Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ மரபுரிமம் : நினைவில் கொள்க
   Posted On :  21.09.2022 08:10 pm

11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்

C++ மரபுரிமம் : நினைவில் கொள்க

ஏற்கெனவே இருக்கும் ஓர் இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவித்தல் மரபுரிமம் எனப்படும்.

நினைவில் கொள்க 


• ஏற்கெனவே இருக்கும் ஓர் இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவித்தல் மரபுரிமம் எனப்படும். 


• குறிமுறையின் மறுபயனாக்கம் மரபுரிமத்தின் முக்கிய அனுகூலமாகும். 


• தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை மரபுரிமையாக பெறுகிறது. தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்தி மிக்கவை. தருவிக்கப்பட்ட இனக்குழுவில் கூடுதலான பண்புக் கூறுகளையும், வழிமுறைகளையும் சேர்த்து அதன் செயலாற்றலை அதிகரிக்க முடியும். 


• மரபுரிமம் ஒருவழி மரபுரிமம், பல வழி மரபுரிமம், பலநிலை மரபுரிமம், படிநிலை மரபுரிமம், கலப்பு மரபுரிமம் என பல வகைப்படும். 


• ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து மட்டும் தருவிக்கப்படும் இனக்குழு ஒருவழி மரபுரிமம் எனப்படும். 


• ஓர் இனக்குழு பல அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது பலவழி மரபுரிமம் எனப்படும். 


• தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பலநிலை மரபுரிமம் ஆகும். மரபுரிமத்தின் மாறக்கூடிய தன்மை இதில் பிரதிபலிக்கிறது. 


• ஒன்றுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரே ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்டால், அது படிமுறை மரபுரிமம் எனப்படுகிறது. 


• ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மரபுரிமம் கலப்பு மரபுரிமம் எனப்படும். 


• பலவழி மரபுரிமத்தில், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் அடிப்படை இனக்குழுக்கள் அறிவிக்கப்பட்ட வரிசையில் கட்டமைக்கப்படுகின்றன. 


• ஒரு துணை இனக்குழு public, private அல்லது protected என்ற காண்பு நிலையுடன் தருவித்துக் கொள்ளலாம். 


• private என வகைப்படுத்தப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மரபு வழி பெற முடியாது. 


• ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும்போது, அடிப்படை இனக்குழுவின் public உறுப்புகள் public உறுப்புகளாகவும், protected உறுப்புகள் protected உறுப்புகளாகவும் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் இருக்கும். 


• ஓர் இனக்குழு private அணுகியல்புடன் தருவிக்கப்படும்போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் private உறுப்புகளாக கருதப்படும். 


• Protected காண்புநிலையில் ஓர் இனக்குழு தருவிக்கப்படும்போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் protected உறுப்புகளாக கருதப்படும்.


• அடிப்படை இனக்குழவின் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் மரபுவழியாக பெறப்படுவதில்லை. ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழவில் ஒரு பொருளை உருவாக்கும்போது, அடிப்படை இனக்குழுவின் ஆக்கிகள் தாமாகவே அழைக்கப்பட்டுவிடும். 


• அழிப்பிகள் முன்பின் வரிசையில் அழைக்கப்படும். - தருவிக்கப்பட்ட இனக்குழுவின் அழிப்பிகள் முதலில் இயக்கப்பட்டு, பின் அடிப்படை இனக்குழுவின் அழிப்பிகள் அழைக்கப்படும். 


• தருவிக்கப்பட்ட இனக்குழு பொருளின் அளவு=அனைத்து அடிப்படை இனக்குழவின் தரவு உறுப்புகளின் அளவு + அனைத்து தருவிக்கப்பட்ட இனக்குழுவின் தரவு உறுப்புகளின் அளவு 


• வரையெல்லை தீர்மானிப்பு செயற்குறி (::) உறுப்புகளின் மேலிடலை (overriding) தவிர்க்கும். 


• ‘this' சுட்டு நடப்பு பொருளின் உறுப்புகளை குறிக்க பயன்படுகிறது.


11th Computer Science : Chapter 16 : Inheritance : C++ Inheritance: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம் : C++ மரபுரிமம் : நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்