மரபியல் - இரு பண்புக் கலப்பு சோதனை | 10th Science : Chapter 18 : Heredity
இரு
பண்புக் கலப்பு சோதனை
இரண்டு ஜோடி எதிரிடைப்
பண்புகளை கொண்ட தாவர இனக் கலப்பு இருப்பண்பு கலப்பு எனப்படும். மெண்டல், விதையின்
நிறம் மற்றும் வடிவத்தைத் தன் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தார். (விதையின் நிறம் -
மஞ்சள் மற்றும் பச்சை, விதையின் வடிவம் - உருண்டை மற்றும்
சுருங்கியது.)
மெண்டல் உருண்டை வடிவம்
மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற
விதையுடைய தாவரத்துடன் கலப்பினம் செய்து கீழ்க்கண்ட முடிவுகளைக் கண்டறிந்தார்.
1. மெண்டல்,
முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை
தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு
செய்யும்போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத்
தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன.
சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1ல்
தோன்றவில்லை. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்கள்
ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும் சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு
பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.
2 முதல்
சந்ததியில் தோன்றிய இரு பண்புக் கலப்புயிரியான உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத்
தன் மகரந்தச் சேர்க்கைக்குட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவை
முறையே உருண்டை மஞ்சள் (9), உருண்டை பச்சை (3), சுருங்கிய மஞ்சள் (3), சுருங்கிய பச்சை (1) நிற விதைகளுடைய தாவரங்கள். எனவே இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.
மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில்
பண்புகளுக்கான காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டுகளில்
காணப்படுகின்றன. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த
சந்ததிக்குச் செல்லும்
இரு பண்புக் கலப்பின்
இறுதியில் மெண்டல் கீழ்க்காணும் முடிவுகளைக் கண்டறிந்தார்.
1. நான்கு வகைத் தாவரங்கள்
இரு பண்புக் கலப்பின் முடிவில்
F2
சந்ததியில் நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவற்றில் 9
தாவரங்கள் ஓங்கு பண்புடனும் 3 தாவரங்கள் ஓர் ஓங்கு பண்பு
மற்றும் ஒடுங்கு பண்புடனும் அடுத்த மூன்று தாவரங்கள் மற்றொரு ஓங்கு மற்றும்
ஒடுங்கு பண்புடனும், ஒரே ஒரு தாவரம் மட்டும் இரண்டு ஒடுங்கு
பண்புடனும் தோன்றின.
2. புதிய தாவரங்கள்
இரண்டு புதிய பண்புகளுடைய
தாவரங்கள் தோன்றின. அவை உருண்டை வடிவப் பச்சை நிற விதைகள், சுருங்கிய
மஞ்சள் நிற விதைகள், இவை இரண்டாம் சந்ததியில் தோன்றிய
தாவரங்கள் ஆகும்.