அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - எரிதல் | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life

   Posted On :  11.05.2022 06:35 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல்

எரிதல்

இரும்பு உருகுதல், நிலக்கரி எரிதல் மற்றும் மெழுகுவத்தியின் சுடர் ஆகியவற்றில் பொதுவானவை எவை என்று சிந்திக்க முடியுமா? இவை அனைத்தும் எரிதல் எனப்படும்.

எரிதல்

இரும்பு உருகுதல், நிலக்கரி எரிதல் மற்றும் மெழுகுவத்தியின் சுடர் ஆகியவற்றில் பொதுவானவை எவை என்று சிந்திக்க முடியுமா? இவை அனைத்தும் எரிதல் எனப்படும். எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும். இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்.

‘எரிதல்’ என்பது எரியும் வேதிவினைதானா? எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினைகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது. ஆக்ஸிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில், பொதுவாகக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

CH4+202 CO2+2H2O + வெப்ப ஆற்றல்

(ஹைட்ரோகார்பன்) (ஆக்ஸிஜன்) (கார்பன் டை ஆக்சைடு) (நீர்)

அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் இது வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.


எரிவெப்பநிலை:

ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல், ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது, எரியாது, வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு எரிவெப்பநிலைகளைக் கொண்டுள்ளன. என்பதை முந்தைய பருவத்தில், இயற்பியல் பாடத்தில் கற்றுக்கொண்டோம்.

மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை. ஆதலால், இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நிகழ்வு

தீப்பிடித்தலின் வேதிவினை 

ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ

எடுத்துக்காட்டாக பெட்ரோல், ஆல்கஹால், எல்.பி.ஜி (திரவ பெட்ரோலிய வாயு), சி.என்.ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு).



Tags : Chemistry in Daily Life | Term 3 Unit 4 | 7th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life : Combustion Chemistry in Daily Life | Term 3 Unit 4 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல் : எரிதல் - அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல்