அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து __________
அ) ஸ்ட்ரெப்டோமைசின்
ஆ) குளோரோம்பெனிகால்
இ) பென்சிலின்
ஈ) சல்பாகுனிடின்
விடை : இ) பென்சிலின்
2. ஆஸ்பிரின் ஒரு __________
அ) ஆண்டிபயாடிக்
ஆ) ஆண்டிபைரடிக்
இ) மயக்க மருந்து
ஈ) சைக்கீடெலிக்
விடை : ஆ) ஆண்டிபைரடிக்
3. __________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
அ) அமிலநீக்கி.
ஆ) ஆண்டிபைரடிக்
இ) வலிநிவாரணி
ஈ) ஆண்டிஹிஸ்டமின்
விடை : அ) அமிலநீக்கி
4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் __________ என அழைக்கப்படுகிறது.
அ) கொதிநிலை
ஆ) உருகுநிலை
இ) சிக்கலான வெப்பநிலை
ஈ) எரிவெப்பநிலை
விடை : ஈ) எரிவெப்பநிலை
5. மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது __________
அ) நீலம்
ஆ) மஞ்சள்
இ) கருப்பு
ஈ) உள் பகுதி
விடை : அ) நீலம்
II. வெற்றிடங்களை நிரப்பவும்
1. பென்சிலின் முதன்முதலில் கண்டுபிடித்தவர் __________
விடை: Dr.அலெக்சாண்டர் பிளெமிங்
2. உலக ORS தினம் __________
விடை: 29 ஜூலை
3. எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் __________ உடன் வினைபுரிகிறது.
விடை: ஆக்சிஜன்
4. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை __________
விடை: அதிகம்
5. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை __________ ஆல்கட்டுப்படுத்த முடியாது
விடை: நீர்
III. சரியா அல்லது தவறா? தவறு என்றால் சரியான பதிலைக் கொடுக்கவும்
1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்
விடை : தவறு
சரியான விடை : சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாது
2. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
விடை : தவறு
சரியான விடை : ஆண்டிபைரடிக்குகள் என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
3. அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன
விடை : தவறு
சரியான விடை : அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை
4. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்
விடை : சரி
5. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறது.
விடை : சரி
IV. பொருத்துக.
1. ஆண்டிபைரடிக் – அ. வலியைக் குறைக்கும்
2. வலி நிவாரணி – ஆ. உடல் வெப்பநிலையைக் குறைக்கும்
3. ஆன்டாசிட் – இ. தன்னிச்சையான எரிப்பு
4. பாஸ்பரஸ் – ஈ. சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது
5. கார்பன் டை ஆக்சைடு – உ. அலுமினியம் ஹைட்ரக்சைடு
விடைகள் :
1. ஆண்டிபைரடிக் – ஆ. உடல் வெப்பநிலையைக் குறைக்கும்
2. வலி நிவாரணி – அ. வலியைக் குறைக்கும்
3. ஆன்டாசிட் – உ. அலுமினியம் ஹைட்ரக்சைடு
4. பாஸ்பரஸ் – இ. தன்னிச்சையான எரிப்பு
5. கார்பன் டை ஆக்சைடு – ஈ. சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது
.
V. ஒப்புமை
1. சுடரின் உள்மண்டலம் : __________ சுடரின் வெளிமண்டலம் __________
விடை: குறைந்த வெப்ப பகுதி, வெப்பமான பகுதி
2. டிஞ்சர் : __________ ஹிஸ்டமைன் : __________
விடை: அன்டிசெப்டிக், ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து
VI. ஓரிரு சொற்களில் விடையளி
1. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ்நோய் __________ (மஞ்சள்காய்ச்சல் / டெங்குகாய்ச்சல்)
விடை : மஞ்சள் காய்ச்சல்
2. ORS - ன் விரிவாக்கம் __________
விடை : Oral Re-hydration Solution (வாய்வழி நீரேற்று கரைசல்)
3. கிருமி நாசினியாகவும் ஆண்டிசெப்டிக் ஆகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிடுக?
விடை :ஃபீனால்
4. டெட்டாலின் முக்கிய கூறுகள் யாவை?
விடை : குளோரோசைலினால் மற்றும் ஆல்பா டெர்பீனியால்
5. எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
விடை : கிலோ ஜூல் / கிலோகிராம்
6. எத்தனை வகையான எரிதல் உள்ளது?
மூன்று வகையான எரிதல் உள்ளது
i) வேகமாக எரிதல்
ii) தன்னிச்சையான எரிதல்
iii) மெதுவாக எரிதல்
7. நெருப்பை உற்பத்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகள் யாவை?
நெருப்பை உற்பத்தி செய்ய தேவையானவை
i) எரிபொருள்
ii) காற்று (ஆக்சிஜனை வழங்க
iii) வெப்பம் (வெப்பநிலையை உயர்த்த)
iv) எரிதல் வெப்பநிலை
VII. குறுகிய விடையளி
1. மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?
• குறிப்பிட்ட நோய்க்கான மருந்து எது என்பது நமக்குத் தெரியாது.
• எடுக்க வேண்டிய மருந்தின் அளவு நமக்குத் தெரியாது.
• குறிப்பிட்ட மருந்து நமக்கு தீங்கு விளைவிக்குமா என்பது தெரியாது
• எனவே மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது.
2. கிருமிநாசினிகள் ஆண்டிசெப்டிக்லிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
ஆண்டிசெப்டிக்
1. இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது
(எ.கா) தோல் / சளி
2. அனைத்து ஆன்டிசெப்டிக்களும் கிருமி நாசினிகள் ஆகும். (எ.கா) டெட்டால்
கிருமிநாசினிகள்
1. இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம் (எ.கா) மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்
2. அனைத்து கிருமி நாசினிகளும் ஆன்டிசெப்டிக் அல்ல (எ.கா) ஆல்கஹால்
3. எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.
4. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 180000 kg என அளவிடப்படுகிறது என்றால், கலோரிஃபிக் மதிப்பு என்ன?
கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப்படும் எரிபொருளின் அளவு
= 1,80,000 / 4.5
= 40,000 KJ / Kg
VIII. விரிவாக விடையளி
1. ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?
ஆண்டிபயாடிக்குகள் :
• சில தாவரங்களும், நுண்ணியிரிகளும் மற்ற உயிரினங்களை அழிக்க உதவும் நச்சுதன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அவை ஆன்டிபயாடிக்குக் எனப்படுகின்றன.
(எ.கா) பெனிசிலின், குளோரம்பினிகால், டெட்ராசைக்களின்
வலி நிவாரணிகள் :
• வலி நிவாரணிகள் என்பன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி - குறைக்கும் வேதி பொருளாகும்.
• அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
• மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம் இடங்களில் அதிக மாற்றம் இல்லாத நிலையில் குறிப்பாக இவ்வகை வலி நீக்கிகளே செயல்படுகிறது.
• அவை இருவகைப்படும் :
1) போதைத்தன்மையற்ற வலி நீக்கிகள். (எ.கா) ஆஸ்பிரின்
2) போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள். (எ.கா) கோடீன்
2. மெழுகுவத்தி சுடரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
விடை :
IX. படம் சார்ந்த கேள்வி
1. அருளும், ஆகாஷும் ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பீக்கரில் தண்ணீரை சூடாக்க வேண்டும். அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார். ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
• குறுகிய நேரத்தில் ஆகாஷ் வைத்த நீர் சூடாகும்
• ஏனெனில் வெளிப்புற நீல நிறச்சுடர் அதிக வெப்பமான பகுதி
• எனவே வெளிப்புறச் சுடரில் வைக்கப்பட்ட நீர் குறுகிய நேரத்தில் சூடாகும்.