விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals
மதிப்பீடு
1. லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது.
அ) 13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில்
ஆ) 14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
இ) 12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில்
ஈ) 14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில்
விடை: ஆ) 14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
2. மண்புழுக்களின் பால் தன்மை
அ) தனிப்பால் உயிரிகள்
ஆ) இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை
இ) சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள்
ஈ) கன்னி இனப்பெருக்க உயிரிகள்
விடை: ஆ) இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை
3. மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத்துளைத்துச்செல்கின்றன. அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப்பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
அ) சரி
ஆ) தவறு
விடை: ஆ) தவறு
4. கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் -------- இணை ----------- மற்றும் ----------------- வடிவக் கண்கள் உள்ளன.
அ) ஓர், காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
ஆ) இரு, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ
இ) பல, காம்பற்ற கூட்டுக்கண்கன். மற்றும் சிறுநீரக வடிவ
ஈ) பல, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
விடை: அ) ஓர், காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
5. பெரிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை.
அ) நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திப்பில், தோராயமாக 150.
ஆ) முன்குடல் மற்றும் நடுக்குடல் சந்திப்பில்,தோராயமாக 150.
இ) அரைவைப்பையினைச் சூழ்ந்து 8.
ஈ) பெருங்குடல் மற்றும் மலக்குடல் சந்திப்பில் 8.
விடை: அ) நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திப்பில், தோராயமாக 150.
6. கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை.
அ) முப்பரிமாணம்
ஆ) இருபரிமாணம்
இ) மொசைக்
ஈ) கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை
விடை: இ) மொசைக்
7. ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
அ) 10,10
ஆ) 9,10
இ) 8,10
ஈ) 9,9
விடை: அ) 10,10
8. எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.
அ) தவளை
ஆ) மண்புழு
இ) புறா
ஈ) கரப்பான் பூச்சி
விடை: ஈ) கரப்பான் பூச்சி
9. தவளையின் வாய்க்குழி சுவாசம்.
அ) நாசித் துளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.
ஆ) நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.
இ) பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.
ஈ) வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.
விடை: ஈ) வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.
10. தவனையின் சிறுநீரகம்.
அ) ஆர்க்கிநெஃப்ராஸ்
ஆ) புரோநெஃப்ராஸ்
இ) மீசோநெஃப்ராஸ்
ஈ) மெட்டாநெஃப்ரோஸ்
விடை: இ) மீசோநெஃப்ராஸ்
11. தவளையின் தலைப்பிரட்டையில் காணப்படும் செவுள்கள் எதை உணர்த்துகின்றன.
அ) முன்பு மீன்களும் இருவாழ்விகளாய் இருந்தன
ஆ) தவளை ஒத்த முன்னோடிகளிலிருந்து மீன்கள் தோன்றின.
இ) வரும் காலத்தில் தவளைகள் செவுள்களைப் பெறும்.
ஈ) செவுள்கள் கொண்ட முன்னோடிகளிலிருந்து தவளைகள் தோன்றின.
விடை: ஈ) செவுள்கள் கொண்ட முன்னோடிகளிலிருந்து தவளைகள் தோன்றின.
12. கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்.
அ) மண்புழுவில் ஒரு இணை ஆண் இனத்துளை உள்ளது
ஆ) மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன.
இ) மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மட்டும் உள்ளன.
ஈ) டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒருபகுதியாகும்,
விடை: இ) மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மட்டும் உள்ளன.
13. கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?
அ) உணர் நீட்சிகள் கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் மலப்புழைத்தண்டுகள்
ஆ) உணர்நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் டெக்மினா
இ) உணர்நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம் மற்றும் மலப்புழைநீட்சி
ஈ) உணர்நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி மற்றும் காக்சா
விடை: அ) உணர் நீட்சிகள் கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் மலப்புழைத்தண்டுகள்