Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 3 : World War II

   Posted On :  24.07.2022 06:16 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் உலகப்போர் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: விரிவாக விடையளிக்கவும். VII. மாணவர்களின் செயல்பாடுகள் VIII. வரைபடப் பணி.

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

போரின் விளைவுகள்:

உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:

•  வல்லரசுகள் தலைமையில் அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது.

• ஒரு அணிக்கு அமெரிக்காவும், மற்றொரு அணிக்கு சோவியத் யூனியனும் தலைமை தாங்கியது.

•  கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப் பரவல்:

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன.

• பலநாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள்:

•  பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

காலனி நீக்கச் செயல்பாடு :

• காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர்.

• அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.

 

2. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு:

 1945 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் நாள் ஐ.நா. சபை தொடங்கப்பட்டு 51 நாடுகள் முதலில் கையெழுத்திட்டன.

•  தற்போது ஐக்கியநாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

• ஒவ்வொரு நாடும் சிறியதோ, பெரியதோ ஐ.நா. சபையில் சமமான வாக்குகளை பெற்றுள்ளன.

பொதுச்சபை

• ஆண்டுக்கொரு முறை கூடும் இந்த அமைப்பில் நாடுகளின் நலன் சார்ந்த விசயங்களும் முரண்பாட்டிற்கான காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு அவை:

• பாதுகாப்பு சபையானது 15 உறுப்பினர்களைக் கொண்டது.

• அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.

நிர்வாக அமைப்பு:

•  ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்கிறது.

• பொதுச் செயலாளர் பொதுச்சபையில் பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பன்னாட்டு நீதிமன்றம்:

• ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும்.

• இது நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் அமைந்துள்ளது.

பொருளாதார சமூக மாமன்றம் :

•  ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கம்.

• ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்து பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இதன் பணியாகும்.

.நா. துணை அமைப்புகள்

• உணவு மற்றும் வேளாண் அமைப்பு.

• உலக சுகாதார நிறுவனம்

• ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு.

• யுனெஸ்கோ.

• யுனிசெப்.

• ஐ.நா. வளர்ச்சித் திட்டம்.

.நாவின் செயல்பாடுகள்

• உலகம் எதிர்கொண்ட மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.

1960-களில் காலனியாதிக்க நீக்கம் இதன் செயல்பாடுகளில் முக்கியமானது.

• மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம், பாலின சமத்துவம் - போன்ற செயல்பாடுகள் ஐ.நா.சபை வளையத்தினுள் வந்துள்ளது

• மிகச் சிறப்பாக கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நாவின் அமைதிப்படை உலகம் முழுவதும் மோதல்கள் அரங்கேறிய பல்வேறு பணிகளில் சிறப்பான பணி செய்து அமைதியை நிலைநாட்டியுள்ளது.

 

VII. மாணவர்களின் செயல்பாடுகள்

 

1. உலக வரைபடத்தில் அச்சு நாடுகள், நேசநாடுகள், இரண்டாம் உலகப்போரின் முக்கிய போர்க்களங்கள் ஆகியவற்றை குறிக்கவும்.

ஆசிரியர் மாணவர் செயல்பாடுகள்.

 

VIII. வரைபடப் பணி.

 

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும்.

1. அச்சு நாடுகள்

2. நேச நாடுகள்

3. ஹீரோஷிமா, நாகசாகி, ஹவாய் தீவு, மாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ



 

Tags : World War II | History | Social Science இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 3 : World War II : Answer in detail World War II | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர் : விரிவாக விடையளிக்கவும். - இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்