Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | பாலில்லா இனப்பெருக்கம்

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - பாலில்லா இனப்பெருக்கம் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

பாலில்லா இனப்பெருக்கம்

தாவரங்கள் விதைகளின் மூலம் மட்டுமல்லாமல், பிற வழிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை நாம் முன்னரே பார்த்தோம்.

பாலில்லா இனப்பெருக்கம்

தாவரங்கள் விதைகளின் மூலம் மட்டுமல்லாமல், பிற வழிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை நாம் முன்னரே பார்த்தோம். விதைகள் இல்லாமல், பிற நிகழ்வுகள் மூலம் நடக்கும் இனப்பெருக்கமே பாலில்லா இனப்பெருக்கமாகும். நாம் பாலில்லா இனப்பெருக்க முறைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.


1. உடல் இனப்பெருக்கம்

உருளைக்கிழங்கின் கணு மற்றும் அதன் மொட்டிலிருந்து புதிய தாவரங்கள் உருவாகின்றன. கரும்பும், சேனைக்கிழங்கும் இவ்வாறு தண்டிலிருந்தே வளர்கின்றன. தாவரத்தின் உடல் உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலைகள் தாவரத்தின் இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன.



2. மொட்டு விடுதல்

நாம் அடுமனைக்குச் (Bakery) சென்றால் அங்கே பல்வேறு கேக் வகைகளைக் காணலாம். இவை மிகவும் மென்மையானவை. இதற்குக் காரணம் ஈஸ்ட் என்ற ஒரு செல் உயிரியே. ஒரு தனித்த ஈஸ்ட் சமமற்ற பகுப்படைந்து ஒரு சிறிய மொட்டினைத் தோற்றுவிக்கின்றது. இது படிப்படியாக வளர்ந்து தாய் செல்லிலிருந்து விடுபட்டு புதிய ஈஸ்ட் செல்லாக மாறுகிறது. இதற்கு மொட்டு விடுதல் என்று பெயர்.



3. துண்டாதல்

ஒரு குளத்தில் அதிகளவு பாசிகளை நாம் பார்க்கின்றோம். இதில் உள்ள ஸ்பைரோகைரா என்ற பாசி இழை வடிவம் உடையது. இது முதிர்ச்சியடையும் போது பல துண்டுகளாக உடைகின்றது. பிறகு ஒவ்வொரு துண்டும் வளர்ச்சியடைந்து புதிய இழையை உருவாக்குகின்றது. இவ்வாறு, ஸ்பைரோகைரா எண்ணற்ற பல இளம் பாசிகளை உருவாக்குகின்றது. இதற்கு துண்டாதல் என்று பெயர்.



4. ஸ்போர் உருவாதல்

தண்ணீர் பற்றாக்குறை, உயர் வெப்பநிலை, மண்ணில் ஊட்டச்சத்துக் குறைபாடு இவையாவுமே சாதகமற்ற சூழ்நிலைகள் எனப்படுகின்றன. இச்சூழ்நிலையின் போது, பூவாத் தாவரங்களான பாசிகள், பிரையோஃபைட் மற்றும் டெரிடோஃபைட் (பேரணிகள்) தாவரங்கள் போன்றவை ஸ்போர்களை உருவாக்குகின்றன. சாதகமான சூழ்நிலையில் இவை முளைத்து புதிய தாவரத்தை உருவாக்குகின்றன.



Tags : Reproduction and Modification in Plants | Term 1 Unit 5 | 7th Science தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants : Asexual reproduction Reproduction and Modification in Plants | Term 1 Unit 5 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் : பாலில்லா இனப்பெருக்கம் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 5 : தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்