Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்

இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும் | 10th Social Science : History : Chapter 3 : World War II

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்

சுருக்கமாக விடையளிக்கவும்

சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் உலகப்போர் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

• முசோலினி (இத்தாலி)

• ஹிட்லர் (ஜெர்மனி)

• பிராங்கோ (ஸ்பெயின்)

 

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

• ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி,

• தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும்,

• ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.

 

3. முத்துத் துறைமுக நிகழ்வை வரி.

• 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத்தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.

• இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.

• அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

• இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது.

• சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.

 

4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?

• பெவரிட்ஜ் அறிக்கையை 1942 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வெளியிட்டது.

• அவ்வறிக்கையில், பொது நலனுக்குப் பெருந்தடைகளாக உள்ள வறுமை நோய் ஆகியவற்றை வெற்றிகொள்ள, பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

 

5. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• உலக வங்கி

• பன்னாட்டு நிதி அமைப்பு

 

6. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

• உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது.

• நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல்.

• பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது.

• வேலைவாய்ப்பினைப் பெருக்குவது.

• நீடித்தப் பொருளாதார வளர்ச்சி.

• உலகம் முழுவதும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.

 

Tags : World War II | History | Social Science இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 3 : World War II : Answer the questions briefly World War II | History | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர் : சுருக்கமாக விடையளிக்கவும் - இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்