அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - ஆண்டிசெப்டிக் (Antiseptic) | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life
ஆண்டிசெப்டிக் (Antiseptic)
தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆண்டிசெப்டிக் என்று அழைக்கப்படுகின்றது. ஆண்டிசெப்டிக், பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது. குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
1. கிருமி நாசினி
குளோரோசைலெனோல் மற்றும்டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்
2. அயோடின் (Tincture)
அயோடின் + 2 to 3% ஆல்ஹ கால் - நீர்கலந்த சோப்பு கரைசல் , ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்
இயற்கை ஆண்டிசெப்டிக்
1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை 4. வெங்காயம், 5. முள்ளங்கி
ஆண்டிசெப்டிக்
1. அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும்.
2. இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.
3. எ.கா. தோல் சளி
கிருமிநாசினிகள்
1. அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல.
2. இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம்.
3. எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்.