenic gene interactions)

குரோமோசோம்களின் வெவ்வேறு இலக்குகளில் உள்ள மரபணுக்களின் அல்லீல்களுக்கிடையே இடைச்செயல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது  மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள் எனப்படும். இது கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது :

ஓங்குத்தன்மை மறைத்தல் பாரம்பரியம் (Dominant Epistasis) ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல்கள் வேறொரு இலக்கிலுள்ள மரபணுவின் அல்லீல்களுடன் இடைச்செயல் புரிந்து, பண்பு வெளிப்பாடு தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். இவ்வாறு மறைக்கும் மரபணு ஓங்குத்தன்மை பெற்ற மரபணுவாக இருப்பின் அது ஓங்குத்தன்மை மறைத்தல் பாரம்பரியம் எனப்படுகிறது. பண்பு வெளிப்பாடுகளை தடுக்கும் மரபணு ஒடுக்கும் மரபணு (epistatic) என்றும், ஒடுக்கப்படும் பண்பிற்குரிய மரபணு மறைக்கப்பட்ட மரபணு (hypostatic) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு மரபணுக்களில் அல்லீல்கள் சேர்ந்திருக்கும் நிலையில் மறைக்கும் மரபணுவின் பண்பே வெளிப்படுகிறது.

பூசணிகனி நிறமானது ஒங்கு அல்லீல் ‘W’ வெள்ளை நிறக் கனிக்கும், ஒடுங்கு அல்லீல் ‘w’ நிறமுடைய கனிக்கும் காரணமாகிறது. ‘W’ அல்லீலின் வெள்ளை நிறம் ஓங்கியும் ‘w’ அல்லீலின் கனி நிறத்தை ஒடுக்கியும் உள்ளது. மற்றொரு மறைக்கப்பட்ட அல்லீல் ‘G’ மஞ்சள் கனிக்கும், அதன் ஒடுங்கு அல்லீல்  ‘g’ பச்சைக் கனிக்கும் காரணமாகும். முதல் அமைவிடத்தில் வெள்ளை நிறம் ஓங்கியும், இரண்டாம் அமைவிடத்தில் மஞ்சள் நிறம் பச்சைக்கு ஓங்கியும் உள்ளது. வெள்ளை நிறக்கனியின் மரபாக்கம் WWgg-யை மஞ்சள் நிறக்கனியின் மரபாக்கம் wwGG-உடன் உடன் கலப்புறச் செய்தால் முதல் மகவுச்சந்ததி (F1) தாவரங்களில் வெள்ளை நிறக் கனி வேறுபட்ட கலப்புயிரி (WwGg)-யும் தோன்றுகிறது. F1 வேறுபட்ட கலப்பு தாவரங்களில் கலப்புறச் செய்யும்போது F2 இறுதியில் 12 வெள்ளை : 3 மஞ்சள் : 1 பச்சை என்ற புறத்தோற்ற விகிதமுடைய கனிகளாகத் தோன்றுகிறது.


மறைக்கும் அல்லீல்களாகவுள்ள W-வானது ‘G’ மற்றும் “g” வெள்ளைக்கு ஓங்கியும், மஞ்சள் அல்லது பச்சைக்கு மறைத்தும் காணப்படும். ஒத்த கருவுடைய ஒடுங்கும் ww மரபணுவாக்கங்கள் (4/16) என்ற எண்ணிக்கையிலான நிறங்களை வழங்கும். இரட்டை ஒடுங்கு wwgg பச்சை கனியை (1/16) வழங்கும். தாவரங்களில் “G” எனும் மரபாக்கம் கொண்ட (wwGg அல்லது wwGG) மஞ்சள் கனியை (3/16) வழங்கும்.


 

Tags : Botany: Classical Genetics தாவரவியல்: பாரம்பரிய மரபியல்.
12th Botany : Chapter 2 : Classical Genetics : Intergenic gene interactions Botany: Classical Genetics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல் : மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள் - தாவரவியல்: பாரம்பரிய மரபியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல்