Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள்

மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள் | 6th Science : Term 2 Unit 2 : Electricity

   Posted On :  17.09.2023 06:01 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்

மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள்

மின்சாரக்கம்பியை வெட்டி பிரித்துப் பார்க்கும் பொழுது, உள்ளே உலோகத்தால் ஆன கம்பியும் அதன் மேல்பகுதியில் வேறு ஒரு மின்கடத்தப் பொருளால் ஆன உறையும் இருப்பதைக் காணலாம். காணலாம். ஏன் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என அறிவாயா?

மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள்

மின்சாரம் அனைத்துப் பொருட்களின் வழியேயும் பாயுமா?

 

மின்சாரக்கம்பியை வெட்டி பிரித்துப் பார்க்கும் பொழுது, உள்ளே உலோகத்தால் ஆன கம்பியும் அதன் மேல்பகுதியில் வேறு ஒரு மின்கடத்தப் பொருளால் ஆன உறையும் இருப்பதைக் காணலாம். காணலாம். ஏன் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என அறிவாயா?


 

மின் கடத்திகள்

கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே மின்னோட்டம் எனப்படும். அவ்வாறு எந்தெந்த பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை நாம் மின் கடத்திகள் என்கிறோம்.

எ.கா: உலோகங்களான தாமிரம், இரும்பு, அலுமினியம், மற்றும் மாசுபட்ட நீர், புவி, போன்றவை.


அரிதிற் கடத்திகள் (மின் கடத்தாப் பொருள்கள்)

எந்தெந்தப் பொருள்கள் தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்க வில்லையோ அவற்றை நாம் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருள்கள் என்கிறோம்.

எ.கா : பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.


செயல்பாடு 4: பட்டியலில் உள்ள பொருள்களை, A, B என்ற இருமுனைகளுக்கு இடையே இணைத்து, மின்விளக்கு ஒளிருமா அல்லது ஒளிராதா என்பதை எழுதுக.



ஒருவருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டால் (Eectric shock) அவரைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

I மின்அதிர்வு ஏற்படக் காரணமான மின் இணைப்பை அணைக்கவும்.

II. சாவியிலிருந்து இணைப்பைத் துண்டிக்கவும்.

III. மின்கடத்தாப் பொருட்களைக் கொண்டு அவரை மின்கம்பியின் தொடர்பிலிருந்து தள்ளவும்.

IV. அவருக்கு முதலுதவி தந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.




மேலும் அறிந்து கொள்வோம்

தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18, 1931) ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர்.

இவர் 1000 க்கும் மேற்பட்ட உபயோகமான பொருள்களை உருவாக்கியுள்ளார். அவற்றில்


பல வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை. மின் விளக்கைக் கண்டுபிடித்ததற்காக நாம் என்றும் அவரைப் போற்றுகிறோம்.


செயல்பாடு 5: தாமிரத் தகடுகள், துத்தநாகத் தகடுகள், இணைப்புக் கம்பி, சாவி, பீக்கர், கஞ்சி (சாதம் வடித்த நீர்) கொண்டு மின்னோட்டம் உற்பத்தி செய்க.

 

படத்தில் காட்டியவாறு தாமிரம், துத்தநாகத் தகடுகளை தொடர் இணைப்பில் இணைப்புக் கம்பி மூலம் இணைத்து, இரண்டு பீக்கரில் சாதம் வடித்த நீரை பாதி அளவு ஊற்றிதகடுகளைச் செருகுக. பின்னர் தாமிரத்தகட்டினை ஒளி உமிழும் விளக்கின் (LED) நேர்மின் முனையுடனும் துத்தநாகத் தகட்டினை ஒளி உமிழும் விளக்கின் (LED) எதிர்மின் முனையுடனும் இணைக்கவும்.என்ன நிகழ்கிறது என்பதைக் கவனி இந்தச் செயலில் சாதம் வடித்த நீருக்குப் பதிலாக தயிர், உருளைக்கிழங்கு, எலுமிச்சம் பழம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

Tags : Electricity | Term 2 Unit 2 | 6th Science மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 2 : Electricity : Conductors and Insulators Electricity | Term 2 Unit 2 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல் : மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள் - மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்