மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
மதிப்பீடு
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. மனிதனின்
இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள்
அ. ஆக்சிஜன்
ஆ. சத்துப் பொருள்கள்
இ. ஹார்மோன்கள்
ஈ. இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
2. மனிதனின்
முதன்மையான சுவாச உறுப்பு
அ. இரைப்பை
ஆ. மண்ணீரல்
இ இதயம்
ஈநுரையீரல்கள்
விடை: ஈ) நுரையீரல்கள்
3. நமது
உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி
இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ. தசைச் சுருக்கம்
ஆ. சுவாசம்
இ. செரிமானம்
ஈ. கழிவு நீக்கம்
விடை: இ) செரிமானம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது
உறுப்பு மண்டலம் ஆகும்.
2. மனித மூளையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின்
பெயர் மண்டையோடு ஆகும்.
3. மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும்
முறைக்கு கழிவு
நீக்கம் என்று பெயர்.
4. மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு தோல்
ஆகும்.
5. நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற
வேதிப்பொருள்களுக்கு ஹார்மோன்கள் என்று பெயர்,
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின்
சரியாக எழுதவும்
1. இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.
விடை: தவறு - இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.
2. இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது..
விடை: தவறு - இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.
3. உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.
விடை: தவறு - உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.
4. இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச் சிறிய நுண்குழலுக்கு இரத்தக்
குழாய்கள் என்று பெயர்.
விடை: தவறு. இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள
மிகச்சிறிய நுண்குழலுக்குதந்துகி என்று
பெயர்
5. மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம்
ஆகும்.
விடை: தவறு. மூளை, தண்டுவடம் மற்றும் உணர்ச்சி உறுப்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.
IV. பொருத்துக
1. காது - இதயத் தசை
2. எலும்பு மண்டலம் - தட்டையான தசை
3. உதர விதானம் - ஒலி
4. இதயம் - நுண் காற்றுப்பைகள்
5. நுரையீரல்கள் – உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றது
விடைகள்
1. காது - ஒலி
2. எலும்பு மண்டலம் - உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றது
3. உதர விதானம் - தட்டையான தசை
4. இதயம் - இதயத் தசை
5. நுரையீரல்கள் – நுண் காற்றுப்பைகள்
V. கீழுள்ளவற்றை முறைபடுத்தி எழுதுக
1. இரைப்பை
→ பெருங்குடல் → உணவுக்
குழல் → தொண்டை → வாய்
→ சிறுகுடல்
→ மலக்குடல்
→ மலவாய்.
வாய்
வாய் – தொண்டை – உணவுக்குழல்
– இரைப்பை — சிறுகுடல் – பெருங்குடல் - மலக்குடல் – மலவாய்
2. சிறுநீர்ப்
புறவழி → சிறுநீர்
நாளம் → சிறுநீர்ப்பை →
சிறு நீரகம்.
சிறுநீரகம் – சிறுநீர் நாளம்
- சிறுநீர்ப்பை - சிறுநீர்ப் புறவழி
VI. ஒப்புமை தருக
1. தமனிகள் : இரத்தத்தை இதயத்திலியிருந்து
எடுத்து செல்பவை : சிரைகள் இரத்தத்தை
இதயத்திற்கு கொண்டு வருபவை
2. நுரையீரல்: சுவாசமண்டலம் ::. இதயம் : இரத்த ஓட்ட மண்டலம்
3. நொதிகள் : செரிமான சுரப்பிகள் :: ஹார்மோன்கள்
நாளமில்லாச் சுரப்பிகள்
VII. மிகக் குறுகிய விடையளி
1. எலும்பு
மண்டலம் என்றால் என்ன?
1. எலும்பு மண்டலமானது எலும்புகள்,
குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
2. தசைகள் இணைக்கப்படுவதற்கு
ஏற்ற பகுதியாக திகழ்கின்றது.
3. நடத்தல், ஓடுதல், மெல்லுதல்
போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது.
2. எபிகிளாட்டிஸ்
என்றால் என்ன?
மூச்சுக்குழலின் மேற்பகுதியிலுள்ள
குரல்வளை மூடி (எப்பி கிளாட்டிஸ்) என்ற அமைப்பு
சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கிறது.
3. மூவகையான
இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும்.
4. விளக்குக
– மூச்சுக்குழல்
1. பொதுவாக காற்றுக் குழாய்
என்றழைக்கப்படும் மூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது.
2. இது குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன்
இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது
5. செரிமான
மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.
1. சிக்கலான உணவுப் பொருட்களை
எளிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
2. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகித்தல்
போன்ற செயல்களைச் செய்கிறது.
6. கண்ணின்
முக்கிய பாகங்களின் பெயர்களை எழுதுக.
1. கண் மூன்று முக்கிய பகுதிகளைக்
கொண்டுள்ளது.
2. அவை கார்னியா, ஐரிஸ் மற்றும்
கண்மணி (பியூப்பில்)
7. முக்கியமான
ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.
1. கண்கள்
2. செவிகள்
3. மூக்கு
4. நாக்கு
5. தோல்
VII. குறுகிய விடையளி
1. விலா
எலும்புக்கூடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
1. விலா எலும்புக்கூடு 12 இணைகள்
கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
2. இது மென்மையான இதயம், நுரையீரல்
போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.
2. மனித
எலும்பு மண்டலத்தின் பணிகளை எழுதுக.
1. எலும்பு மண்டலம் உடலுக்கு
வடிவம் கொடுக்கிறது.
2. தசைகள் இணைக்கப்படுவதற்கு
ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
3. நடத்தல், ஓடுதல், மெல்லுதல்
போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
4. உடலில் உள்ள மிருதுவான உள்
உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
3. கட்டுபடாத
இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.
கட்டுப்பாட்டில் இயங்கும் தசை
1. இவை நமது உடலில் உள்ள எலும்புகளுடன் இணைந்து செயல்
படுவதால் எலும்புத் தசைகள் எனப்படும்
கட்டுப்படாத இயங்கு தசை
இவை மென் தசைகள் எனப்படும்.
நமது உடலில் உணவுக்குழல்,
சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும்
பிற உள்ளுறுப்புகளின் சுவர்களில்
காணப்படும்.
IX. விரிவான விடையளி
1. நாளமில்லா
சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.
2. கீழ்கண்ட
மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுது. கீழ்க்கண்ட வினாக்களுக்கு
விடையளி.
PPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP
அ. மேற்கண்ட
கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பாகம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
ஆ.சிறுநீர்
எங்கு சேமிக்கப்படுகிறது?
இ. மனித
உடலிலிருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?
ஈ. சிறுநீரகத்திலுள்ள
சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது?
X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி
1. உதரவிதானத்தில்
அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?
1. சுவாசத்தில் பங்கு கொள்ளும்
ஒரு முக்கியமான தசை உதரவிதானம்
ஆகும்.
2. உதரவிதானம் சுருங்கி விரியும்
தன்மையால் நுரையீரல் விரிவடைந்து ஒரு வெற்றிடம்
உருவாகிறது.
3. இதனால் காற்று உள்ளிழுக்கப்படுகிறது.
4. உதரவிதானம் ஏதேனும் காரணத்தால்
செயல்படாவிட்டால் சுவாசம் நடைபெற முடியாது.
5. இதனால் மனிதன் இறக்க நேரிடும்.
2. இதயத்தின்
இரு பாகங்கள் தடித்த தசைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. ஏன்?
1. இதயத்தின் வென்ட்ரிகுலார் சுவர்கள் ஆரிக்கிள் சுவர்களை
விட தடித்துக் காணப்படுகின்றன.
2. இடது வென்ட்ரிக்களின் சுவர்கள் வலது வென்ட்ரிக்கிள்
சுவர்களை விட தடித்துக் காணப்படும்.
3. ஏனெனில் இரத்தம் மகா தமனி
அல்லது பெருந்தமனிக்குள் செலுத்தப்பட அதிக
விசை தேவைப்படுகிறது.
4. எனவே வென்ட்ரிக்கிள் சுவர்கள்
தடித்துக் காணப்படுகிறது.
3. கோடைக்காலத்தில்
வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?
1. வியர்வை சுரத்தல் அல்லது வியர்த்தல் என்பது நம் உடலின்
வெப்ப
நிலையை ஒரே சீராக வைத்திருக்க
உதவும் ஒரு முக்கியச் செயலாகும்.
2. கோடை காலங்களில் வெப்பம் அதிகமாகும் போது நமது உடலில்
வியர்த்தல் ஏற்படுகிறது.
3. அந்த வியர்வை அதிக வெப்பத்தை எடுத்து ஆவியாகி உடலை
குளிர்விக்கிறது. இதனால் உடல் வெப்பநிலை உயராமல் சீராக்கப்படுகிறது.
4. உணவை
விழுங்கும் போது சில சமயங்களில் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுவது ஏன்?
காரணங்கள்
:
1. வேகமாக சாப்பிடுவதாலும் உணவுடன் அதிக அளவு காற்று
சேர்த்து விழுங்கப்படுவதாலும்.
2. அதிக கொழுப்பு சத்துள்ள மற்றும் வாசனைப் பொருட்கள்
உள்ள உணவு சேர்த்துக் கொள்ளப்படுவதாலும்.
3. அதிக அளவு கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது ஆல்கஹால்,
குடிக்கும் பொழுது இரைப்பை விரிவடைந்து, உதரவிதானத்தை உரசுவதால் விக்கல் மற்றும் இருமல்
ஏற்படுகிறது.