நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பாக்டீரியா | 8th Science : Chapter 16 : Microorganisms

   Posted On :  30.07.2023 12:30 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்

பாக்டீரியா

பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும். இவை பூமியின்மீது முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன.

பாக்டீரியா

பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும். இவை பூமியின்மீது முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. வகைப் பாட்டியலில் மொனிரா என்னும் உலகத்தின் கீழ் இவை இடம் பெற்றுள்ளன. பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு 'பாக்டீரியாலஜி' எனப்படுகிறது.

பாக்டீரியாக்கள் 1um முதல் 5um (மைக்ரோமீட்டர்) அளவுடையவை. சுவாசத்தின் அடிப்படையில் இவை இரண்டு வகைப்படும். அவை:

• காற்று சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது)

• காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)

 

1. செல்லின் அமைப்பு

பாக்டீரியா, செல்சுவர் எனப்படும் வெளி அடுக்கினைக் கொண்டுள்ளது. உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை. சைட்டோபிளாசத்தில் பிளாஸ்மிட் என அழைக்கப்படும் கூடுதல் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் காணப்படுகின்றன. இதில் புரதச் சேர்க்கையானது 70 S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது. பிற செல் கேப்சிட் புரதம் புகையிலை மொசைக் வைரஸ் (உருளை வடிவம்) நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம் எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவை) காணப்படுவதில்லை. இதில் கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.


செல் வடிவத்தைப் பொருத்து பாக்டீரியாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன:

• பேசில்லை: கோல் வடிவ பாக்டீரியா எ.கா. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

• ஸ்பைரில்லா சுருள் வடிவ பாக்டீரியா எ.கா. ஹெலிகோபாக்டர் பைலோரி

• காக்கை : கோள அல்லது பந்து வடிவ பாக்டீரியா. அவை ஒட்டிக் கொண்டு இணைகளாகவோ (டிப்ளோகாக்கஸ்), சங்கிலி வடிவிலோ (ஸ்ட்ரெப்டோகாக்கஸ்) அல்லது கொத்தாகவோ (ஸ்டைபைலோகாக்கஸ்) காணப்படும்.

• விப்ரியோ : கமா வடிவ பாக்டீரியா எ.கா. விப்ரியோ காலரா.


மேலும், கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

• ஒற்றைக் கசையிழை: ஒரு முனையில் ஒரு கசையிழை மட்டும் காணப்படும்.

எ.கா. விப்ரியோ காலரா,

• ஒருமுனை கற்றைக் கசையிழை: கசையிழை ஒரு முனையில் கற்றையாகக் காணப்படும். எ.கா.சூடோமோனாஸ்.

• இருமுனை கற்றைக் கசையிழை: கசையிழை இருமுனைகளிலும் கற்றையாகக் காணப்படும். எ.கா.ரோடோஸ்பைரில்லம் ரூபரம்.

• சுற்றுக் கசையிழை: பாக்டீரியாவின் செல் சுவரைச் சுற்றி கசையிழை காணப்படும். எ.கா. எ.கோலை. கசையிழையற்றவை: இவற்றில் கசையிழை காணப்படுவதில்லை.

எ.கா. கோரினிபாக்டீரியம் டிப்தீரியா


பாக்டீரியாக்கள் பல வழிகளில் தமது உணவைப் பெறுகின்றன. ஒளிச்சேர்க்கை பாக்டீரியங்கள் தங்களது உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன (எ.கா. சயனோபாக்டீரியா). அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலுக்குப் பதிலாக வேதிப் பொருள்களைப் (அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு )பயன்படுத்தி உணவைத் தயாரிக்கின்றன. இச்செயல்முறை வேதித் தற்சார்பு உணவூட்டம் எனப்படுகிறது. சில வகையான பாக்டீரியங்கள் கூட்டுயிர் வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றன (எ.கா. மனிதனின் சிறுகுடலில் வாழும் எ.கோலை) பாக்டீரியாக்கள் பிளத்தல் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன (இரண்டாகப் பிளத்தல், பலவாகப் பிளத்தல்).

செயல்பாடு 1

ஒரு கண்ணாடி நழுவத்தில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் தயிரை எடுத்துக் கொண்டு, அதனைப் பரவச் செய்யவும். அந்த நழுவத்தினை இலேசாக சூடுபடுத்தவும் (3-4 நொடிகள்] அதன் மீது சில துளிகள் படிக வடிவிலான நீலச்சாயத்தினைச் சேர்த்து, 30 அல்லது 60 நொடிகள் கழித்து நீரால் கழுவாயும். கூட்டு நுண்ணோக்கியினால் அந்நழுவத்தினை உற்று நோக்கவும்.


Tags : Microorganisms | Chapter 16 | 8th Science நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 16 : Microorganisms : Bacteria Microorganisms | Chapter 16 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் : பாக்டீரியா - நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்