தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
பாடச்சுருக்கம்
• தமிழ் நாட்டில் தேசியவாதம் வளர்வதற்கு
சென்னைவாசிகள் சங்கம், சென்னை மகாஜன சபை,
தேசியவாதப்
பத்திரிக்கைகள் ஆகியவற்றின் பங்களிப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
• தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்திய தேசிய
இயக்கத்தின் சுதேசி இயக்க கட்டம் பற்றி குறிப்பாக வ.உ.சி. சுப்பிரமணிய சிவா,
சுப்பிரமணிய
பாரதி ஆகியோர் வகித்த பாத்திரம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
• ஒத்துழையாமை இயக்கம்,
காங்கிரசோடு
ஈ.வெ.ரா வின் முரண்பாடுகள், தேசிய அளவில் சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்,
தமிழ்நாட்டில்
சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் ஆகியவை கூர்ந்தாராயப்பட்டுள்ளன.
• சைமன் குழுவின் மீதும்,
வட்டமேஜை
மாநாடுகளின் மீதும் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்ட மறுப்பு இயக்கத்தில்
தமிழ்நாடு பங்கேற்றது ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
• 1935 இந்திய அரசு சட்டத்தின்படி
நடைபெற்ற தேர்தல்களும், சென்னையில் ராஜாஜியின் தலைமையில் முதல்
காங்கிரஸ் அமைச்சரவை உருவாக்கப்பட்டதும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
கலைச்சொற்கள்
மேலாதிக்கம் : hegemony leadership or dominance, especially by one
state or social group over others
விரும்பத்தகாத, வெறுக்கப்படுகிற : obnoxious extremely unpleasant
கருத்து
ஒருமைப்பாடு, முழு இசைவு : consensus a general agreement
பாசாங்கு, போலிமை : hypocrisy insincerity/two-facedness, dishonesty, lip
service
ஆட்சிக்கு
எதிரான : seditious inciting or causing people to rebel against
the authority of a state or monarch
பொது
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி : demonstration a protest meeting or march against something
மறியல் : picket a blockade of a workplace or other venue
புறக்கணி : boycott refuse to cooperate with or participate in
கொடுமைமிக்க, இரக்கமற்ற : brutal savagely violent
நாட்டுப்பற்று : patriotic having devotion to and vigorous support for
one's own country
அடக்குமுறை : repression action of subduing someone or something with
force