Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சரியான விடையைத் தெரிவு செய்க

கேள்விகளுக்கான பதில்கள் - சரியான விடையைத் தெரிவு செய்க | 11th Chemistry : UNIT 7 : Thermodynamics

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்

சரியான விடையைத் தெரிவு செய்க

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : சரியான விடையைத் தெரிவு செய்க

மதிப்பீடு


I சரியான விடையைத் தெரிவு செய்க.


1. மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாறிக் கொள்ளப்படும் வெப்பத்தின் அளவு

அ) ΔE

ஆ) ΔH

இ) ΔS

ஈ) ΔG

[விடை: ஆ) ∆H]


2. இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளும் __________ திசையில் நடக்கின்றன.

அ. என்ட்ரோபி குறையும்

ஆ. என்தால்பி அதிகரிக்கும்

இ) கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்

ஈ) கட்டிலா ஆற்றல் குறையும்

[விடை: ஈ) கட்டிலா ஆற்றல் குறையும்.]


3. வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?

அ) q = w

ஆ) q = 0

இ) ΔE = q

ஈ) PΔV = 0

[விடை: ஆ) q = 0]


4. ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம்

அ) > 0

ஆ) ≥ 0

இ) < 0

ஈ) = 0

[விடை: ஈ) = 0]


5. ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்

அ) w = - Δu

ஆ) w = Δu + ΔH 

இ) Δu = 0

ஈ) w = 0

[விடை: அ) w = −∆u]


6. பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு

அ) நிறை

ஆ) கனஅளவு

இ) என்தால்பி

ஈ) நிறை / கனஅளவு

[விடை: ஈ) நிறை /கனஅளவு]


7. 300 K வெப்பநிலையில் 1 × 10-3 m3 கன அளவிலிருந்து 1 × 10-2 m3 கனஅளவிற்கு 1 × 105 Nm2 அளவுள்ள மாறா அழுத்தத்தில் ஒரு நல்லியல்பு வாயு விரிவடையும் போது செய்யப்பட்ட வேலையின் அளவு

அ) -900 J

ஆ) 900 kJ

இ) 270 kJ

ஈ) - 900 kJ

[விடை: அ) − 900J ]

தீர்வு:

w = − P∆V

w = − (1 × 105 Nm−2) (1 × 10−2m3 −1 × 10−3m3)

w = −105 (10−2 − 10−3) Nm 

w = −105 (10 − 1) 10−3) J

w = − 105 (9 × 10−3) J

w = − 9 × 10 2 J

w = − 900 J


8. எரிதல் வெப்பம் எப்பொழுதும்

அ) நேர்குறி மதிப்பு உடையது 

ஆ) எதிர்குறி மதிப்பு உடையது

இ) பூஜ்ஜியம்

ஈ) நேர்குறி அல்லது எதிர்குறி மதிப்பு உடையது

[விடை: ஆ) எதிர்குறி மதிப்பு உடையது] 


9. CO மற்றும் CO2 ஆகியவற்றின் உருவாதல் வெப்ப மதிப்புகள் முறையே -26.4 kCal மற்றும் -94 kCal, கார்பன் மோனாக்ஸைடின் எரிதல் வெப்ப மதிப்பு

அ) + 26.4 kcal

ஆ) - 67.6 kcal

இ) - 120.6 kcal

ஈ) + 52.8 kcal

[விடை: ஆ) −67.6 kcal]

தீர்வு:

CO(g) + ½  O2(g) → CO2(g)

∆HC0 (CO) = ∆Hf(CO2) – ∆Hf(CO) + ∆Hf (O2)

∆HC0 (CO) = −94KCal − [− 26.4KCal + 0] 

∆HC0 (CO) = −94KCal + 26.4KCal

∆HC0 (CO) = −67.4KCal


10. C (வைரம்) → C (கிராஃபைட்), ΔH எதிர் குறியுடையது இது குறிப்பிடுவது

அ) வைரத்தை விட கிராஃபைட் அதிக நிலைப்புதன்மை கொண்டது.

ஆ) வைரத்தைவிட கிராஃபைட் அதிக ஆற்றலை கொண்டுள்ளது.

இ) இரண்டும் சமநிலைப்புத் தன்மை கொண்டவை.

ஈ) நிலைப்புத் தன்மையை நிர்ணயிக்க இயலாது.

[விடை: அ) வைரத்தை விட கிராஃபைட் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது]


11. Al2O3 மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே -1596 kJ மற்றும் –1134 kJ, எனில் 2Al + Cr2O3 → 2Cr + Al2O3 என்ற வினைக்கு ΔH மதிப்பு

அ) -1365 kJ

ஆ) 2730 kJ

இ) -2730 kJ

ஈ) - 462 kJ

[விடை: ஈ) −462kJ]

தீர்வு:

2Al + Cr2O3 → 2Cr + Al2O3 

∆Hr0 = [2 ∆Hf(Cr) + ∆Hf (Al2O3)] − [2∆Hf (Al) + ∆Hf (Cr2O3)]

∆Hr0 = [0 + (−1596KJ)] − [0 + (−1134)]

∆Hr0 = −1596KJ + 1134 KJ

∆Hr0 = −462KJ


12. பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?

அ) அகஆற்றல்

ஆ) என்தால்பி

இ) என்ட்ரோபி

ஈ) உராய்வு ஆற்றல்

[விடை: ஈ) உராய்வு ஆற்றல்]


13. ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில்

அ) ΔH > ΔU

ஆ) ΔH - ΔU = 0

இ) ΔH + ΔU = 0

ஈ) ΔH < ΔU

[விடை: ஈ) ∆H < ∆U]


14. ஒரு அமைப்பின் மீது 4kJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1 kJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்

அ) + 1 kJ

ஆ) - 5 kJ

இ) + 3 kJ

ஈ) - 3 kJ

[விடை: இ) +3kJ]

தீர்வு:

∆U = q + w

∆U = − 1kJ + 4kJ

∆U = +3kJ


15. 25°C வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன், 55.85 கிராம் இரும்பு (மோலார் நிறை 55.85 கிராம் மோல்-1) வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை

அ) - 2.48 kJ

ஆ) - 2.22 kJ

இ) + 2.22 kJ

ஈ) + 2.48 kJ

[விடை: அ) − 2.48kJ]

தீர்வு:

Fe + 2HCl → FeCl2 + H2

ஒரு மோல் இரும்பு 1 மோல் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.

55.85 கி இரும்பு = 1மோல் இரும்பு

∴ n = 1

T = 25°C = 298K

w = −P∆V

w = −P [nRT/P]

w = −nRT

w = −1 × 8.314 × 298J

w = −2477.57J

w = −2.48kJ


16. 2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125° C லிருந்து 25° C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு [ கொடுக்கப்பட்டது CP = (5 / 2) R ]

அ) - 250 R

ஆ) - 500 R

இ) 500 R

ஈ) +250 R

[விடை: ஆ) −500 R ]

தீர்வு:

Ti = 125 °C = 398K

Tf = 25°C = 298K

∆H = nCp(Tf  − Ti)

∆H = 2 × 5/2  R(298 − 398)  

∆H = −500R


17. C (g) + O2 (g) → CO2 (g) ΔH° = - a kJ; 2CO (g) + O2 (g) → 2CO2 (g) ΔH° = - b kJ; எனில் C(g) + 1/2 O2 (g) → CO (g) என்ற வினைக்கு ΔH0 மதிப்பு

அ) (b + 2a) / 2

ஆ) 2a-b

இ) (2a – b) / 2

ஈ) (b - 2a) / 2

[விடை: ஈ) (b − 2a)/2]

தீர்வு:

C + O2 → CO2  ∆H0 = − a kJ    …........(i)

2CO + O2 → 2CO2 ∆H0 = −b kJ......(ii))

C + ½ O2 → CO ∆H0 = ?

(i) × 2

2C + 2O2 → 2CO2 ∆H0 = −2a kJ....(iii) 

சமன்பாடு (ii) ஐ திருப்பி எழுதுக

2CO2 → 2CO + O2 ∆H0 = + b kJ.....(iv) 

(iii) + (iv),

2C + O2 → 2CO ∆H0 = b − 2a kJ.....(v)

(v) + 2

C + O2 → CO ∆H0 = (b − 2a)/2 kJ


18. 0°C வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 15.68 L மீத்தேன் மற்றும் புரப்பேன் கலந்த வாயுக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதே வெப்ப அழுத்தநிலையில் 32 L ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்.

அ) - 889 kJ

ஆ) – 1390 kJ

இ) -3180 kJ

ஈ) - 632.68 kJ

[விடை: ஈ) - 632.68 kJ]

தீர்வு:

கொடுக்கப்பட்டவை 

AHC(CH4)  = -890 kJ mol−1

∆HC(C3H8) = -2220 kJ mol−1

கலவையானது x லிட்டர் மீத்தேனையும் (15.68 − x) லிட்டர் புரப்பேனையும் கொண்டு இருப்பதாகக் கருதுக.


வினைப்பட்ட ஆக்சிஜனின் கனஅளவு = 2x + 78.4 – 5x = 32 லிட்டர்

78.4 – 3x = 32

3x = 46.4 லிட்டர்

x = 15.47 லிட்டர்

கொடுக்கப்பட்டுள்ள கலவையானது 15.47 லிட்டர் மீத்தேனையும் 0.213 லிட்டர் புரப்பேனையும் கொண்டுள்ளது, எனவே


∆HC = −635.47 kJmol−1


19. மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே, 360 kJ mol-1 மற்றும் 620 kJ mol-1 எனில் C-C ஒற்றை பிணைப்பின் பிளத்தல் ஆற்றல்.

அ) 170 kJ mol-1

ஆ) 50 kJ mol-1

இ) 80 kJ mol-1

ஈ) 220 kJ mol-1

[விடை: இ) 80kJ mol−1]

தீர்வு:

4EC−H = 360 kJ mol−1

EC−H = 90 kJ mol−1

EC−C + 6 EC−H  = 620 kJ mol−1

EC−C + 6 × 90 = 620 kJ mol−1

EC−C + 540 = 620 kJ mol−1

EC−C = 80 kJ mol−1


20. அனைத்து வெப்பநிலைகளிலும், ஒரு தன்னிச்சையான வினைக்கு சரியான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகள்

அ) ΔH < 0 மற்றும் ΔS > 0

ஆ) ΔH < 0 மற்றும் ΔS < 0

இ) ΔH > 0 மற்றும் ΔS = 0

ஈ) ΔH > 0 மற்றும் ΔS > 0

[விடை: அ) ∆H < O மற்றும் ∆S > 0 ]


21. ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் __________ ல் குறைகிறது.

அ) வெப்பநிலை மாறா விரிவடைதல்

ஆ) வெப்பநிலை மாறா சுருங்குதல்

இ) வெப்பம் மாறா விரிவடைதல்

ஈ) வெப்பம் மாறா சுருங்குதல்

[விடை: இ) வெப்பம் மாறா விரிவடைதல்] 


22. ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மாறா மீள்சுருங்குதல் செயல்முறையில், q, ΔS மற்றும் w ஆகியவற்றின் குறிகள் முறையே

அ) +, -, -

ஆ) -, +, -

இ) +, -, +

ஈ) -, -, +

[விடை: ஈ) −, −, +]


23. ஒரு திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பம் 4.8 kJ mol-1, அதன் என்ட்ரோபி மாற்ற மதிப்பு 16 J K-1 mol-1 எனில் அந்த திரவத்தின் கொதிநிலை

அ) 323 K

ஆ) 27° C

இ) 164 K

ஈ) 0.3 K

[விடை: ஆ) 27°C]

தீர்வு:

ΔSV = ΔΗV/Тb 

Тb = ΔΗV / ΔSV  = 4800Jmol−1 /16Jmol−1K−1 = 300K = 27° C

 


24. பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்?

அ) Ca (S) + 1/2 O2 (g) → CaO (S)

ஆ) C (S) + O2 (g) → CO2 (g)

இ) N2 (g) + O2 (g) → 2NO (g)

ஈ) CaCO3 (S) → CaO (S) + CO2 (g)

[விடை: ஈ) CaCO3(S) → CaO(S) + CO2(g)]

தீர்வு:

CaCO3(s) → CaO(s) + CO2(g) மட்டும் ∆S நேர்குறி (அ) மற்றும் (ஆ) ∆S எதிர்குறி (இ) ∆S = 0


25. ஒரு குறிப்பிட்ட வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே 30 kJ mol-1 மற்றும் 100 JK-1 mol-1 எனில், எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்.

அ) 300 K

ஆ) 30 K

இ) 100 K

ஈ) 20° C

[விடை: அ) 300 K ]

தீர்வு:

∆G = ∆H − T∆S

At 300K

∆G = 30000Jmol−1 − (300K × 100JK−1 mol−1)

∆G = 0

300 K மேல் ∆G ஆனது எதிர்குறி மதிப்பினைப் பெறுகிறது. மேலும் வினை தன்னிச்சையானது.


Tags : with Answers and Solution கேள்விகளுக்கான பதில்கள்.
11th Chemistry : UNIT 7 : Thermodynamics : Choose the best answer: Thermodynamics with Answers and Solution in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : சரியான விடையைத் தெரிவு செய்க - கேள்விகளுக்கான பதில்கள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்