தாவரவியல் - உயிரி மூலக்கூறுகள் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 8 : Biomolecules
உயிரி மூலக்கூறுகள்
மதிப்பீடு
1. கார அமினோ அமிலம்
(அ) ஆர்ஜினைன்
(ஆ) ஹிஸ்டிடின்
(இ) கிளைசின்
(ஈ) குளுட்டாமைன்
2. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்
அ) சைட்டோகுரோமில் சையனைடு வினை
ஆ) ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை
இ) குளுக்கோஸ் – 6 – பாஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது
ஈ) சக்சினிக் டிஹைட்ரோஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது
3. புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது. கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.
அ) உயிர் எதிர் பொருள்
ஆ) நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்
இ) மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கபடுகின்றன
ஈ) ஹார்மோன்கள்
4. உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையைக் கொண்ட கரிமச் சேர்மங்களை வரைப்படம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.
பிரிவு சேர்மம்
கொலஸ்டிரால் குவானைன்
அமினோ அமிலம் NH2
நியூக்ளியோடைடு அடினைன்
நியூக்ளியோசைடு யூராசில்
5. நைட்ரோஜீனேஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக
6. DNA-வின் பண்பினை எழுது.
7. பல வகையான RNA-வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.