மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - இரத்த ஓட்ட மண்டலம் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
இரத்த ஓட்ட மண்டலம்
நமது இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தக்குழாய்கள் இரத்தம் ஆகியவற்றை
உள்ளடக்கியது. இது நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவுச்சத்துப் பொருள்கள், ஹார்மோன்கள்,
கழிவுப்பொருள்கள் போன்றவற்றைக் கடத்துகிறது. இது தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்க் கிருமிகளிடம்
இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. மேலும் உடல் வெப்ப நிலையை ஒரே சீராக வைக்கவும் உதவி
செய்கின்றது.
இதயம்
இதயம் மார்பறையில், இரண்டு நுரையீரல்களுக்கும் இடையே அமைந்துள்ளது.
நமது இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. இதயம் இரு சுவர்களைக் கொண்ட பெரிகார்டியம் உறையினால்
சூழப்பட்டுள்ளது. நமது இதயம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி
அனுப்புகிறது.
இரத்தக் குழாய்கள்
நமது உடலில் இடது ஆரிக்கிள் (கர் இடது ஏட்ரியம் இடது கெண்ட்ரிகள்
மூன்றுவகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. அவை தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும்.
இவைகள் மூடிய வலைப்பின்னல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் வழியாக இரத்தத்தினை எடுத்துச்
செல்கின்றன.
இரத்தம்
இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசுவாகும். இரத்தம் பிளாஸ்மா மற்றும்
இரத்த அணுக்களைக் கொண்டுள்ளது. இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும் அவை, இரத்த சிவப்பணுக்கள்
(RBCs), இரத்த வெள்ளை அணுக்கள் (WBCs), இரத்தத் தட்டுகள் (platelets). இரத்த சிவப்பணுக்கள்
எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன.
செயல்பாடு 6:
உங்கள் வலது கையில் உள்ள ஆள்காட்டி மற்றும் நடு விரலையும் உங்கள் இடது கை மணிக் கட்டின் உள்பக்கம் வைத்துக் கொள்ளவும். உங்களால் துடிப்பின் அசைவை உணர முடிகிறதா? ஏன் அவ்வாறு துடிக்கிறது? இந்தத் துடிப்பு நாடித் துடிப்பு எனப்படும். அது தமனியில் செல்லும் இரத்த ஓட்டத்தினால் ஏற்படுகிறது.
ஒரு
நிமிடத்தில் எத்தனை நாடித்துடிப்புகள் ஏற்படுகிறது என்று எண்ணமுடிகிறதா? அதன் எண்ணிக்கையே
நாடித் துடிப்பு விகிதம் எனப்படும். சாதாரணமாக ஓய்வு நிலையில் உள்ள ஒரு மனிதனின் சராசரி
நாடித்துடிப்பு ஒரு நிமிடத்தில் 72 இல் இருந்து 80 வரை இருக்கும். உங்கள் உடலில் எங்கு
நாடித்துடிப்பை உணர்கிறீர்களோ, அதைக் கண்டறியவும். உங்களுடைய நாடித் துடிப்பை பதிவு
செய்து உங்கள் வகுப்புத் தோழர்களின் நாடித் துடிப்பையும் பதிவு செய்து அதை ஒப்பிடுக.
இரத்த தானம்
மருத்துவமனைககளில்
நோயாளிகளின் தேவைக்காக இரத்தம் தற்காலிகமாக இரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகின்றது.
18 வயதுக்கு மேல், ஆரோக்கியமான ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்யலாம். அதன் மூலம் அவசரகால
விபத்துக் காலங்களிலும், அறுவை சிகிச்சையின் போதும், இரத்தம் தேவைபடுபவர்களுக்கு உரிய
காலத்தில் இரத்தம் கொடுக்கப்படுகிறது. இரத்ததானம் இவர்களின் உயிர்காக்க உதவுகிறது.