அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - எரிதலின் வகைகள் | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life
எரிதலின் வகைகள்:
மூன்று வகை எரிதல் செயல்கள் நடைபெறுகின்றன, அவை,
வேகமாக எரிதல்:
வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாக்குகிறது. எ.கா. எல்.பி.ஜி எரிதல்.
தன்னிச்சையான எரிப்பு:
வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாக்குகிறது. எ.கா. பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல்.
மெதுவாக எரிதல்:
பொருளானது குறைந்த வேகத்தில் எரிதலுக்கு மெதுவாக எரிதல் என்று பெயர். சுவாசித்தல் மெதுவாக எரிதலுக்கு உதாரணமாகும்.
செயல்பாடு : 1
சர்க்கரை + பொட்டாசியம்
பெர்மாங்கனேட் + கிளிசரின்
மேற்கண்ட வேதிப்பொருள்களை சேர்க்கும் போது என்ன நிகழ்கிறது;?
பதில்
1. சர்க்கரை, பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் கிளிசரின் ஆகியவற்றை உணவில் சேர்த்த உடனே பின்வாங்க வேண்டும் ஏனெனில் தீப்பொறி மற்றும் திட பொட்டாசியம் பெர்மாங்கனேட் பாத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
2. பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிளிசரின் உடன் கலக்கும் போது, ஒரு டெராக்ஸ் எதிர்வினை தொடங்குகிறது. இது மெதுவாக வேகமடைய ஆரம்பிக்கும். அனால் அதிக வெப்பத்தை உருவாக்கும்.
ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள் :
❖ எளிதாகக் கிடைக்க வேண்டும்
❖ குறைந்த விலையாக இருத்தல் வேண்டும்
❖ எளிதாக எடுத்து செல்வதாக இருத்தல் வேண்டும்
❖ மிதமான வேகத்தில் எரிதல் இருத்தல் வேண்டும்
❖ அதிகளவு வெப்பாற்றலை வழங்குவதாக இருத்தல் வேண்டும்
❖ விரும்பத்தகாத எந்தவொரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் கூடாது.
❖ சுற்றுசூழலை மாசுபடுத்தாதாக இருத்தல் வேண்டும்
நெருப்பை கட்டுப்படுத்துதல்:
நெருப்பை உற்பத்தி செய்வதற்கு கீழே தேவையான வேதிப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை அகற்றுவதன் மூலம் நெருப்பைக் கட்டுப்படுத்தலாம்.
l. எரிபொருள்
II. காற்று (ஆக்ஸிஜனை வழங்க)
III. வெப்பம் (வெப்பநிலையை உயர்த்த )
IV. எரிதல் வெப்பநிலை