Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.

• வங்க பிரிவினையின் விளைவாக சுதேசி இயக்கம் தோன்றியது.

• அந்நிய பண்டங்களை புறக்கணித்தல் போன்ற தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

• சுப்பிரமணிய பாரதியாரின் தேசப்பற்று மிக்க பாடல்கள், பெருமளவு இளைஞர்களை சேர்த்தது.

• வ.உ. சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல்களை தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் இயக்கினார்.

• திருநெல்வேலி கலகம் இளைஞர்களிடையே போராட்ட குணத்தை அதிகரித்தது.

• பாண்டிச்சேரியில் புகலிடமாக இருந்து விடுதலை உணர்வை மேற்கொண்டனர்.

• ஆங்கிலேய அதிகாரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று மக்களிடையே தேசப்பற்றை தூண்டினார்.

• பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் செய்து பல சொற்பொழிவுகளை நடத்தி இளைஞர்களை கவர்ந்தார்.

• தென்னிந்தியா நலவுரிமைச் சங்கமும் காங்கரசின் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டது.

• ஒத்துழையாமை இயக்கதின் போது சி. இராஜாஜியும், ஈ.வெ.ரா. பெரியாரும் துடிப்புடன் செயல்பட்டனர்.

• வரி கொடா இயக்கமும், அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பும் தமிழகம் முழுவதும் நடந்தேறின.

 

2. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

பிராமணர் அல்லாதோர் இயக்கம்

•  தங்கள் நலன்களைப் பாதுகாக்க பிராமணரல்லாதோர்கள் 1912 இல் சென்னை திராவிடர் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கினர்.

•  இக்கழகத்தின் செயலாளராக C. நடேசனார் பணியாற்றினார். அவர் 1916 இல் பிராமணர் அல்லாத மாணவர்க்கு திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவினார்.

•  இதில் T.M. நாயர், P. தியாகராயர் ஆகிய நபர்கள் முக்கிய பங்காற்றினர்.

•  இதுவே பிராமணரல்லாதோர் நலன்களைப் பாதுகாக்க தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக மாறியது.

•  ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்ற மூன்று செய்தித்தாள்களில் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

• இதுவே பின்னர் நீதிக் கட்சியாக மாறி பிராமணர் அல்லாத பிற மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடியது.

•  இதன் விளைவாக 1919ஆம் ஆண்டுச் சட்டம் பிராமணல்லாதோர்க்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது.

•  1920 நீதிக்கட்சி சென்னை மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்று பிற மக்களுக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது.

 

3. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.

•  1927 இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு சுதந்திரமே தனது இலக்கு என தீர்மானித்தது.

•  காந்தியடிகளின் தண்டி யாத்திரை தமிழகத்திலும் எதிரொலித்தது.

•  ராஜாஜி அவர்கள் திருச்சியில் இருந்து கடற்கரை நகரமான வேதாரண்யம்  சென்று உப்பு காய்ச்சி கால்நடையாக போராட்டத்தை தொடங்கினார்.

•  ராஜாஜியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

• நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் தேசபக்தி வீரப் பாடல்கள் அணிவகுப்பில் எதிரொலித்தது.

•  பயணித்த பாதை எங்கும் வரவேற்பு கிடைத்தது.

•  ராஜாஜி தலைமையிலான 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பு காய்ச்சி எதிர்ப்பை தெரிவித்தனர்.

•  ராஜாஜி மற்றும் T.S.S. ராஜன், திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

•  இந்த சட்ட மறுப்பு இயக்கங்கள் சென்னை திருவல்லிக்கேணி, இராமேஸ்வரம், உவரி, வேப்பலோடை, தூத்துக்குடி, தருவைகுளம் போன்ற இடங்களில் நடந்தேறியது.

•  தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்நிய துணிகள் விற்கும் கடைகளை தடை செய்தார்.

•  திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் திருப்பூர் குமரன் காவலர்கள் தடியடியில் இறந்தார்.

•  மொத்தத்தில் சட்டமறுப்பு இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றது.

 

VII. செயல்பாடுகள்

 

1. தமிழ்நாட்டிலுள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்கள் குறித்து மாணவர்களை ஓரிரு வாக்கியங்கள் எழுதச் சொல்லவும்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.

 

2. விவாத மேடை: மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள், புரட்சிகர தேசியவாதிகள், அன்னிபெசன்ட்டின் ஆதரவாளர்கள், நீதிக்கட்சி, ஆங்கில அரசாங்கம் ஆகியோரின் கருத்துகள் குறித்து விவாதிக்கச் செய்யலாம்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.


Tags : Freedom Struggle in Tamil Nadu | History | Social Science தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : Answer in detail Freedom Struggle in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : விரிவாக விடையளிக்கவும். - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்