நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - புரோட்டோசோவா | 8th Science : Chapter 16 : Microorganisms

   Posted On :  30.07.2023 12:39 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்

புரோட்டோசோவா

புரோட்டோசோவாக்கள் (கிரேக்க மொழியில் புரோட்டோஸ் – முதல், சோவன் - விலங்கு) ஒரு செல் யூகேரியோட்டுகளாகும். இவை வகைப்பாட்டில் புரோட்டிஸ்டா எனும் உலகில் இடம்பெற்றுள்ளன.

புரோட்டோசோவா

புரோட்டோசோவாக்கள் (கிரேக்க மொழியில் புரோட்டோஸ் – முதல், சோவன் - விலங்கு) ஒரு செல் யூகேரியோட்டுகளாகும். இவை வகைப்பாட்டில் புரோட்டிஸ்டா எனும் உலகில் இடம்பெற்றுள்ளன. புரோட்டோசோவாவைப் பற்றிப் படிக்கும் பாடப்பிரிவு புரோட்டோவிலங்கியல் எனப்படுகிறது. இவை குளங்கள், பெருங்கடல்கள், ஈரப்பதமான மண் ஆகியவற்றிலும், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் செல் மற்றும் திசுக்களிலும் காணப்படும். இவை நோயை உண்டுபண்ணுகின்றன. இவை 2-200 மைக்ரான் அளவுடையவை. புரோட்டோசோவாக்கள் சிறப்பான நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. இந்நுண்ணுறுப்புகள் இயக்கம், உணவூட்டம் மற்றும் இதர பணிகளைச் செய்வதற்காகப் பயன்படுகின்றன. புரோட்டோசோவாக்களின் வகைகள் பின்வருமாறு,


சிலியேட்டா: சிலியாக்களால் இடம்பெயர்கின்றன. எ.கா. பாரமீசியம்

பிளாஜெல்லேட்டா! கசையிழைகளால் இடம் பெயர்கின்றன. எ.கா. யூக்ளினா

சூடோபோடியா: போலிக் கால்களால் இடம்பெயர்கின்றன. எ.கா. அமீபா

ஸ்போரோசோவா: ஒட்டுண்ணிகள். எ.கா. பிளாஸ்மோடியம்

செயல்பாடு 2

வைக்கோலை ஊற வைத்த நீரினை ஒன்று அல்லது இரண்டு துளிகள் நழுவத்தில் எடுத்துக் கொண்டு நுண்ணோக்கியின் வழியாக உற்று நோக்கவும்.

 

1. புரோட்டோசோவா செல்லின் அமைப்பு

அமீபா நுண்ணிய ஒரு செல்லாலான உயிரினமாகும். இவை குளத்து நீரில் காணப்படுகின்றன. இவை ஒழுங்கற்ற வடிவமுடையவை.  செல் சவ்வு, சைட்டோபிளாசம் மற்றும் உட்கருவைக் கொண்டுள்ளன. அமீபா என்பது, போலிக் கால்கள் (இலத்தீனில் பொய்க் கால்கள்) மூலம் இடம் பெயரும் ஒரு புரோட்டோசோவா ஆகும். போலிக் கால்கள் செல் சவ்வின் நீட்சியடைந்த பகுதிகளாகும். இரையைப் (ஆல்கா) பிடிக்க இவை உதவுகின்றன. அமீபாவின் உடலானது உணவுத் துகள்களைச் சூழ்ந்து ஒரு குமிழை உருவாக்குவதன் மூலம் அவற்றை விழுங்குகின்றன. சைட்டோபிளாசத்தில் உள்ள சுருங்கும் நுண் குமிழ்கள் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன. இணைவு மற்றும் ஸ்போர் உருவாதல் முறையில் அமீபாவில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.


Tags : Microorganisms | Chapter 16 | 8th Science நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 16 : Microorganisms : Protozoa Microorganisms | Chapter 16 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் : புரோட்டோசோவா - நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்