Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 16 : Microorganisms

   Posted On :  10.09.2023 02:09 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

நுண்ணோக்கியின் உதவியினால் மட்டுமே காணப்படக்கூடிய உயிரினங்கள் நுண்ணுயிரிகள் எனப்படும்.

வைரஸ்கள் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை.

பாக்டீரியா என்பது ஒரு செல்லாலான புரோகேரியோட்டிக் உயிரினமாகும்.

பூஞ்சையானது ஒளிச்சேர்க்கை செய்ய இயலாத, ஸ்போரை உருவாக்கும் யூகேரியோட்டிக் உயிரினமாகும். இவை ஒரு செல் முதல் பல செல்களாலான வேறுபட்ட அமைப்பை உடைய உயிரினங்களாகும்

ஆல்கா என்பது ஒரு செல் அல்லது பல செல்களாலான, ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய யூகேரியோட்டிக் உயிரினமாகும்.

புரோட்டோசோவா பொதுவாக ஒரு செல்லாலான, பச்சையம் அற்ற யூகேரியோட்டிக் உயிரினமாகும்.

.

சொல்லடைவு

எதிர்உயிர்க்கொல்லி  பாக்டீரியங்களை அழிக்கும் அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் வேதிப் பொருள்கள். இவை பாக்டீரியாவால் தோன்றும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.

பாக்டீரியா ஒரு செல்லாலான, புரோகேரியோட்டிக் உயிரினம்.

கேப்சிட் வைரஸைச் சூழ்ந்துள்ள புரத உறை

நொதித்தல் கரிமப் பொருள்களான கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை நுண்ணுயிரிகளால் காற்றில்லா சூழலில் (ஆக்சிஜனின்றி) எளிய பொருள்களாக மாற்றமடைவது.

ஹைபா பூஞ்சைகளின் அடிப்படை அமைப்பாக அமைந்த மெல்லிய நூலிழைகள்.

நுண்ணுயிரிகள் பாக்டீரியா, புரோட்டோசோவா, ஆல்கா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற மிக நுண்ணிய உயிரினங்கள்

நோய்க்கிருமி நோயுண்டாக்கும் உயிரினம்.

தடுப்பூசி குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக செயற்கையான முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கப்படும் சிறப்பு வகையான மருந்துகள். இவை நோய்த் தொற்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன

.


பிற நூல்கள்

1. Ananthnarayan and Panicker's Textbook of Medical Microbiology Edited by C.K.J.Panicker.

2. Essential Microbiology by Stuart Hogg.

3. Textbook of Microbiology by Surinder Kumar.

 

இணையதள வளங்கள்

1. https://en.wikipedia.org/wiki/Microorganism

2. https://www.sciencedirect.com/topics/ agricultural-and-biological-sciences/ microorganisms


இணையச் செயல்பாடு


நுண்ணுயிரிகள்

இந்த செயல்பாட்டின் மூலம் நுண்ணுயிரிகளை வகைப்படுத்துதல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்வார்கள்.

படிநிலைகள்

படி 1: கொடுக்கப்பட்ட ருசுடு ஐ தட்டச்சு செய்வதன் மூலம் அல்லது குசு ஊழனந ஐ ளஉயா செய்வதன் மூலம் உலவியைத் (Browser) திறக்கலாம்.

படி 2: பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றுள் "நுண்ணுயிரிகளை வகைப்படுத்துதல்"; என்பதைத் தேர்வு செய்யவும்.

படி 3: ஒவ்வொரு சில்லாக (எடனை நள) கிளிக் செய்து பொத்தானை அழுத்தவும்.

படி 4: "நுண்ணுயிரிகளை வகைப்படுத்துதல்"; குறித்து அறிந்துகொள்ளலாம்.


உரலி: https://www.slideshare.net/mgcnkedahsc/11-classsification-of- microorganisms

Tags : Microorganisms | Chapter 16 | 8th Science நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 16 : Microorganisms : Points to Remember, Glossary, Concept Map Microorganisms | Chapter 16 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்