மரபியல் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 18 : Heredity
மரபியல் (அறிவியல்)
நினைவில்
கொள்க
* வேறுபாடு
மிகவும் நெருக்கமான விலங்குகளிடமும் காணப்படுகிறது.
* மெண்டல் தனது ஆய்விற்கு 7 பண்புகளைத்
தேர்ந்தெடுத்தார் அவை முறையே மலரின் நிறம், அமைவிடம்,
விதையின் வடிவம், நிறம், கனியின் நிறம் மற்றும் வடிவம், தண்டின் உயரம்.
* ஒவ்வொரு பட்டாணிச் செடியிலும்
இரண்டு காரணிகள் ஒரு பண்பு உருவாவதற்குக் காரணமாக உள்ளன.
* பெற்றோரிடமிருந்து பண்புகள்
கடத்தப்படும் நிகழ்வு பாரம்பரியம் என்று அழைக்கப்படும்
* ஒவ்வொரு மனித செல்லும் 23 ஜோடி
குரோமோசோம்களைக் கொண்டுள்ளது. இதில் 22 ஜோடி ஆட்டோசோம்கள்
மற்றும் ஒரு ஜோடி அல்லோசோம்கள் எனப்படும்.
* ஒரு குரோமோசோம் உள்ளடக்கிய
பகுதிகள் முதன்மைச் சுருக்கம், சென்ட்ரோமியர், இரண்டாம்
நிலைச் சுருக்கம், டீலோமியர் மற்றும் சாட்டிலைட்
* சென்ட்ரோமியரின் நிலையைப்
பொறுத்து குரோமோசோம்கள்,
டீலோ சென்ட்ரிக், அக்ரோசென்ட்ரிக், சப்- மெட்டா சென்ட்ரிக் மற்றும் மெட்டா சென்ட்ரிக் குரோமோசோம்கள் என
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* டி.என்.ஏ வின் ஒவ்வொரு
நியூக்ளியோடைடும் ஒரு டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை, ஒரு நைட்ரஜன் காரம் மற்றும் ஒரு
பாஸ்பேட் தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எப்பொழுதும் பியூரின் மற்றும்
பிரிமிடின்களுக்கு இடையே இணைவுறுதல் நிகழ்கிறது.
* தந்தை உருவாக்கும் விந்தணுவே, குழந்தையின்
பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு
எவ்விதப் பங்கும் இல்லை.
* ஒரு உயிரியின் மரபுப் பொருளில்
திடீரென ஏற்படும்,
பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றம் சடுதிமாற்றம் எனப்படும்.