தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development
11 வது தாவரவியல் : அலகு 15
தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்
6. தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
i) நீளவாக்கில் (அ) குறுக்களவில் அதிகரித்தல் (வேர், தண்டு)
ii) உலர் எடை (அ) ஈர எடை அதிகரித்தல்
iii) அளவு மற்றும் பருமன் அதிகரித்தல் (கனிகள் மற்றும் இலைகள்)
iv) செல்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
7. உருமாறும் தன்மை என்றால் என்ன?
* சூழ்நிலை (அ) வளர்ச்சி நிலைகளுக்கு
தகுந்தவாறு பல்வேறு உருவ அமைப்புகள் தோன்றுகின்றன.
இதற்கு
உருமாறும் தன்மை என்று பெயர்.
எ.கா -
ஹெட்டிரோஃபில்லி - இது இரு வகைப்படும்.
ஈருவ ஹெட்டிரோஃபில்லி
* பருத்தி கொத்துமல்லி இத்தகைய தாவரங்களில்
இளந்தாவர இலையின் உருவ அமைப்பும், முதிர்ந்த இலையின் உருவ
அமைப்பும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
சூழ்நிலை ஹெட்ரோஃபில்லி
* ரணன்குலஸ் (Butter Cup) எனும் தாவரத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய
இலைகள் உருவாகிறது.
நீரில்
உள்ள இலைகளின் உருவ அமைப்பும், நீர் பரப்புக்கு மேல் உள்ள
இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது.
8. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை?
செல்பகுப்பு - ஆக்ஸின் (IAA) இருக்கும் போது செல்பகுப்பை தூண்டுகிறது.
விதை உறக்கம் நீக்குதல் - ஒளி
உணரும் தன்மை பெற்ற தாவரங்களில் நிகழ்கிறது. பக்க
மொட்டுக்களின் வளர்ச்சி - ஆக்ஸின் இருக்கும் போது பட்டாணி தாவரத்தில்
பக்க மொட்டுக்களின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
ரிச்மாண்ட் லாங்க் விளைவு - கனிம
ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதைத் தாமதப்படுகிறது.
பிறபணிகள்
* புரதச் சேர்க்கை வீதத்தை
அதிகப்படுத்துகிறது.
* கற்றை இடைக் கேம்பிய உருவாக்கத்தைத்
தூண்டுகிறது.
* புதிய இலைகள், பசுங்கணிகம்,
பக்கக்கிளைகள் உருவாவதைத் தூண்டுகிறது.
* தாவரங்கள் மிகத் துரிதமாக்கி கரைபொருட்களைச்
சேகரமடையச் செய்ய உதவுகிறது.
9. மலர்கள் தோற்றுவித்தல் ஒளிக்காலத்துவத்தின்
செயல்பாடுகள் பற்றி விவரி.
* ஒளி மற்றும் இருள் கால (ஒளி கால) அளவிற்கு
ஏற்ப மலர்தலுக்கான செயலியல் மாறுபாடு ஒளிக்காலத்துவம்
எனப்படும். மலர்தலை தூண்டும் ஒளிக் காலம் அவசிய
பகல் நீளம் (Critical day length) எனப்படுகிறது.
(எ.கா)
மேரிலாண்ட் மாமூத் புகையிலை ரகம் - அவசிய பகல் நீளம் - 12 மணி நேரம் சாந்தியம் பென்சில் வேனிகம் - அவசிய பகல் நீளம் - 15.05 மணி நேரம்
ஒளிக்காலத்துவ தூண்டல்
* 24 மணி நேரத்தில் போதுமான அளவு
ஒளிக்கால அளவு ஒரு தூண்டல் சுழற்சி எனக் கருதப்படுகிறது. தழைமொட்டு மலர் மொட்டாக
மாற்றப்பட தேவைப்படும் தூண்டல் சுழற்சியே ஒளிக்காலத்துவ தூண்டல் எனப்படும். (எ.கா)
சாந்தியம் (SDP) - ஒரு தூண்டல் சுழற்சி (SDP - குறும் பகல் தாவரம்). பிளான்டோகோ (LDP) - 25 தூண்டல்
சுழற்சிகள் தேவைப்படுகிறது (LDP - குறும் பகல் தாவரம்).
ஒளித்தூண்டல் உணரப்படும் இடம்
* இலைகள் - ஆம் இலைகளில் மலர்தலுக்கான
ஹார்மோன்கள் உருவாக்கப்பட்டு, மலர்தல் நிகழ்வதற்காக
நுனிப் பகுதிக்குக் கடத்தப்படுகிறது.
(எ.கா)
சாந்தியம் (SDP) - இது குறும் பகல் சூழலில் மட்டும்
மலரும்.
சாந்தியம்
பென்சில் வேனிகம் தாவரம் (குறும் பகல் தாவரம்)
10. திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறுகுறிப்பு தருக.
முழுத்
தாவரமோ (அ) அதன் பகுதிகளோ தொடர்ச்சியாக மூப்படைதலின் மூலம் இறப்பதை திட்டமிட்ட
செல் இறப்பு (அ) தனி செல் இறப்பு எனப்படுகிறது.
தாவரங்களில்
மூப்பை ஏற்படுத்தும் நொதி – ஃபைட்டாப்சேஸ்கள்
விலங்கினங்களில்
மூப்பை ஏற்படுத்தும் நொதி - காஸ்பேஸ்கள்
முக்கியத்துவம்
1. மூப்படையும் செல்களிலிருந்து தாவரத்தின் உயிருள்ள பிற பகுதிகளுக்கு மறு
இடப் பெயர்தல் (அ) மறு ஒதுக்கீடு மூலம் சத்துக்கள், பிற தளப்
பொருட்கள் நிலைநிறுத்தப்படுகின்றன.
2. தாவரங்களின் நீர் கடத்துதல் நடைபெற, சைலக்குழாய்கள்
மற்றும் டிரக்கீடுகளின் புரோட்டோ பிளாச சிதைவே நீர் கடத்துதலை எளிதாக்குகிறது.
3. ஏரன்கைமா செல்களிடையே காற்றிடைவெளிகள் உருவாக PCD நிகழ்வே
காரணம்
4. இரு பால் மலர்களிலிருந்து PCD வழியாக இரண்டில் ஒன்று
சிதைவடைவதாகவே ஒரு பால் மலர்கள் உருவாகிறது.