Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள்

இரண்டாம் உலகப்போர் - போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள் | 10th Social Science : History : Chapter 3 : World War II

   Posted On :  27.07.2022 04:49 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்

போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள்

மக்கள் நலஅரசு (Welfare State) எனும் சொற்றொடர், அரசாங்கமே மக்களின் சமூகப் பொருளாதார நலன்களுக்குப் பொறுப்பு என்ற கோட்பாட்டைக் குறிப்பதாகும். இவ்வாறுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பதோடு இல்லாமல் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் விரிவுபடுத்துவதாகும்.

போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள்

மக்கள் நலஅரசு (Welfare State) எனும் சொற்றொடர், அரசாங்கமே மக்களின் சமூகப் பொருளாதார நலன்களுக்குப் பொறுப்பு என்ற கோட்பாட்டைக் குறிப்பதாகும். இவ்வாறுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பதோடு இல்லாமல் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் விரிவுபடுத்துவதாகும்.

1942இல் பிரிட்டன் பொதுவாக பெவரிட்ஜ் அறிக்கை (Beveridge Report) என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், பொது நலனுக்குப் பெருந்தடைகளாக உள்ள வறுமை, நோய் ஆகியவற்றை வெற்றிகொள்ள, பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

போருக்குப் பின்னர் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்தது. “தொட்டிலிலிருந்து கல்லறை வரை” மக்களைக் கவனித்துக்கொள்ளும் திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அவ்வரசு உறுதியளித்தது. மக்களுக்கு விரிவான அளவில் தேசிய நலச் சேவையின் மூலம் இலவச மருத்துவ வசதி, முதியோர்க்கு ஓய்வூதியம், வேலையற்றோர்க்கு உதவித்தொகை போன்ற நிதியுதவிகள் குழந்தை நல சேவைகள், குடும்பநலச் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அனைவருக்குமான இலவசப் பள்ளிக் கல்வி என்பதற்கு மேலாக இவையனைத்தும் அளிக்கப்பட்டன.

இத்திட்டங்களின் பலன்கள் முதியோர் ஓய்வூதியம், வேலையற்றோர்க்கான உதவித்தொகை ஆகியவற்றைப் பொறுத்த அளவில் பணப் பரிமாற்றத்தின் மூலமாகவும் ஏனைய நலன்கள், இலவசச் சேவைகள் மூலமாகவும் மக்களைச் சென்றடைந்தன. இவற்றிற்கு மேலாக இந்நாடுகளில் பொருளாதார ஏற்றதாழ்வுகளை குறைப்பதற்காக முற்போக்கு வரிவிதித்தலின் மூலம் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் மீது அதிகவரி விதிக்கப்பட்டது.


Tags : World War II இரண்டாம் உலகப்போர்.
10th Social Science : History : Chapter 3 : World War II : Post-War Welfare States in Europe World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர் : போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள் - இரண்டாம் உலகப்போர் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்