திசு அளவிலான கட்டமைப்பு | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation
6. சிலவகை எபிதீலியங்கள் பொய்யடுக்கினால் ஆனவை இதன் பொருள் என்ன?
• தூண் வடிவத்திலும், சமமற்ற அளவுகளிலும் காணப்படும். இவை ஒரு அடுக்கினால் ஆனது. ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்குகள் போல் தோன்றும்
• இதற்கு காரணம் இதன் செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுதலாகும்.
7. வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.
வெள்ளை அடிப்போஸ் திசு
1. குறை மைட்டோகாண்டிரியங்களைக் கொண்டது.
2. ஊட்டச்சத்துக்களை சேமித்து வைக்கிறது.
பழுப்பு அடிப்போஸ் திசு
1. அதிக மைட்டோகாண்டிரியங்களைக் கொண்டது.
2. இரத்த ஓட்டத்தையும், உடலையும் வெப்பப்படுத்துகிறது. பிறந்த குழந்தை உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தாமல் வெப்பத்தை உயர்த்துகிறது.
8. இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?
• இரத்தம் திரவ இணைப்புத் திசுவாகும். இதில் பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டைச் செல்கள் உள்ளன.
• இரத்த ஓட்டமண்டலத்தில் ஊட்டப்பொருள்கள், கழிவுப் பொருள்கள், சுவாச வாயுக்கள் ஆகியவற்றை கடத்தும் ஊடகமாக உள்ளது.
9. மீள் தன்மை நாரிழைகளை, மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து.
10. எபிதீலியத் திசுக்களின் ஏதேனும் நான்கு செயல்பாடுகளைக்கூறி அச்செயலில் ஈடுபடும் திசுவை எடுத்துக்காட்டுடன் கூறு.
11. இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.
12. எபிதீலியம் என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.
உடலின் மேற்பரப்பிலும், உடற்குழியினைச் சுற்றிலும் காணப்படும் செல்வரிசைக்கு எப்பிதீலியம் என்று பெயர்.
எபிதீலிய வகைகள்
1. தட்டை வடிவ எப்பிதீலியம்
2. கனசதுர வடிவ எப்பிதீலியம்
3. தூண் வடிவ எப்பிதீலியம்
4. குறுயிழை எப்பிதீலியம்
5. குறுயிழை அற்ற எப்பிதீலியம்
6. பொய்யடுக்கு எப்பிதீலியம்
7. கூட்டு எப்பிதீலியம்
பண்புகள்
மெல்லிய தட்டையான, ஓரடுக்கு செல்கள் ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்டது.
ஓரடுக்கு கனசதுர வடிவத்தைக் கொண்டது.
உயரமான ஓரடுக்குச் செல்லால் ஆனது. அடிப்பகுதியில் நீள்வட்ட உட்கரு உண்டு.
தூண் வடிவ எப்பிதீலிய செல்களின் உச்சியில் குற்றிழை காணப்படுதல்.
தூண் வடிவ எப்பிதீலியத்தில் குறுயிழை இல்லாதிருத்தல்.
தூண் வடிவத்திலும், சமமற்ற அளவுகளிலும் காணப்படும்.
பல அடுக்கு செல்களால் ஆனது.