உயிரி மூலக்கூறுகள் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 8 : Biomolecules
11 வது தாவரவியல் : அலகு 8
உயிரி மூலக்கூறுகள்
6. நைட்ரோஜுனேஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுபடுத்துக.
நைட்ரஜன் காரம்
* நைட்ரஜன் காணப்பட்ட போதும் காரத்தின் பண்புகளைப் பெற்றுள்ளது
நைட்ரஜன்
நிறமற்றது மணமற்றது சுவையற்றது
* எல்லா தனிமங்களுடனும் இலகுவாக வினைபுரியும்
* அதனால் உயிர்களின் கட்டமைப்புக்கான முக்கிய கூட்டுப்பொருட்களை இதனால் உருவாக்க இயல்கிறது
2 வகை பியூரின்
|→ அடினைன்
|→ குவானைன்
பிரிமிடின்
|→ சைட்டோசின்
|→ தையமின்
|→ யூராசில்
* DNA அமைப்பையும் பயன்பாட்டையும் அறிவதற்கு N காரங்கள் அடிப்படையாகும்
கனிம வேதியலில் பயன்படும் காரம்
* இவை உலோக ஆக்ஸைடுகள் அல்லது ஹைட்டிராக்ஸைடுகள் ஆகும்
* இவற்றில் நைட்ரஜன் காணப்படுவதில்லை
* இவை OH- அயனியை விடுவித்து அதாவது ஒரு இணை எலக்ட்ரான்களை விடுவித்து ஒரு புரோட்டானை ஏற்கிறது இவ்வாறு ஒரு புதிய மூலக்கூறுவை உருவாக்குகிறது
* சோப் போல நுரையுடனும் வழுக்கும் தன்மையும் உடையது
* அமிலங்களுடன் வினைபுரிந்து உப்புக்களை உருவாக்குகிறது
* சிவப்பு விட்மஸை நிலமாக மாற்றுகிறது
7. நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
நொதிகள் சூழல் காரணிகளுக்கு உணர்வு நுட்பம் கொண்டவை - அதைப் பாதிக்கும் காரணிகள் பல ஒரு நொதியினால் ஊக்குவிக்கப்படும் வினையின் வேகம் குறிப்பிட்ட காலத்தில் மாற்றமடையும் தளப்பொருள் மற்றும் தோன்றிய வினைபொருள் இவற்றின் அளவை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(i) வெப்பநிலை:
வெப்பமூலக்கூறுகளின் இடப்பெயர்வு அதிகரிக்க உதவுவதால் → தளப்பொருளின் நகர்வு அதிகரிக்க → நொதிமூலக்கூறு நகர்வு அதிகரிக்க → வினைவேகம் அதிகரிக்கிறது
உகந்த வெப்பநிலை
வினை செயல்பாடு அதிகம் நிகழ உதவும் வெப்பநிலை உகந்த வெப்பநிலை எனப்படும்
(ii) pH
உகந்த pH
* வினை செயல்பாடு அதிகம் நிகழ உதவும் pH உகந்த pH எனப்படும்.
* pH → நொதி அமைப்பை மாற்றி → ஊக்குவிப்பு தளத்தின் அமைப்பையும் மாற்றுகிறது
* மிகக்குறைவான (அ) மிக உயர்வான pH உள்ள நிலையில் நொதி உருக்குலைகிறது.
தளப்பொருட்களின் செறிவு :
கொடுக்கப்பட்டுள்ள நொதிகளின் செறிவில் தளப்பொருள் செறிவு அதிகரிக்க அதிகரிக்க, வினைவேகமும் அதிகரிக்கும்
நொதிகளின் செறிவு
நொதிகளின் செறிவு அதிகரிக்க அதிகரிக்க, வினைவேகமும் அதிகரிக்கும்
மிக்கலிஸ் மெண்டன் மாறிலி (km) :
ஒரு நொதியின் ஆரம்ப வேகத்தையும், மாறி வரும் தளப்பொருள் செறிவுகளில் (நொதியின் அளவு மாறாமல் இருக்கும் போது அளவிட்டு வரைபடம் மூலம் குறிக்கலாம். தளப்பொருள் அதிகரிக்க அதிகரிக்க, வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தளப்பொருள் செறிவை எட்டியவுடன் வினையின் வேகம் படிப்படியாகக் குறைகிறது. பின் வரைபடம் தட்டையாகிறது. வரைபடத்தின் அதிக வேக செயல்பாட்டைக் காட்டும் புள்ளி Vmax எனப்படும்.
நொதிச்செயல் ஒடுக்கிகள்:
செல்லில் காணப்படும் சில பொருட்கள் நொதியுடன் வினைபுரிந்து வினையின் வேகத்தைக் குறைக்கின்றன. இவை ஒடுக்கிகள் எனப்படும். இவை இருவகைப்படும்
1. போட்டி ஒடுக்கிகள்
2. போட்டி இலா ஒடுக்கிகள்
8. நொதிகளின் வகைப்பாட்டு உருவரையைச் சுருக்கமாக எழுதுக.
9. DNA - வின் பண்பினை எழுது.
* இரு இழைகள். எதிரெதிர் திசையில் பின்னிக் காணப்படுகின்றன.
* ஒன்று 5' - 3' திசையில் இருந்தால், மற்றொரு இழை 3' - 5' திசையில் செல்லும்
* 5' முனையில் பாஸ்பேட் தொகுதியும் 3'
முனையில் OH- தொகுதியும் உள்ளது
* கார இணைவுகளில் இருந்து சர்க்கரை 120° குறுகிய கோணத்திலும்,240° அகலக் கோணத்திலும் நீட்டிக் கொண்டிருக்கும்
* 120° ----- சிறு பள்ளம் உடையது
* 240° ------ முதன்மைப்பள்ளம் உடையது.
* ஒவ்வொரு திருப்பமும் 360° - 3.4 mm நீளம் கொண்டது. அதாவது ஒரு திருப்பத்தில் 10 கார இணைகள் உள்ளன என்பது X - கதிர் படிக அமைப்பினால் அறியப்படுகிறது. எ.கா B-DNA
* DNA வின் விட்டம் - 20 Å குறைந்த பட்ச வளைவு 34 Å ஆகும்
திருகுச்சுருளின் வெப்ப இயக்கு நிலைத்திறன் மற்றும் கார இணைகளின் குறிப்பிட்ட தனித்தன்மைக்குக் காரணம்
(i) இரட்டைத்திருகுச்சுருள் நிறைவுபடுத்தும் காரங்களுக்கு இடையேயுள்ள ஹைட்ரஜன் இணைப்புகள்
(ii) பல காரங்கள் ஒன்றின் மேல் ஒன்று தொடர்பு கொண்டு திருகுச்சுருள் அச்சிற்கு செங்குத்தாக காணப்படுகிறது.
(iii) திருகுச்சுருள் அடுக்கில், எலக்ட்ரான் கூட்டங்கள் காரங்களுக்கிடையே தொடர்பு கொண்டு (II-II) இரட்டை திருகுச்சுருள் அமைப்புக்கு நிலைத்திறன் அளிக்கின்றது.
(iv) பாஸ்ஃபோடை எஸ்டர் பிணைப்புகள் DNA திருகுச்சுருளுக்குத்
துருவத்தன்மை தருவதோடு அவை வமையான சகப்பிணைப்புகளை ஏற்படுத்துவதால், பாலி நியூக்ளியோடைடு சங்கிக்கு அவை வமையான சகப்பிணைப்புகளை
ஏற்படுத்துவதால், பாலி நியூக்ளியோடைடு சங்கிக்கு வமையும்,
நிலைப்புத்தன்மையும் அளிக்கின்றன
பிளீக்டோனீமிக் சுருள்கள்
DNA வின் இரண்டு இழைகள் திருகுச்சுருள் அமைப்பில் ஒன்றோடொன்று பிணைந்து காணப்படுகிறது. இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றை எளிதில் பிரிக்க முடியாதவாறு காணப்படுகிறது.
பாரானீமிக் சுருள்கள்
* இரண்டு இழைகளும், ஒன்றோடொன்று பக்கவாட்டில் இணைந்து அமைந்துள்ளன.
* DNA இழைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று எளிதாகப் பிரிக்கப்படக் கூடியதாக அமைந்திருக்கின்றன. இதற்கு பாரானீமிக் சுருள்கள் எனப்படுகின்றன.
* திருகுச் சுருளின் ஒவ்வொரு சுற்றிற்கும் இடையேயுள்ள தூரத்தைக்கொண்டு மூன்று வடிவங்களாக உள்ளன.
* ADNA, BDNA, ZDNA ஆகும்
10. பல வகையான RNA வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.
ரைபோநியூக்ளிக் அமிலம் (RNA) என்பது பல அடுக்கு மூலக்கூறாகும்.3 வகைப்படும்
1. தூதுவ RNA (mRNA)
* ஓரிழையாலானது
* புரதங்களை உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்களின் நகனைப் பெற்றுள்ளது. நிலையற்றது
* மொத்த RNA இல் இதன் அளவு 5%
* புரோகேரியோட்டுகளில் உள்ள mRNA (பாசிஸ்ட்ரானிக்)
* யூகேரியோட்டுகளில் உள்ள mRNA (மோனோசிஸ்ட்ரானிக்)
II. கடத்து RNA (tRNA)
* தூதுவ RNA விலுள்ள மரபுக்குறியீட்டை மொழிபெயர்த்து அமினோஅமிலங்களை ரைபோசோமுக்குக் கடத்தி புரதம் உருவாக உதவுகிறது
* மடிப்புற்று முப்பரிமாண அமைப்பு கொண்டது
* மொத்த RNA வில் இதன் அளவு 15%
இது நிலையற்றது - கரையும் தன்மை உடையது
III. ரைபோசோமல் RNA (FRNA)
* ரைபோசோம்களை உருவாக்க உதவும் RNA
* மொத்த RNA அளவில் இதன் அளவு 80%
* ரைபோசோம்களின் துணை அலகுகளுக்கு வடிவுருவத்தைத் தருகிறது
* 120 - 3000 என்ற எண்ணிக்கையில் நியூக்ளியோடைடுகளைப் பெற்ற மீச்சேர்மங்களாக உள்ளன இவற்றிற்குரிய ஜூன்கள் அதிக நிலைப்புத்தன்மை பெற்றவை இவை மரபு வழி ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுகின்றன