Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | எண்களை ஒப்பிடுக

எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - எண்களை ஒப்பிடுக | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  17.06.2022 12:40 am

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

எண்களை ஒப்பிடுக

1. ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள் 2. பெரிய மற்றும் சிறிய எண்கள் 3. ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை

எண்களை ஒப்பிடுக


ஒன்றாம் இடமதிப்பைப் பொறுத்து

ஒற்றை எண்களும் மற்றும் இரட்டை எண்களும் முவிலக்க எண்கள் வரை ராமுவிடம் 125 கடலைமிட்டாய்களும், கீதாவிடம் 200 கடலை மிட்டாய்களும் உள்ளன. இதில் யாரிடம் எவ்வளவு அதிகமிட்டாய்கள் உள்ளன,



பூச்சியம் (0) என்பது ஒன்றை எண்ணா? இரட்டை எண்ணா? என்ன உன்னால் கூறமுடியுமா? எப்படி சொல்ல முடியும்? ‘0’ என்பது "எதுவுமில்லை” . ஆனால் ஒரு எண்ணிற்குப் பிறகு பூச்சியம் போடப்பட்டால், அது இரட்டை எண் ஆகும், எ.கா 10, 300, 30,…..

ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்கள்



1, 3, 5, 7 மற்றும் 9 என்ற எண்களைக் கொண்டு முடியும் எண்கள் ஒற்றை எண்கள்.

0, 2, 4, 6 மற்றும் 8 என்ற எண்களைக் கொண்டு முடியும் எண்கள் இரட்டை எண்கள்.


செயல்பாடு 5

கீழே உள்ள பலூன்களில் ஒற்றை எண்களுக்கு மஞ்சள் வண்ணமும், இரட்டை எண்களுக்கு சிவப்பு வண்ணமும் இடுக.

எண் வரிசையில் ஒவ்வொரு ஒற்றை எண்ணிற்கு பிறகு இரட்டை எண் இருக்கும், அதைப்போல, இரட்டை எண்ணிற்கு பிறகு ஒற்றை எண் இருக்கும்.


இவற்றை முயல்க. 

899 - உடன் எந்த எண்ணை கூட்டினால் மிகப்பெரிய மூவிலக்க எண் கிடைக்கும்?


செயல்பாடு  6

இரட்டை எண்ணை வட்டமிட்டுக

8, 69, 7084, 99

112, 131, 156170186

226300, 303, 440478

542, 570, 575, 600610

931, 948952982, 999

ஒற்றை எண்ணை வட்டமிட்டுக

7, 26, 3361, 84

105, 116, 125, 142, 151

219, 232, 245, 357, 390

540, 555557603609

918, 919935953, 998


பெரிய மற்றும் சிறிய எண்கள் 


அமுதனிடம் 3 மிட்டாய்களும், அவனுடைய தங்கை மீனாட்சியிடம் 8 மிட்டாய்களும் உள்ளன.

யாரிடம் அதிக மிட்டாய்கள் உள்ளது?

எந்தவொரு எண்ணுக்கும் முன் வரும் எண் சிறிய எண். 

எந்தவொரு எண்ணுக்கும் பின் வரும் எண் பெரிய எண்.

எனவே, எண்கோட்டில் எண் 8-ற்கு முன் 3-வரும் அல்லது 3-ற்குப் பிறகு 8-ம் வருகிறது. 

இப்போது,

3 என்பது 8-ஐ விடச் சிறியது, அல்லது இதையே 

8 என்பது 3-ஐ விடப் பெரியது. 

ஆகவே, மீனாட்சியிடம் அதிக மிட்டாய்கள் உள்ளன.

சிந்தித்துப் பார்: எந்த ஒரு எண்ணுக்கும் தொடக்கத்தில் ‘0’ வந்தால் மதிப்பு கிடையாது. ஏன்?


குறியீடுகளின் பயன்பாடு



8 என்பது 3-ஐ விடப் பெரியது.

8 > 3 என எழுதலாம். 

27 என்பது 40 -ஐ விடச் சிறியது 

27 < 40 என எழுதலாம்

3 என்பது 8-ஐ விடச் சிறியது. 

3 < 8 எழுதலாம். 

91 என்பது 49-ஐ விடப் பெரியது 

91 > 49 என எழுதலாம்

1. வெவ்வேறு இலக்கங்களுடன் எண்களை ஒப்பிடுதல் 

எந்த எண் அதிக இலக்கங்களை உடையதோ, அந்த எண் பெரிய எண் ஆகும், எண் 115 மூன்று இலக்கங்களை உடையது மற்றும் 89 இரண்டு இலக்கங்களை உடையது. எனவே 115 என்பது 89 ஐவிடப்பெரியது ஆகவே 115 > 89 என எழுதலாம்.



2. எண்களை சம இலக்க எண்களுடன் ஒப்பிடுதல்.

• இலக்கங்களின் எண்ணிக்கை சமமாக இருந்தால், நூறாம் இடமதிப்பை பொறுத்து ஒப்பிட வேண்டும், ஒப்பிடும் போது நூறாம் இடமதிப்பில் உள்ள பெரிய எண்ணே , பெரிய எண் ஆகும்.

• 1ஐ விட 2 பெரியது 

எனவே, 250 என்பது 160 ஐ விடப் பெரியது.

250 > 160 என எழுதலாம். 

160 < 250 எனவும் எழுதலாம்.



3. நூறாம் இடமதிப்பில் உள்ள இலக்கங்கள் ஒரே மாதிரியாக இருந்தால், 10-ம் இடமதிப்பில் உள்ள இலக்கங்களை ஒப்பிட வேண்டும். எந்த எண்ணின் பத்தாம் இடமதிப்பு பெரிய இலக்கமாக இருக்கிறதோ, அந்த எண்ணே பெரிய எண் ஆகும். 

நூறாம் இடமதிப்பில் உள்ள இலக்கங்கள் சமம், பத்தாம் இடமதிப்பை பொறுத்து இலக்கங்களை ஒப்பிடவும், 4ஐ விட 5 பெரியது எனவே 151 என்ற எண் 143ஐ விடப் பெரியது. 151>143 என எழுதலாம்.



4. நூறாம் இடமதிப்பில் உள்ள இலக்கத்தை பத்தாம் இடமதிப்பில் உள்ள இலக்கமும் சமமாக இருந்தால், இந்த எண்களில் ஒன்றாம் இடமதிப்பில், எது பெரிய எண் பெற்றுள்ளதோ, அதையே பெரிய எண் என்போம்.

நூறாம் இடமதிப்பில் உள்ள இலக்கமும், பத்தாம் இடமதிப்பில் உள்ள இலக்கமும் ஒரே மதிப்புடையதாக இருக்கிறது. எனவே, ஒன்றாம் இடமதிப்பில் உள்ள இலக்கத்தை ஒப்பிடுவோம்,

141 மற்றும் 148 ஒப்பிடுதல்



8 என்பது 1ஜ விடப் பெரியது. 

ஆகையால், எண் 148 என்பது 141ஐ விடப் பெரியது. 

148 > 141 என எழுதலாம்.

141 < 148 எனவும் எழுதலாம். 

5. 536 மற்றும் 536 ஒப்பிடுதல்

அனைத்து இலக்கங்களிலும் ஒரே மதிப்புடைய எண்களை ஒப்பிடுக.

எனவே, 536 = 536



இவற்றை முயல்க 

கொடுக்கப்பட்ட பெட்டிகளில், பொருத்தமான <, > மற்றும் = குறியீடுகளைக் குறிக்கவும்.

103 __ 438  விடை: 103 < 438

250 __ 069  விடை: 250 > 069

408 __ 308  விடை: 408 > 308

710 __ 710  விடை: 710 = 710

614 __ 618  விடை: 614 < 618

719 __ 917  விடை: 719 < 917

மிகப் பெரிய மூவிலக்க எண் 999 

மிகச் சிறிய மூவிலக்க எண் 100


ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை


111, 112, 113, 114, 115 

சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்தி எழுதும் முறை “ஏறு வரிசை” எனப்படும். 

பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணிற்கு வரிசைப்படுத்தி எழுதும் முறை “இறங்கு வரிசை” எனப்படும். 


Example:

எடுத்துக்காட்டு: 

235, 230, 238 என்ற ஏறுவரிசையிலும், இறங்கு வரிசையிலும் வரிசைப்படுத்துவோம்.

ஏறுவரிசை

230 < 235 < 238

230, 235, 238

இறங்கு வரிசை

238 > 235 > 230

238, 235, 230

 

இவற்றை முயல்க 

245 மற்றும் 255-ற்கும் இடையே உள்ள இரட்டை எண்களை இறங்கு வரிசையில் எழுதுக,

விடை: 254, 252, 250, 248, 246

இவற்றை முயல்க 

1. கீழ்க்கண்ட எண்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக. 

அ. 55, 63, 40, 8

8 40 55 63

ஆ. 217, 201, 215, 219

201 215 217 219

இ. 50, 405, 109, 600

50 109 405 600 

ஈ. 785, 757, 718, 781

718 757 781 785

2. கீழ்க்கண்ட எண்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக 

அ. 212, 503, 369, 60 

503 369 212 60

ஆ. 051, 100, 810, 167

810 167 100 051

இ. 323, 303, 332, 33

332 323 303 33

ஈ. 205, 210, 290, 300

300 290 210 205

 


Tags : Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 1 Unit 2 : Numbers : Comparison of numbers Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள் : எண்களை ஒப்பிடுக - எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்