Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu

   Posted On :  24.07.2022 06:40 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

விரிவாக விடையளிக்கவும்.

VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.

• பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக தனது 30 ஆம் வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.

• கம்பெனி நிர்வாகத்திற்கும், கட்டபொம்மனுக்கும் மோதல் போக்கு வளர்ந்து  கொண்டே வந்தது.

• பாளையப் பகுதியில் வரி வசூல் செய்த கம்பெனி நிர்வாகம் படைபலத்துடன் வசூல் செய்தது கட்டபொம்மனுக்கு பெரும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

• கட்டபொம்மனிடமிருந்து நிலவரி நிலுவைத் தொகை 1798 ஆம் ஆண்டு வரை 3310 பகோடாக்கள் இருந்தது.

• இதனை வசூல் செய்ய கம்பெனியால் நியமிக்கப்பட்ட ஜாக்சன் என்ற கர்வம் கொண்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

• இவர் இராமநாதபுரத்தில் கட்டபொம்மனை வரவழைத்து, காக்க வைத்து அவமானப்படுத்தினார்.

• கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்ரமணியத்துடன் தப்பிச் செல்ல முயன்றபோது நடந்த மோதலில் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

• தனது பாஞ்சாலங்குறிச்சி வந்த கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தன்னை அவமானப்படுத்தியதைப் பற்றி கம்பெனி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.

• சிவகங்கை மருது பாண்டியர்கள் ஏற்படுத்தியிருந்த தென்னிந்திய கூட்டமைப்பில் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்ப்பது என முடிவெடுத்தார்.

1799 மே மாதம் வெல்லெஸ்லி பிரபு கட்டளையின்படி கம்பெனி படையும், திருவிதாங்கூர் படையும் இணைந்து கட்டபொம்மனை சரணடையும்படி கோரின.

• கட்டபொம்மன் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு தப்பியோடினார். புதுக்கோட்டை அரசர்களால் கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டு திருநெல்வேலிக்கு அருகே கயத்தாறில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

 

2. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.

• சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு மருது சகோதரர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்க முற்பட்டனர்.

• சிவகங்கை சீமைக்கு முத்து வடுகநாதர் இறப்பிற்குப் பின் வேலுநாச்சியாருக்கு அரசுரிமை மீட்டெடுக்க அரும்பாடுபட்டனர்.

• கம்பெனி ஆட்சி எதிர்ப்பு மற்றும் கட்டபொம்மனுக்கு ஆதரவு என இவர்களது போக்கு சிவகங்கை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது.

1800 இல் மருது சகோதரர்களின் கலகம் திண்டுக்கல் கோபால நாயக்கர், மலபார் கேரளவர்மா, மைசூர் கிருஷ்ணப்பா ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பால் வழி நடத்தப்பட்டது.

• கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரை, செவத்தையா ஆகிய இருவருக்கும் மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்து உதவியது கம்பெனி ஆட்சிக்கு பிடிக்கவில்லை.

• இவர்கள் இருவரையும் ஒப்படைக்கும்படி கம்பெனி நிர்வாகம் வற்புறுத்தவே அவர்கள் மறுத்து ஜூன் 1801 இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய திருச்சிராப்பள்ளி பேரரறிக்கை வெளியிட்டனர்.

• தமிழக பாளையக்காரர்கள் பலரும் ஒன்று சேர்ந்து மருது சகோதரர்களுடன் இணைந்து 20,0000 ஆட்கள் கொண்ட படைப்பிரிவை உருவாக்கினர்.

• ஆனால் கம்பெனி ஆட்சி தங்களுக்கு துணையாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், எட்டையபுரம் பாளையக்காரர்களை இணைத்து பாளையக்காரர்கள் படையில் பிரிவினையை உண்டாக்கியது.

1801 மே மாதம் மருது சகோதரர்கள் மீது கம்பெனி நிர்வாகம் தாக்குதல் தொடர்ந்தது. மருது சகோதரர்கள் படைகள் பிரான்மலையிலும் காளையார்கோவிலிலும் தஞ்சம் அடைந்தது.

• கம்பெனி படையினரிடம் அவர்கள் பிடிபட்டவுடன் சிவகங்கை பிரிட்டிஷ் கம்பெனியில் இணைக்கப்பட்டது.

1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டவுடன் சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சி முடிவடைந்தது.

 

3. வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.

• வேலூர் புரட்சிக்கு முன்பாகவே 1792 இல் திப்புவுடன் ஏற்பட்ட மோதலின் பின்பு சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.

• மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச் சுவான்தார்கள் போன்றோர் சிந்தித்து நிதானமாகச் செயல்பட்டதே 1806ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.

• பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. பதவி உயர்வும் குறைவாக இருந்தது.

• சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் குறைவான மதிப்பளித்தனர்.

• அவர்களது வேளாண் கொள்கை சிக்கலாக இருந்தது.

• நிலக்குத்தகை முறையின் நிலையற்ற தன்மை, 1805ஆம் ஆண்டு கடும் பஞ்சம், நெருக்கடி போன்றவைகள், பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய விதிமுறை அறிவுரைகள்.

• எ.கா: மத அடையாளங்கள்

• புதிய ரக துப்பாக்கிகளில் தடவப்பட்ட விலங்குகள் கொழுப்பு மற்றும் தோல் உறைகள்.

• இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த அனைத்தையுமே கம்பெனி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது.

1806 ஜூலை 10 அதிகாலையில் நடந்த புரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த கர்னல் கில்லஸ்பியின் கொடுங்கோன்மை.

• இவ்வாறு பல கூறுகள் 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன.

 

VII. செயல்பாடுகள்

 

1. ஆசிரியர் மாணாக்கர்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்ட ஆரம்பகால தேசபக்த தலைவர்களின் படங்களை சேகரிக்கச் சொல்லலாம். அவர்களது கற்பனைத்திறனைக் கொண்டு அத்தலைவர்கள் உயிர்நீத்த போர்க்களத்தைப் படமாக வரையச் சொல்லலாம்.

மாணவர் செயல்பாடு.

 

2. மாணவர்கள் ஜாக்சனுக்கும், கட்டபொம்மனுக்குமிடையே நடந்த உரையாடலை நாடக வடிவில் ஆசிரியரின் வழிகாட்டுதலோடு அரங்கேற்றலாம்.

வகுப்பறையில் ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.

 

Tags : Early Revolts against British Rule in Tamil Nadu | History | Social Science ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu : Answer in detail Early Revolts against British Rule in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் : விரிவாக விடையளிக்கவும். - ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்