Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும் | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu

   Posted On :  24.07.2022 06:38 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

சுருக்கமாக விடையளிக்கவும்

சமூக அறிவியல் : வரலாறு : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

• வரி வசூலிப்பது.

• நிலப்பகுதிகளை நிர்வகிப்பது.

• வழக்குகளை விசாரிப்பது.

• சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது.

• இவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.

 

2. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.

• கிழக்கில் - சாத்தூர், நாகலாபுரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி.

• மேற்கில் - ஊத்துமலை, தலைவன் கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர்.

 

3. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

• பூலித்தேவரை தாக்கும் பொருட்டு நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.

• மாபூஸ்கான் படையில் கம்பெனியின் சிப்பாய்கள் மற்றும் கர்நாடகப் பகுதி குதிரைப்படை, காலாட்படை, களக்காடு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.

• இதற்கு முன்பாகவே திருவிதாங்கூரின் 2000 படை வீரர்கள் பூலித்தேவருடன் இணைந்தனர்.

• களக்காட்டு போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

 

4. கம்பெனியாருக்கும், கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?

• அனைத்து பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி ஆட்சியர்களை நியமித்தது.

• ஆட்சியர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தி படைகள் மூலம் வரி வசூல் செய்தனர்.

• இதுவே கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்கும் பெரும் பகை ஏற்பட காரணமாக விளங்கியது.

 

5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.

• மருது சகோதரர்கள் ஜூன் 1801 இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.

• இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை' என்றழைக்கப்படுகிறது.

• பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801 ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.

• ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.

 

Tags : Early Revolts against British Rule in Tamil Nadu | History | Social Science ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu : Answer the questions briefly Early Revolts against British Rule in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் : சுருக்கமாக விடையளிக்கவும் - ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்