தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.
• அரசியலமைப்பு
வழிமுறையில் நம்பிக்கை கொண்டிருத்தல்.
• அவைக் கூட்டங்களை
நடத்துதல்.
• பிரச்சனைகள்
குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுதல்.
• தங்கள் கண்ணோட்டங்களை
மொழி நடையில் வேண்டுகோள் மூலம் மனுக்கள் அளித்தல்.
• குறிப்பாணை
மூலம் அரசுக்கு சமர்ப்பித்தல்.
• ஆங்கிலேயர்களின்
காலனியச் சுரண்டலை அம்பலப்படுத்துதல்.
2. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
• திருநெல்வேலி
தூத்துக்குடியில் நூற்பாலை தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதில் வ.உ. சிதம்பரனார் சுப்பிரமணிய சிவாவுடன்
ஒத்துழைத்தார்.
• ஆங்கில அரசு
இவர்கள் இருவரையும் தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது.
• இதனை எதிர்த்து
திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.
• காவல்நிலையங்கள், நீதிமன்ற-நகராட்சி அலுவலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
• ஆங்கிலேய காவலர்கள்
துப்பாக்கி சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.
3. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின்
பங்களிப்பு யாது?
• அன்னிபெசன்ட்
அம்மையார் தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்ல நியூ இந்தியா, காமன் வீல் என இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
• 1910 பத்திரிகை சட்டத்தின்படி பெருமளவு பிணைத்தொகையை செல்லுத்தியவர்.
• பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களை தமது இயக்கத்தில்
சேர்த்தவர்.
• ‘அதிநவீன வசதிகளுடன்
கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது' எனக் கூறியவர்.
• இந்தியர்களுக்கு
தன்னாட்சி கிடைக்க அரும்பாடுபட்டவர்.